ஸ்வி போடி (Zvi Bodie) ஏப்ரல் 27, 1943இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார், அவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். ஸ்வி போடி ஒரு சுயாதீன கல்வியாளர் (Independent educator), எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் நிதி மற்றும் நிதி அமைப்பு குறித்த ஆலோசகரும் ஆவார்.
முன்னணி தொழில்முறை பத்திரிகைகளில் ஓய்வூதிய நிதி மற்றும் முதலீட்டு உத்தி குறித்து அவர் அதிக அளவிலான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், மேலும் வாழ்க்கைச் சுழற்சி சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு நவீன நிதிக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதில் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் திட்டங்களில் சேமிப்புப் பத்திரங்கள், கருவூல பணவீக்கம்-பாதுகாப்புடனான (Treasury Inflation-Protected Securities) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு-தொடர்புடைய வருடாந்திரங்களைப் பயன்படுத்தி பணவீக்கத்திற்கு எதிராக ஹெட்ஜ் செய்யும் (இடர் மேலாண்மை) ஆலோசனையை போடி பிரபலப்படுத்தியுள்ளார். பங்குச் சந்தையின் செயல்திறனைப் பொருட்படுத்தாமல், குறைந்தபட்ச வாழ்நாள் ஓய்வூதிய வருமானத்தை உத்தரவாதம் செய்யும் உத்திகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற ராபர்ட் சி. மெர்டனுடன் சேர்ந்து, நிதி அமைப்பு வடிவமைப்பைப் பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு கட்டமைப்பை அவர் உருவாக்கியுள்ளார், இதை அவர்கள் செயல்பாட்டு மற்றும் கட்டமைப்பு நிதி என்று அழைக்கிறார்கள். இந்த கட்டமைப்பு புதிய தொன்மைவாத, பரிவர்த்தனை செலவு மற்றும் நடத்தை சார்ந்த நிதி கோட்பாடுகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் ஒரு நிதி அமைப்பு ஆறு அடிப்படை செயல்பாடுகளைச் செய்கிறது, அவை காலப்போக்கில் எல்லைகளுக்கு அப்பால் மிகத் தாமதமாக மாறும் என்று குறிப்பிடுகிறார். இந்த செயல்பாடுகளைச் செய்யும் நிறுவனங்கள் மிக விரைவாக மாறுகின்றன மற்றும் எல்லைகளுக்கு அப்பால் வேறுபடுகின்றன என்று விளக்கினார்.
ஆதாரம்: www.nber.org ; www.nber.org ; www.zvibodie.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

