பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்திய அறிவியல் புனைக்கதை ஆய்வுக் கழகம் (Indian Association for science Fiction studies) சர்வதேச அறிவியல் புனைக்கதையாளர் கூட்டமைப்புப்போடு இணைந்து 21 வது அகில இந்திய மற்றும் ஆறாவது சர்வதேச அறிவியல் புனைக்கதையாளர் இணைய மாநாட்டை வரும் ஜீலை-17 முதல் 20 வரை நடத்துகிறது.

இந்த மாநாட்டில் அயல் புனைக்கதை எழுத்தாளர்களான டாக்டர் வெண்டி வேன் கேம்ப், டிஸ்கர் சாரக் உட்பட பலர் உரையாற்ற உள்ளனர். சமீபத்தில் அறிவியல் புனைக்கதை ஆய்வுகளுக்கான இந்திய சங்கத்தின்ஆயுட்கால உறுப்பினராக அங்கீகரிக்கபட்ட தமிழ், அறிவியல், அறிவியல் புனைக்கதை எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் இந்த மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்

அறிஞர் ஜெயந்த் நர்லிகர் கலந்து கொள்ளும் இந்திய புனைக்கதையாளர் அமர்வில் தமிழ் புனைக்கதை இலக்கியம் பற்றி ஆயிஷா இரா நடராசன் உரையாற்றுவார். இந்த அமர்வு 19:07:22 செவ்வாய் அன்று மாலை நடைபெற உள்ளது , இதில் இந்தி அறிவியல் புனைக்கதைகள் பற்றி எழுத்தாளர் அரவந்த மிஸ்ராவும் பஞ்சாமி மொழி அறிவியல் புனைவுகள் குறித்து டாக்டர் டி.பி. சிங்கும், அசாமி மொழி அறிவியல் இலக்கியம் பற்றி டாக்டர் டி,சி கோஸ்வாமியும் பேச உள்ளனர். கன்னட அறிவியல் புனைவு உலகை திருமதி சவிதா ஸ்ரீனிவாஸ் அறிமுகம் செய்கிறார். மராத்தி மொழி அறிவியல் புனைக்கதைகள் பற்றி டாக்டர் மகேஸ்வரி உரையாற்றுவார்.

அறிவியல் அறிஞரும் இந்திய அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க வருமாகிய ஜெயந்த நர்லிகரின் பிறந்த தினம் இந்திய அறிவியல் புனைவு இலக்கிய நாளாக இந்த ஆண்டு முதல் கொண்டாடப்படும். நிகழ்வுக்கு தலைமை ஏற்று சர்வதேச அறிவியல் புனைக்கதை மாநாட்டில் ஜெயந்த் நர்லிகர் உரை நிகழ்த்த உள்ளார்.

சர்வதேச அறிவியல் இலக்கிய மாநாட்டில் முதல் முறையாக தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் ஆயிஷா இரா நடராசன் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல், அறிவியல் புனைக்கதை நூல்களின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அறிவியல் புனைக்கதை ஆய்வு மன்றத்தின் (Indian Association For science Fiction Studies) அமைப்பு ஸ்தாபகர் தலைவர் டாக்டர் கே.எஸ்.புருஷோத்தமன் மற்றும் செயலாளர் டாக்டர் ஸ்ரீநாராஹரி உள்ளிட்டோர் ஆயிஷா நடராசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சென்ற மாதம் புது தில்லியில் நடைப்பெற்ற சாகித்ய அகாடமியின் இந்திய விடுதலையின் பவழ விழா ஆண்டு இலக்கியத் திருவிழாவில் அறிவியல் புனைக்கதை அமர்வில் கலந்து கொண்டு ஆயிஷா இரா நடராசன் உரையாற்றினார்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *