பருவ கால மாற்றம் பயமுறுத்தலா? (Are seasonal changes scary?) - Rammanohar அறிவியல் environmental article - https://bookday.in/

பருவ கால மாற்றம் பயமுறுத்தலா?

பருவ கால மாற்றம் பயமுறுத்தலா?

– முனைவர். பா. ராம் மனோகர்

மழைக் காலம், ஆண்டு தோறும் வரும்!உலக உயிரினங்கள் உய்வதற்கு, நீர் தரும்! ஏரி, குளம், ஓடை நிரம்பும், வறட்சி மறையும், வயல்களில் நெல் வளர்ச்சி பெறும்! நீர் வாழ் உயிரினங்கள் குதூகலம் கொள்ளும்! மொத்தத்தில் முன்னொரு காலத்தில், வாழ்வில் மழை தந்த மகிழ்ச்சி, இன்று மாறி, மழை பெய்தாலே வெள்ளம் வருது!தண்ணீர் தேங்கிவிட்டது!பேரிடர் மீட்பு படை வருகிறது!மக்கள் முகாம்களில் தங்க வைப்பு!நிவாரணம் உணவாக, பணமாக, பொருளாக, என்று அரசு திட்டங்கள் தொடர்ந்து நடை பெறுகிறது. இது பற்றி நாம் சற்று சிந்தித்து பார்க்க இயலுமா? அதற்கு நமக்கு நேரம் இருக்கா!!? நம் வாழ்க்கை முறை மாற்றம் அனுமதி தருகிறதா!!?…….. எனினும் நிச்சயம் நாம் கொஞ்சம் சிந்தித்து பார்ப்போம், நாம் செய்து வருகிற செயல்பாடுகளுக்கு, இயற்கை சற்று கொஞ்சம் எதிர்த்து, அவ்வப்போது சீறி வருகிறது, ஆமாங்க!! மக்கள் தொகை பெருக்கம், நகர மயமாக்கம், சீரற்ற மனித வாழ்க்கை முறை ஆகியவையே இன்றைய தொடர்இயற்கை பேரிடர்களுக்கு காரணம் என்றும் உலக அளவில் சுற்றுசூழல் அறிவியல் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அடிக்கடி கூடி விவாதம் செய்தும், வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்கள் செயல்பாடு, நோக்கம், வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாட்டில் உள்ள அரசு சாரா அமைப்பு ஒன்றினை சேர்ந்த அறிவியல் அறிஞர் குழு, பருவ கால மாற்றம், மிக பெரிய பிரச்சினை என்றும், எனவே தவிர்க்கும் வழி முறைகளை அவசர அவசியம் இருப்பதும், காலம் கடந்து போகும் நிலை பற்றியும் எடுத்து கூறியுள்ளனர். உலக வானிலை ஆய்வு மையத்தின், செப்டம்பர் 2024 வெளியிட்ட அறிக்கையின்படி, பசுமை குடில் வாயுக்கள் அதிகரிப்பு மற்றும் உலக வெப்ப நிலை உயர்வு காரணிகளால் உயிரினங்கள் பாதிப்பு, மற்றும் பொருளாதார வீழ்ச்சி நிலவுகிறது என்பது அறிவியல் உண்மை. நாம் தற்போது எடுக்க இருக்கும் முக்கிய முடிவுகள், எதிர் காலத்தில் இந்த உலக மனித வாழ்க்கைக்கு நல்ல மாற்றம் அல்லது எதிர் மறையாக மாறி விடும் நிலை என்பதை ஒட்டியே உள்ளது.2050 ஆம் ஆண்டில் பருவ கால மாற்றத்தின் காரணமாக 14.5 மில்லியன் மனித இறப்புகள், 12.5 ட்ரில்லியன் டாலர் பண இழப்பு ஏற்படும் என உலக
பொருளாதார அமைப்பு எச்சரித்து வருகிறது.

