நாரை
சென்னை 28 படத்தில் வரும் வாலி அவர்களின் வரிகள்
“காதல் வரம்
நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல
நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்
கண்மணி”
ஆம் நாரைகளும் கொக்குகளைப் போல் நீர்நிலைகளில், விவசாய நிலங்களில் ஒற்றைக் காலில் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மனிதர்களுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பறவைகள் எதற்காக ஒற்றைக் காலில் நிற்கின்றன என்று கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன். அந்த நாரை வகையில் ஒன்று தான் Indian Pond-heron இதன் அறிவியல் பெயர் Ardeola grayii
ஜான் எட்வர்டு கிரே, எஃப்ஆர்எஸ் (John Edward Gray, FRS) இங்கிலாந்தைச் சார்ந்த விலங்கியல் நிபுணர். கிரே வால்சலில் பிறந்தார். ஆனால் இவரது குடும்பம் இலண்டனுக்குக் குடிபெயர்ந்தது. இலண்டனில் கிரே மருத்துவம் பயின்றார். பிரிட்டிஷ் தாவரங்களின் இயற்கை ஏற்பாடு (1821) எழுதுவதில் இவர் தனது தந்தைக்கு உதவினார். இலண்டனின் லின்னேயன் சமூகத்தினால் நிராகரிக்கப்பட்ட பின்னர், கிரே தனது ஆர்வத்தை தாவரவியலிலிருந்து விலங்கியல் துறைக்கு மாற்றினார். ஆங்கிலேயர்களுக்காகப் பூச்சிகளைச் சேகரிக்க 15 வயதில் முன்வந்து தனது விலங்கியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஜான் ஜார்ஜ் சில்ட்ரன் ஊர்வன சேகரிப்பைப் பட்டியலிட உதவுவதற்காக கிரே 1824ல் அதிகாரப்பூர்வமாக விலங்கியல் துறையில் சேர்ந்தார். தனது ஆரம்ப கட்டுரைகளில் சிலவற்றில், மெல்லுடலி (1824), பட்டாம்பூச்சிகள் (1824), முட்தோலி (1825), ஊர்வன (1825) மற்றும் பாலூட்டிகள் (1825) ஆகியவற்றின் வகைப்பாடுகளுக்காக வில்லியம் ஷார்ப் மேக்லேயின் குயினேரியன் முறையை கிரே ஏற்றுக்கொண்டார்.
கிரே 1826ல் மரியா எம்மா சுமித்தை மணந்தார். சுமித், கிரேயின் ஆய்வுப் பணிகளுக்கு, குறிப்பாக தமது வரைபடங்களுடன் உதவினார்.
கிரே 1840 முதல் 1874 கிறிஸ்துமஸ் வரை இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் விலங்கியல் பராமரிப்பாளராக இருந்தார். 1,000க்கும் மேற்பட்ட ஆவணங்களை வெளியிட்டார். இதில் விலங்கு குழுக்களின் விரிவான விளக்கங்கள் மற்றும் புதிய உயிரினங்களின் விளக்கங்களும் அடங்கும். இவர் விலங்கியல் சேகரிப்புகளை மேம்படுத்தி அவற்றை உலகின் மிகச் சிறந்தவையாக மாற்றினார். இவர் பல கடற்பாலூட்டிகளுக்கு சிற்றினம், பேரினம், துணைக்குடும்பம் மற்றும் குடும்பங்களுக்குப் பெயரிட்டுள்ளார்.
கிரே ஒரு திறமையான நீர்வள கலைஞராக இருந்தார். மேலும் இவரது இயற்கை ஓவியங்கள் கிளார்க்கின் பயணங்களைப் பற்றிய விவரத்தை விளக்குகின்றன. பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பணியாற்றிய 50 ஆண்டுகளில், கிரே கிட்டத்தட்ட 500 ஆவணங்களை எழுதினார். இதில் அறிவியலுக்கு புதிய இனங்கள் பற்றிய பல விளக்கங்களும் அடங்கும். உலகெங்கிலும் உள்ள சேகரிப்பாளர்களால் இவை அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டன. மேலும் விலங்கியல் துறையின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியது. இருப்பினும் கிரே வழக்கமாக புதிய பறவைகளின் விளக்கங்களைத் தனது தம்பி மற்றும் சகா ஜார்ஜிடம் விட்டுவிட்டார்.
சாம்பல் நத்தையினவியல், மெல்லுடலிகளின் ஆய்விலும் தீவிரமாக இருந்தார். இவர் பூச்சியியல் வல்லுநர் எலிசா ஃபன்னி ஸ்டேவ்லியின் கூட்டாளியாக இருந்தார், இலண்டனின் லின்னேயன் மற்றும் விலங்கியல் சங்கங்களுக்கு இவர் தயாரித்த ஆராய்ச்சி மற்றும் வாசிப்பு ஆவணங்களை ஆதரித்தார்.
விலங்கியல் வரலாற்றில் மிகச்சிறந்த வகைபிரித்தல் வல்லுநர்களில் ஒருவர். அவர் 300க்கும் மேற்பட்ட இனங்கள் மற்றும் ஊர்வனவற்றின் கிளையினங்களை விவரித்தார், இந்த குறிப்பிட்ட நாரையை தவிர ஒன்பது உயிரினங்களுக்கு இவருடைய பெயரை வைத்துள்ளனர்.
ஆதலால் கர்னல் டபிள்யூ எச் சைக்ஸ் அவர்கள் முதன்முதலில் 1832 இல் இந்த நாரையை விவரித்து John Edward Gray என்பவரின் பெயரை வைத்தார்.
நீர் நிலைகளிலும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் இரைதேடும் இந்த நாரையை உற்று நோக்கினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். காரணம் அதன் வாழ்விடத்துடன் ஒன்றிய நிறங்களில் இது இருப்பதால் எளிதில் கண்டறிய இயலாது. நாரையின் வெண்மையான இறக்கைகளை உள்ளடக்கிய முதுகுப்பகுதி பழுப்பு நிறத்தில் மூடி இருக்கும், பறக்கும் போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம். இப்பறவையின் கழுத்து குறுகிக் காணப்படும்.
இந்த நாரை இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், ஈரான், மாலத்தீவு, மியான்மர், நேபாளம், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. அனைத்து விதமான நீர்நிலைகளிலும் காணப்படும் இவை மீன், தவளை, நண்டு, பூச்சிகள் போன்ற உயிரினங்கள் கரைக்கு வரும் வரை அசையாமல் நீண்ட நேரம் காத்திருந்து அருகில் வந்த அடுத்த நொடி வாய்ப்பை பயன்படுத்திப் பிடித்து விழுங்கிவிடும்.
இந்த நாரையை கிராமப்புறங்களில் மடையான், குளக்கொக்கு, குருட்டுக்கொக்கு என்றும் செல்லமாக பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். ஆனால் இவைகளை நாரைகள் என்பதே சரியானதாகும்.
நாரைகள் தங்களது இரைக்காக நீண்டநேரம் காத்திருப்பதால் கால்களிருந்து இதயத்திற்கு ரத்தத்தைச் சுத்திகரிக்கத் திருப்பி எடுத்துச் செல்லும் ரத்த நாள சிறையானது, இதயத்திலிருந்து சுத்திகரித்த ரத்தத்தை எடுத்து கால்களுக்கு வரும் தமனி நாளத்துடன் தொடர்பில் இருப்பதால் குளிர்ந்த சிறை நரம்புகளும் வெப்பமாக்குகின்றன. இதனால் பறவைகளின் மொத்த உடம்பின் வெப்பமும் அதிகரிக்கிறது. இதனைத் தடுக்கவே ஒற்றைக்காலில் நிற்கும் தகவமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த தகவமைப்பின் மூலம் 50 சதவிகிதம் வெப்பம் உடம்பில் அதிகரிப்பதைத் தடுக்கிறது .
நமக்கு ஏதாவது கண்டிப்பாக வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கும் போது “வேணும்னு ஒத்த கால்ல நிக்கிறாங்க” என்று சொல்வதை கேட்டிருப்போம். வெப்ப இழப்பை நிர்வகிக்கப் பறவைகளுக்கான தகவமைப்பை நாம் அடம்பிடிப்பதுடன் ஒப்பிடுகிறோம். அடம் பிடிப்பதும் ஒரு வித தகவமைப்பாகக் கருதினாலும், இனிமேல் பறவைகளைப் போல தேவையான பொருட்களுக்கு சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிப்போம்.
தரவுகள்
https://www.birdnote.org/listen/shows/why-birds-stand-one-leg
https://www.heronconservation.org/herons-of-the-world/list-of-herons/indian-pond-heron/
முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: [email protected]
முந்தைய தொடரை வாசிக்க:
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.