ஏப்ரல் 16 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஸி டேவிட் டோமர் (Economist Evsey David Domar Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 16 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஸி டேவிட் டோமர் – முனைவர் பு. அன்பழகன்

எவ்ஸி டேவிட் டோமர் (Evsey David Domar)  ஏப்ரல் 16 , 1914 இல் பிறந்து ஏப்ரல் 1, 1997இல் மறைந்த ரஷ்யஅமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். ஹரோட்டோமர் (Harrod-Domar) மாதிரியை உருவாக்கியதற்காக புகழ்மிக்கவராக அறியப்படுகின்றார். டோமர் பனிப்போரின் (cold war – இரண்டாம் உலகப் போருக்குப் பின் (1947-1991), அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இரு வல்லரசுகளுக்கு இடையே நிலவிய நேரடி இராணுவ மோதல் இல்லாத, ஆனால் கடுமையான சித்தாந்த, அரசியல், பொருளாதார மற்றும் இராணுவப் போட்டி நிறைந்த பதற்றமான காலமாகும்) போது சோவியத் நாட்டின் பொருளாதாரத்தில் நிபுணராகவும், கீன்ஸியன் பொருளாதாரக் கோட்பாட்டின் ஆரம்பக்கால ஆதரவாளராகவும் இருந்தார். பொருளாதார வளர்ச்சி, ஒப்பீட்டுப் பொருளாதாரம் மற்றும் பொருளாதார வரலாறு ஆகிய மூன்று முக்கிய துறைகளில் எவ்ஸி டோமர் பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளார். பொருளாதார வளர்ச்சி குறித்த அவரது ஆய்வுப் பணியானது 1944ஆம் ஆண்டு அரசாங்கக் கடனினைப் பற்றியதாக இருந்தது, மேலும் பொருளாதார வளர்ச்சியானது அரசாங்கக் கடனின் சுமையை எவ்வாறு குறைக்க முடியும் என்பதையும் இவரின் ஆராய்ச்சி விளக்கியது.

கீன்ஸின் வருமான நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் ஹாரோட் தனது கோட்பாட்டினைக் கட்டமைத்தார். எவ்ஸி டோமரும் சுயமாகப் பணியாற்றிய அவர் உருவாக்கிய மாதிரி, ஹாரோட்டோமர் மாதிரி என்று அழைக்கப்படுகிறது. வளர்ச்சியின் முக்கிய தீர்மானிப்பார்களாகச் சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை இந்த மாதிரி வலியுறுத்துகிறது. வளர்ச்சி உத்திகள் என்பது மாதிரியால் பரிந்துரைக்கப்பட்ட முடிவை அடைய ஒரு அரசாங்கம் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் ஆகும். பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் பின்வருவனவற்றைச் சார்ந்துள்ளது என்பதை மாதிரி குறிக்கிறது. தேசிய சேமிப்பின் நிலை (S), மூலதன முதலீட்டின் உற்பத்தித்திறன் (இது மூலதனவெளியீட்டு விகிதம் என்று அழைக்கப்படுகிறது).

அடிப்படை ஹாரோட்டோமர் மாதிரியானது,

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் = சேமிப்பு விகிதம் / மூலதன வெளியீட்டு விகிதம்

(Rate of Growth of GDP = Savings ratio / capital output ratio)

ஆதாரம்:  www.nytimes.com; www.britannica.com; www.tutor2u.net; www.irwincollier.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *