தொடர் வாசிப்பில் இன்று 15.04.2020 படித்த 20 வது புத்தகம் பேரா. K.இராஜு எழுதிய 45 கட்டுரைகளின் தொகுப்பு 224 பக்கங்களை உடைய அறிவியல் உலா படித்து முடித்தேன்.

நூல் ஆசிரியர் குறித்து சில தகவல்கள் சொல்ல வேண்டியுள்ளது.1993-ல் எங்கள் கல்லூரியில் TANTSAC சங்க கிளை ஆரம்பிக்க உறுதுணையாக இருந்தவர்கள் மூன்று பேர். உசிலை PMT கல்லூரி தோழர் R.ஸ்டீபன்ராஜ், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி தோழர் M.பன்னீர்செல்வம், விருதுநகர் VHNSN கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரும், மூட்டா சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் K. இராஜூ ஆசிரியர் அலுவலர் ஒற்றுமையை தீவிரமாக அமுல்படுத்தியவர். கல்லூரியில் மெமோ கொடுத்து விட்டால் விருதுநகர் படேல் தெருவில் இருக்கும்  தோழர்.மூட்டா இராஜு வீட்டிற்கே சென்று பதில் வாங்கியுள்ள அனுபவம் உள்ளது. தோழர் குறித்து மேலும் சொல்வதற்கு பிறிதொரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

இனி  அறிவியல் உலா கட்டுரை தொகுப்பிற்குள்

ஒன்பது கோள்களும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வாருங்கள் என்னும் பாடல் உள்ளது. ஆனால் அறிவியலில் இன்றைய நிலையில் எட்டு கோள்கள் தான் உள்ளன. புளுட்டோ ஒன்பதாவது கோள் அல்ல என ஆகஸ்ட் 2006 ல் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆர்க்கிமிடீசு  என்ற கிரேக்க விஞ்ஞானி கண்டுபிடித்த மிதத்தல் விதி குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. அறிவியலுடன் சில ஜோடனைகள்  சேர்த்த போதுதான் ஜோதிடம் பிறந்தது. வானவியலுடன் ஜோதிடக் கருத்துக்களை இணைத்ததால் இரண்டும் ஓன்று என்ற பிரமை ஏற்பட்டது. அறிவியலே உண்மை என நிருபிக்கப்பட்டுள்ளது. வெறும் கண்ணால் 4 கி.மீ தூரம் பார்க்க முடியும்.

நெல்லிக்காயில் ‘தனின்’ என்ற இரசாயனப் பொருள் (TANNIN) நீருடன் சேரும்போது சில அமிலங்களும், குளுக்கோஸும் உண்டாகின்றன. அதனால் தான் நெல்லிக்காயை தின்ற பிறகு தண்ணீர் குடித்தால் இனிக்கிறது. இயற்கையின் ரகசியங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய அறியாமைதான்  மூட நம்பிக்கைகள் தோன்ற காரணமாக இருந்தன. வெப்பம், மின்சாரம் இரண்டையும் கடத்தாப் பொருள் ஆஸ்பெஸ்டாஸ்.

ஹிக்ஸ் போஸான் பற்றி நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் லியான் லெடர் மேன் என்பவர் எழுதிய நூலில் துகள்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததால் Goddamn particle என குறிப்பிட்டிருந்தார். புத்தகத்தின் பதிப்பாளர் God particle (கடவுளின் துகள்) என மாற்றியதின் விளைவே. கடவுளுக்கும் துகள்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

அகில இந்திய அறிவியல் இயக்கம் ட்ரீம் 2047 இதழில் அறிவியல் பற்றி படித்தவர்களே கூட மூட நம்பிக்கைகளுக்கு ஆட்படுவதை குறித்து விரிவாக எழுதியுள்ளார். இயற்கை எப்படி செயல்படுகிறது என்பது குறித்த அறியாமையிலிருந்து தான் மூடநம்பிக்கைகள் பிறக்கின்றன. இயற்கை நிகழ்வு பற்றிய ஒர் அறிவியல் உண்மை வெளிப்படும் போது அது தொடர்பாக அது வரை இருந்து வந்த மூட நம்பிக்கை மறைய வேண்டும். ஆனால் அப்படி எப்போதுமே நடந்து விடுவதில்லை. மூட நம்பிக்கையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களிடம் அறிவியல் மனப்பான்மை இல்லாததே காரணம்.

இந்த உலகமும் உயிரினமும் யாராலும் படைக்கப்படவில்லை. உயிரினங்கள் தோன்றி இன்றைய கட்டத்திற்கு வந்து சேர அவற்றின் பரிணாம வளர்ச்சி தான் காரணம் என்று 1859-ல் இவ்வுலகத்திற்கு அறிவித்தவர் சார்லஸ் டார்வின். இந்தியாவை பொறுத்தவரை பள்ளி அறிவியல்வகுப்புகளில் டார்வின்கொள்கையின் முக்கியதுவத்தை சொல்லாமல் போகிற போக்கில் மேம்போக்காக சொல்லப்படுகிறது.

7 நிறங்களையும் பிரதிபலித்தால் வெள்ளையாக தெரியும். 7 நிறங்களை உள்வாங்கினால் கறுப்பாக தெரியும். அறிவியல் நமது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது. அறிவியலை பரிசோதித்து நிருபிக்க முடியும்.படைப்புக் கொள்கையை நிருபிக்க முடியாது.  ஒரு ஒளிவருடம் = 3x60x60 x 24X365=94608000 கி.மீஆகும்.

இன்னும் அறிவியல் குறித்து இதில் நிறைய தகவல்கள் உள்ளன. இந்தப் புத்தகம் எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய அவசியமான புத்தகம். நீங்களும் வாங்கிப் பயன் பெற வேண்டும்…..

 

தோழமையுடன்,

க.ஷெரீப்.

TANTSAC,

ANJAC College.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *