பால் மில்கிரோம் (Paul Milgrom) ஏப்ரல் 20, 1948இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார், இவர் ராபர்ட் வில்சனுடன் சேர்ந்து, ஏலக் கோட்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காகவும், பாரம்பரிய வகை ஏலங்களில் சரியாக விற்கப்படாத பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய ஏல வடிவங்கள் அல்லது செயல்பாட்டு விதிகளைக் கண்டுபிடித்ததற்காகவும் 2020ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1990களில் இருந்து, வில்சன் மற்றும் மில்கிரோமின் தத்துவார்த்த மற்றும் நடைமுறைப் பணிகள் ஏல வாங்குபவர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் லாபம் ஈட்டித் தந்துள்ளன, இவ் ஏல முறையினால் அரசாங்கங்கள் ரேடியோ மற்றும் பிராட்பேண்ட் அதிர்வெண்கள், மின்சாரம், விமான நிலைய தரையிறங்கும் இடங்கள் மற்றும் இயற்கை வளங்களை அதிக அளவிலான மற்றும் சிக்கலான பொதுச் சொத்துக்களை ஏலத்திற்கு ஒதுக்க உதவியது – இது அவற்றின் திறனான பயன்பாட்டை உறுதி செய்வதற்கும் சமூகத்திற்கு அவற்றின் நன்மைகளை அதிகரிப்பதற்கும் உதவியது.
ஏலங்கள் என்பது நுண்கலை முதல் மீன்பிடிப்பு வரை மதிப்புமிக்க பொருட்களை விற்பனை செய்வதற்கான ஒரு பண்டைய வழிமுறையாகும். விற்கப்படும் பொருட்களின் மதிப்புகள் பொதுவான மற்றும் தனிப்பட்ட கூறுகளைக் கொண்ட ஏலங்களின் மிகவும் சிக்கலான மற்றும் யதார்த்தமான நிலையில் பகுத்துணர்வு கொண்ட ஏலதாரர்களின் போக்கு பற்றிய தெளிவினை உருவாக்குவதே மில்கிரோமின் தத்துவார்த்த முன்னேற்றமாகும்.
ஆதாரம்: www.economics.stanford.edu; www.britannica.com; www.nobelprize.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

