ரிச்சர்ட் எட்வர்ட் வாக்னர் (Richard Edward Wagner) ஏப்ரல் 28, 1941இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தகைசால் பேராசிரியராக பணியாற்றுகிறார். பொது நிதி, பொதுத் தேர்வு மற்றும் பொருளாதார சிக்கல்கள் ஆகிய துறைகளில் அவரது முதன்மையான படைப்புகள் வெளிவந்துள்ளது.
வாக்னரின் ஆய்வுக்கான முக்கிய களமாகப் பேரியல் பொருளாதார நிகழ்வுகளுக்கு பதிலாக, அமைப்புகள் கோட்பாடு மற்றும் பொருளாதாரத்திற்கு இடையிலான உறவையும் மையமாகக் கொண்டுள்ளது.
வாக்னர் தனது கோட்பாட்டைத் தேர்வுகள் மற்றும் தொடர்புகளுக்கு இடையிலான வேறுபாட்டின் அடிப்படையில் உருவாக்கினார். அரசாங்க தலையீட்டிற்கு எதிரான வாக்னரின் வாதம் அடிப்படையில் அறிவியல் சார்ந்தது ஆகும்.
ஆடம் ஸ்மித் தொடங்கி, பாரம்பரிய பொருளாதார வல்லுநர்கள் வரை, மனித நடவடிக்கை சமூகத்தின் நல்ல ஒழுங்கிற்கு எவ்வாறு பங்களித்தது அல்லது குறைத்தது என்பதில் ஆர்வமாக இருந்தனர் என்று வாக்னர் குறிப்பிடுகிறார். அவர் இதை புதிய தொன்மைப் பொருளாதாரத்துடன் வேறுபடுத்தி, மேம்படுத்தப்பட்ட புதிய தொன்மை மதிப்பு கோட்பாடு என்று கூறுகிறார்.
மறுபரிசீலனை பொதுத் தேர்வில் (Rethinking Public Choice), பொதுத் தேர்வு (Public Choice) என்பது புதிய தொன்மை பொருளாதாரத்தின் வழிமுறையினைச் சார்ந்தது, அரசியல் செயல்முறைகள் மற்றும் நிறுவனங்களைப் பகுப்பாய்வு செய்வதில் பகுத்தறிவு நடவடிக்கை மற்றும் பொருளாதார சமநிலையை வலியுறுத்துகிறது.
இந்த அணுகுமுறை பொதுத் தேர்வை ஒரு additive political economy (சேர்க்கை அரசியல் பொருளாதாரமாக) மாற்றியது என்று வாக்னர் வாதிடுகிறார், இது அரசியல் விளைவுகளைத் தனிப்பட்ட முடிவுகளின் தொகுப்புகளாகக் கருதும் ஒரு குறைப்புவாதக் கண்ணோட்டமாகும்.
ஆதாரம்: www.csgs.kcl.ac.uk; www.independent.org; www.entangledpoliticaleconomy.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

