நிக்கோலஸ் ஹெர்பர்ட் ஸ்டெர்ன், பிரெண்ட்ஃபோர்டின் பரோன் ஸ்டெர்ன் (Nicholas Herbert Stern, Baron Stren of Brentford) ஏப்ரல் 22, 1946இல் பிறந்த பிரித்தானிய நாட்டினைச் சார்ந்த சுற்றுப்புற சூழலியல் பொருளாதார அறிஞர், வங்கியாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். பொருளாதார பேராசிரியராகவும், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கிரந்தம் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் இந்திய ஆய்வகத்தின் தலைவராகவும் உள்ளார்.
அவர் 1994-1999வரை ஐரோப்பிய மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணராகவும், 2000-2003வரை உலக வங்கியில் தலைமைப் பொருளாதார நிபுணராகவும் மூத்த துணைத் தலைவராகவும் இருந்தார். How Lives Change: Palanpur, India and Development Economics என்ற புத்தகத்தை Himanshu and Peter Lanjouw ஆகியோருடன் சேர்ந்து வெளியிட்டார்.
பொதுக் கொள்கையின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப் பொருளாதாரத்திற்கு அவர் பெரும் பங்களிப்பினை செய்துள்ளார். 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்தின் பொருளாதாரம் குறித்த Stern Reviewயினை உருவாக்குவதற்குத் தலைமை ஏற்று வழிநடத்தினார். காலநிலை மாற்றத்தின் காரணங்கள் மற்றும் சாத்தியமான விளைவுகள் பற்றிய காலநிலை மாற்றத்திற்கான இவ் அறிக்கை உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பட்டவர்களுக்கும் பயனுடையதாக இருக்கிறது.
காலநிலை மாற்றம் ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் அவசர மற்றும் கூர்மையான குறைப்புக்கள் இல்லாவிட்டால், 2 சென்டிகிரேட் டிகிரிக்கு மேல் புவி வெப்பமடைதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பெரும் ஆபத்துகளை நாம் எதிர்கொள்வோம், கடல் மட்ட உயர்வு மற்றும் தீவிர வானிலை முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன என்று குறிப்பிடுகிறார்.
ஆதாரம்: www.lse.ac.uk ; www.thebritishacademy.ac.uk ; www.urbantransitions.global
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

