எட்வின் ராபர்ட் ஆண்டர்சன் செலிக்மேன் (Edwin Robert Anderson Seligman) ஏப்ரல் 25, 1861இல் பிறந்து ஜூலை 8, 1939இல் மறைந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், மற்றும் வரிவிதிப்பு நிபுணர் ஆவார். கொலாம்பிய பல்கலைக் கழகத்தில், அரசியல்-பொருளாதார பேராசிரியராக (1891-1931) பணியாற்றினார்.
சமூக அறிவியல் கலைக்களஞ்சியம் தயாரிப்பிற்கு முதன்மை ஆசிரியராக தன்னுடைய ஓய்விற்குப்பின் பணியாற்றினார். அமெரிக்கப் பொருளாதார கழகத்தின் நிறுவனருள் ஒருவராகவும், அதன் தலைவராகவும் (1902-1904) செயல்பட்டார். மேலும் தேசிய வரி கழகத்தின் தலைவராகவும் (1913-1915) பணியாற்றினார்
பொது நிதியத்தில் நிபுணத்துவம் பெற்ற செலிக்மேன் வரிவிதிப்பு குறித்த அவரது வழங்கல் முக்கியமானதாகும். அவரது கோட்பாடுகள் அரசாங்கக் கொள்கையை, குறிப்பாக வளர்விகித வருமான வரி தொடர்பானவற்றைக் குறித்ததாகும். வரிவிதிப்பு கோட்பாட்டிற்கான அவரது முக்கிய பங்களிப்புகளில் வரிவிதிப்பு இறுதிச் சுமை பற்றிய விவாதங்கள், வளர்விகித வரிவிதிப்பு பகுப்பாய்வு மற்றும் வரி தாங்கள் பற்றிய ஆய்வுகள் ஆகியவை அடங்கும்.
The Shifting and Incidence of taxation (1892), Progressive taxation in Theory and Practice (1894) போன்றவை அவரின் மிகவும் புகழ்பெற்ற வெளியீடுகளாகும். 1931ஆம் ஆண்டில், கியூபாவின் வரிச் சட்டங்கள் பற்றிய அவருடைய ஆய்வானது மிகவும் புகழ்பெற்றதாகும். செலிக்மேன் பொருளாதார சிந்தனையின் வரலாற்றில் ஒரு தெளிவான அறிவாற்றல் பெற்றவராகவும் இருந்தார், மேலும் அவரது On Some Neglected British Economists (1903) என்ற கட்டுரை சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.
ஆதாரம்: www.britannica.com; www.emerald.com ; www.encyclopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

