பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) ஏப்ரல் 14, 1891இல் பிறந்து டிசம்பர் 6, 1956இல் மறைந்த இந்தியாவின் சட்ட நிபுணர், பொருளாதார அறிஞர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். அம்பேத்கர், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் Doctorate of Science (அறிவியலில் முனைவர் பட்டம்) பெற்ற முதல் இந்தியர் ஆவார். தங்கத் திட்டம் (gold standard), அரசின் அதிகாரத்தினை பரவலாக்கி அதற்கான செலவினங்களை எதிர்கொள்ளத் தேவையான நிதியினை உருவாக்கிக்கொள்ளுதல், வேளாண்மையில் பொருளாதார மேம்பாடு அடைய நில உடைமைகளை ஒருங்கிணைப்பது போன்றவற்றை அம்பேத்கர் ஆதரித்தார்.
அம்பேத்கரின், The Problem of Rupee: Its Origin and Solution (ரூபாயின் பிரச்சனை: அதன் தோற்றம் மற்றும் தீர்வு) என்ற அவரது புத்தகம், இந்திய ரூபாயின் முழு வரலாற்றையும் முதன் முதலில் பதிவு செய்தது. இந்தப் புத்தகம் அவரது ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும், பிரிட்டிஷ் கொள்கைகள் இந்தியர்களின் வறுமைக்கு முக்கியக் காரணமாக உள்ளது என்று இதில் அவர் பதிவிட்டுள்ளார். காலனித்துவ இந்தியாவில் நிதி அமைப்பு மற்றும் மத்திய-மாநில நிதி உறவுகளை அம்பேத்கர் பகுப்பாய்வு செய்தார். அரசாங்க நிதியை மையப்படுத்துதல் மற்றும் உற்பத்தி சாரா அரசாங்க செலவினங்களில் உள்ள சிக்கல்களை அவர் விளக்கினார்.
மத்திய அரசு வருவாயை வசூலித்த அதே வேளையில் மாகாணங்கள் செலவினங்களுக்கு மட்டுமே பொறுப்பாகும் ஒரு இரட்டை ஆட்சி முறையை அம்பேத்கர் விவாதித்தார். அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் அதன் செலவுகளை ஈடுகட்ட அதன் வருவாயை உயர்த்த வேண்டும் என்று அவர் வாதிட்டார். அம்பேத்கரின் பொதுச் செலவின நியதி என்று பிரபலமாக அறியப்படும் அவரது பொதுச் செலவினக் கொள்கைகள் மூன்று கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன அவை, நம்பிக்கை, ஞானம் மற்றும் பொருளாதாரம் போன்றவையாகும்.
எந்தவொரு நாடும் கருப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தினையும் ஒழிக்க விரும்பினால், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நாட்டின் பணத்தினை மதிப்பிழக்கச் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனையினை வழங்கினார். 1918இல் வெளியிடப்பட்ட அவரது ஆராய்ச்சிக் கட்டுரையான Small Holdings in India and Their Remedies (இந்தியாவில் சிறிய நிலஉடமை மற்றும் அவற்றின் தீர்வுகள்)இல், இந்தியாவில் வேளாண்மையில் குறைந்த உற்பத்தித்திறனுக்கான முக்கிய காரணம் சிறிய அளவிலான நில உடைமைகள் காணப்பட்டதனால் என்றார்.
நில உடைமைகளைப் பெரிய அலகுகளாக ஒருங்கிணைப்பதற்கான முக்கியத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தினார், நிலத்தினை அரசு அல்லது விவசாயிகளின் கூட்டுறவுகளால் நிர்வகிக்கப்படலாம் என்றார். பெரிய நில உடைமைகள் உற்பத்தியில் மிகவும் திறமையானதாக இருக்கும், உற்பத்தி செலவுகளைக் குறைக்கும் மற்றும் அதிக அளவிலான பொருளாதார நன்மைகளை அடைய முடியும் என்று குறிப்பிட்டார். 1942இல் தொழிற்சாலை வேலைசெய்யும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணியிலிருந்து 8 மணிநேரமாகக் குறைத்தல், வேலைவாய்ப்பு பரிமாற்றங்களை நிறுவுதல் மற்றும் தொழில்துறை புள்ளிவிவரச் சட்டத்தின் கீழ் புள்ளிவிவரத் தரவுகளைச் சேகரித்தல் உள்ளிட்ட பல தொழிலாளர் சீர்திருத்தங்களை அவர் அறிமுகப்படுத்தினார்.
சுரங்க, மகப்பேறு நன்மைச் சட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை இயற்ற அம்பேத்கர் வழி அமைத்துக்கொடுத்தார். 1926ஆம் ஆண்டு தொழிற்சங்கச் சட்டத்தைத் திருத்தி, தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரத்தையும், நாட்டில் ஊழியர் காப்பீட்டையும் அறிமுகப்படுத்தினார். அம்பேத்கரின் மகத்தான பயணமானது, அவரை ஒரு அறிஞராகவும், தொழில்முறை பொருளாதார நிபுணராகவும், பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு நிகழ்த்தியதும், அவருடைய நிலையான சமூக-பொருளாதார தத்துவத்திலிருந்து வெளிப்படுகிறது என்பது தெளிவாகிறது.
ஆதாரம்: www.jsblbank.com; www.m-economictimes-com.cdn; www.azimpremjiuniversity.edu; www-newindianexpress-com.cdn
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