உண்மையில், ஜியா யின் வாங் என்ற அறிஞர் சான் ஜோஸ்மாநில பல்கலைக்கழகத்தில் , (கலிபோர்னியா) சுற்றுசூழல் கண்காணிப்பு கருவிகள்உருவாக்க ஆய்வு
நடத்திய போது கொஞ்சம் சூழல் பாதிப்புகள் பற்றி கவனம் கொண்டு இருந்து எச்சரிக்கை உடன் இருந்திருக்கவாய்ப்பு இருந்தும், காலம் கடந்த நிலை என நாட்டிங் ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர், ஜே ஸ்டீவன்சன் கூறுகிறார்.

1980,90 ஆம் ஆண்டுகளில் க்ரீன் லேண்ட், அண்டார்டிகா பகுதிகளில், பனி பாறை படிவுகளின் ஆய்வு தரவுகள் மூலம் தெளிவாக, பருவ கால மாற்றம் பற்றிய பிரச்சனைகளை விளக்குகிறது. 2000 ஆம் ஆவது ஆண்டு ரிச்சர்ட் அல்லேய் என்ற பென்சில்வனியா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எழுதியஆய்வு நூல் “The Two mile time machine :Ice cores, Abrupt climate change and our future “தற்பொழுது அதே பல்கலைக்கழகத்தின் கலாசார சூழல் இயல் பட்ட
வகுப்புகளுக்கு பாட நூல் ஆக இருக்கிறது.

உலக அளவிலும் கூட அரசியல்வாதிகள் அனைவரும் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் பற்றிய மறுப்பு எண்ணத்தில் இருப்பது உண்மை. ஆம், மிக பெரும் தொழில், வணிக முதலாளிகள் ஆதரவுடன், அவர்கள் பெறக்கூடிய லாபங்கள் பற்றிய நோக்கம் கொண்டுள்ளனர்.அல் கோர் போன்ற அரசியல் வல்லுநர்கள் கூட அலட்சியம் கொண்டு இருப்பது வருந்துதற்குரிய நிலை ஆகும். பல்வேறு மனித இன நாகரீகங்களின் வரலாற்றை உற்று நோக்குகையில், அவர்கள் தங்கள் கடந்த காலத்தின் விழுமியங்களை ஓரளவு மதித்து மகிழ்ந்து வாழ்ந்து வந்த பதிவுகள் இருப்பது உண்மை ஆகும். எனினும் அவர்களின் கலாசாரம் வீழ்ச்சி கண்டதும் நிஜம்!ஆனால் அரசு சார்ந்த நிறுவனங்கள், தங்கள் சூழல் மாற்றம், பருவ கால மாற்றம், பொருளாதார, அரசியல், ராணுவ நிலை, போன்றவை நீடித்த வளர்ச்சி கண்டு தொடர்ந்து செயல்பட இயலாது, என்று உரிய நேரத்தில் உணராமல் போய்விட்டனர்.

மேலும் நமது அரசியல், கோட்பாடு, பொருளாதார அமைப்பு, வளர்ச்சி சுயநலத்தினை, முன்னிலைப்படுத்தி தகவமைத்துக் கொண்டு இருப்பது வேதனை தருகிறது.
உலக வெப்ப மயமாதல், உறுதியாக, மனித குல இழப்பு, ஏற்படுத்தி, இந்த அழகான பூமி, வசிப்பதற்கு, தகுதியற்று மாறி விடப் போகிறது. இந்த அறிவியல் உண்மை, அறிந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து உலக அரசு, தலைவர்கள், பருவ கால மாற்றம் பற்றிய அலட்சியம், அவநம்பிக்கை கொண்டு இருப்பதை எதிர்த்தும் வருகின்றனர். ஆனால், தேவையற்ற மூட நம்பிக்கைகளை வளர்த்து வருவது, நிச்சயம், நமது பூமியினை காப்பாற்ற இயலாது. நாம் உரிய சுற்றுசூழல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம், அதற்கான விழிப்புணர்வு, அரசு புரிந்துகொள்ளும் நிலை, செயல்படும் அலுவலர்களுக்கு ஏற்படவேண்டும். பருவ கால மாற்றம், நிச்சயம் வெற்று பயமுறுத்தல் இல்லை! உண்மை என்பது உணருவோமா!

கட்டுரையாளர்  :

– முனைவர். பா. ராம் மனோகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *