தூய்மை பணியாளர்களின் பிரச்சனைகளை பேசுகிறேமா? – மா.வினோத் குமார்.

தூய்மை பணியாளர்களின் பிரச்சனைகளை பேசுகிறேமா? – மா.வினோத் குமார்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது மனிதனே அகற்றுவது என்பது இந்தியாவில் முக்கியமான பிரச்சனை.கையால் மனித கழிவு அகற்றுவோர் (Manual scavengers) என்ற சொற்றோடர் இந்தியாவில் மட்டுமே பயனில் உள்ளது என விக்கிபீடியா (Wikipedia)சொல்கிறது. போதிய நவீன கருவிகள் இல்லாமை, துப்புரவு பணியாளர்களின் அறியாமை போன்றவற்றினால் தொடர்ந்து வருட வருடம் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 26மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருகின்றன. இதுவல்லாமல் 2014 -2018 வரை மட்டும் இந்தியாவில் 323 பேர் இறந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 144 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட இவர்களுக்கான இழப்பீடுகள் என்பது பலவகை போராட்டங்களுக்கு பிறகே பெறப்படுகிறது.ஆனால் மலக்குழி மரணங்களை சாதாரணமாக எண்ணி கடந்து போகும் போக்கு தொடர்த்து கொண்டே இருக்கிறது.

ஏன் இவ்வளவு அலட்சியம் சாலைகளில் ஏற்படும் விபத்துகள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாம் ஏன் இவ்வகை பணிகள் செய்யும் மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசுவதில்லை. நமது சுற்றுபுற தூய்மை என்பது மிகவும் அவசியமான ஒன்று நம்மை சுற்றி இருக்கும் சூழலை சுத்தமாக இருப்பதற்கு செய்யும் வேலையாலேயே அவர்கள் இறக்கின்றனர். இதனை தடுப்பதற்காக நாளுமன்றத்தில் கையால் கழிவகற்றுவோரை பணியமர்ப்புத்தடை மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013(Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act)என்ற சட்டம் பெயரளவுக்கு இருக்கிறதே ஒழிய செயல்படுத்துவதில்லை. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 2.6 மில்லியன் உலர்கழிவறைகள் உள்ளன என்கிறது. தண்ணீரே இல்லாத இலட்சகணக்கான உலர் கழிவறைகளை எந்த ஒரு பாதுகாப்போ,உறைகளே இன்றி சுத்தம் செய்கிறார்கள்.மேலும் இந்த வேலையில் நாடு முழுவதும் சுமார் 3லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

விடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு...  தூய்மை பணியாளர்களின் சோகம்! | due to corona virus affected, cleaning  workers life style ...

ஐந்து நாட்களுக்கு ஒருவர் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது இறப்பதாக தேசிய சஃபாய் கரம்சாரிகள் ஆணையம் (National commission for Safai Karamcharis) கூறுகிறது. துப்புரவு பணியாளர்கள் 80 சதவீதம் பேர்துப்புரவு பணியாளர்களில் பிரச்சனைகளில் முதன்மையானது நவீன உபகரணங்கள் எதுவும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கபடுவதில்லை அப்படி சில இடங்களில் வழங்கப்பட்டாலும் தரம் குறைவாகவும் உபயோகபடுத்துவதற்கு ஏதுவாக இல்லாமலும் இருப்பதால் பாதுகாப்பு பொருள்கள் இல்லாத நிலையில் சுத்தம் செய்யும் போதுதான் மரணங்கள் ஏற்படுகிறது.

முதல் முன்னுரிமையாக மற்றநாடுகளை போல் சாக்கடை,செப்டிக்டேங்,கழிப்பறைகள் சுத்தபடுத்தும் சுத்தபடுத்தும் முறை முழுமையாக இயந்திரமயமாக்கபட வேண்டும். துப்புரவு பணியாளர்களில் ஒப்பந்த தொழிலாளர்களே அதிகம். இதனால் சொற்ப ஊதியம் தரப்படுகிறது.இதனால் ஒப்பந்த தொழிலாளர்களில் எவரேனும் இறக்கும்பட்சத்தில் அவர்களுக்கான அரசு இழப்பீடு கிடைப்பதில்லை. இவற்றில் முக்கியமானது இந்த வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் குறிப்பிட்ட சாதியினரே. அந்த காலட்டங்களில் குலத்தொழிலாக இருந்ததால் இதையே தொடர்கின்றனர். அதற்கு அவர்களுடைய அறியாமையே காரணம். அரசும் தொடர்ந்து இந்த அவலத்தை தொடர்ந்து அங்கீகரித்து குறிப்பிட்ட சாதியினரேயே இத்தொழிலில் வேலைக்கு அமர்த்துகிறது. இதனை நீக்கி மற்ற அரசு வேலைகளை போலவே இந்த வேலைகளிலும் இடஒதுக்கீட்டு முறையை கொண்டுவந்து அனைத்து சாதியினரும் அனைத்து வேலைகளையும் செய்வதை நடைமுறைபடுத்தவேண்டும்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *