ஏப்ரல் 19 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் ஜே. ஹெக்மேன் (Economist James J.Heckman Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 19 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் ஜே. ஹெக்மேன் – முனைவர் பு. அன்பழகன்

ஜேம்ஸ் ஜே. ஹெக்மேன் (James J.Heckman) ஏப்ரல் 19, 1944இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். தனிநபர் அல்லது வீட்டுச் செயல்பாடுகளை பற்றிய பகுப்பாய்விற்குக் கோட்பாடுகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தியதற்காக டேனியல் மெக்ஃபேடனுடன் சேர்ந்து 2000ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார்.

இதில் மக்கள் எவ்வாறு எங்கு வேலைகளைத் தேர்வு செய்யவேண்டும், எங்கு வாழ வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், போன்றவற்றைப் புரிந்துகொள்வதற்கு வழிசெய்தது. தொழிலாளர் சந்தை திட்டங்களின் பற்றி நுணுக்கமான மதிப்பீடு செய்ததற்காக அவர் ஒரு முன்னணி ஆராய்ச்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார். ஹெக்மேன் Shadow wages, Market wages and Labour Supply என்ற கட்டுரையினை Econometrica என்ற இதழில் 1974இல் வெளியிட்டார், இது தொழிலாளர் பொருளாதாரத்தில் புகழ்மிக்க கட்டுரையாகக் கருதப்படுகிறது.

ஹெக்மேன் ஆராய்ச்சியானது வாழ்நிலைகளில் காணப்படும் சமத்துவமின்மையைக் குறைக்கும் மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரிக்கும் கொள்கையைப் பற்றியதாக இருக்கிறது. அவர் பல்துறைநோக்கான அணுகுமுறையினை மேற்கொண்டு பல்வேறுபட்ட தலைப்புகள், துறைகள், நாடுகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். தனிப்பட்டவர்களின் போக்கு, கால அளவு பகுப்பாய்வு, வேறுபட்ட தன்மை, சரிசெய்யப்பட்டதின் விளைவுகள், சமூக திட்டங்களை மதிப்பிடுவது, தனிப்பட்டவர்களின் முடிவுகளைப் புரிந்துகொள்வதற்கும் ஹெக்மேன் புதிய பொருளாதார அளவீட்டு முறைகளை உருவாக்கினார்.

ஹெக்மேன் வளைகோடு

குழந்தைகளுக்கு ஆரம்பக்காலங்களில் முதலீடு செய்வது அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அதிக அளவிற்குக் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்ட முடிகிறது என்றார். ஹெக்மேன் வளைகோடு, தொடக்கா காலத்தில் திறன் மேம்பாடு அளித்தலால் மிகப்பெரிய பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் உருவாகின்றன என்பதை விளக்குகிறது. குழந்தைகளுக்கு தொடக்கத்தில் செலவிடப்படும் முதலீட்டினை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் வாழ்நாள் முழுவதும் வெற்றியினை அடையவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், சமூக செலவினை குறைக்கவும் வழிவகுக்கிறது எனக் குறிப்பிடப்படுகிறது.

மனிதர்கள் தங்கள் எதிர்கொள்ளும் சிக்கலைச் சரிசெய்வதற்கு ஹெக்மேன் ஒரு தனித்துவமான பொருளாதார அளவீட்டு அணுகுமுறையை உருவாக்கினார், இம்முறையினை பொருளாதார வல்லுநர்கள் Heckman correction (ஹெக்மேன் திருத்தம்) அல்லது Heckit method (ஹெக்கிட் முறை) என்று அழைக்கின்றனர். 1985ஆம் ஆண்டில், வேலைக்கும் ஊதியத்திற்கும் இடையிலான தொடர்பை ஆய்வுசெய்யத் தனித்துவ முறையை ஹெக்மேன் பயன்படுத்தினார், ஹெக்மேன் அமெரிக்க ஆண்களிடையே முன்னர் காணப்பட்ட தொழிலாளர் அளிப்பானதை விட அதிக தொழிலாளர் அளிப்பு நெகிழ்ச்சித்தன்மையைக் கண்டறிந்தார்.

ஊதியத்தில் ஏற்பட்ட அதிகரிப்பானது தொழிலாளர்களின் வேலை நேரங்களை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாமல், ஒப்பீட்டளவில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மீண்டும் தொழிலாளர் சந்தையில் நுழைந்து வேலைகளைப் பெறுவதற்கும் வழிவகுத்தது. அமெரிக்கத் தொழிலாளர் சந்தைகளில் இனப் பாகுபாடு பிரச்சினையிலும் ஹெக்மேன் கவனம் செலுத்தியுள்ளார். 1990களின் தொழிலாளர் சந்தைகளில் கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையிலான வருவாயில் உள்ள பெரும்பாலான வேறுபாடுகள், அவர்களின் திறன்களில் உள்ள வேறுபாடுகளால் ஏற்படுகின்றன, ஆனால் தொழிலாளர் சந்தையில் உள்ள பாகுபாட்டினால் அல்ல என்று விளக்கினார்.

ஆதாரம்: www.heckmanequation.org/about-professor-heckman; www.heckmanequation.org; www.econlib.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *