முதல் படைவீட்டில் சங்பரிவார படைகள் தலையீடு (Sangh Parivar forces intervention in the first force) - Thiruparankundram Temple Issue - https://bookday.in/

முதல் படைவீட்டில் சங்பரிவார படைகள் தலையீடு

முதல் படைவீட்டில் சங்பரிவார படைகள் தலையீடு

மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர் இந்துத்துவ குழுக்கள். வாதங்களையும் விதண்டாவாதங்களையும், ஊடகங்களும் அரங்கேற்றி வருகிறன்றது . கடந்தும் போகும் (போன) சம்பவங்களை ஊதி பெரிதாக்குகின்றனர் சங்பரிவார கும்பல் இது பிளவுவாதத்தை உருவாக்கும் திட்டமிட்ட சதியென்றே தோன்றுகிறது.

எங்கள் ஊருக்கும் குன்றத்திற்கும் 15 கிலோமீட்டர் தொலைவு தான் .நான் கடந்த 30 வருடங்களாக அறிந்த திருப்பரங்குன்றத்தை எனக்கு தெரிந்த சில விபரங்களை பகிர்ந்து கொள்கிறேன். த மு எ க ச நடத்தும் கலை இலக்கிய இரவின் மூலம் மிகவும் நெருக்கமானது பரங்குன்றம். மலையின் உச்சியில் உள்ள நெல்லித்தோப்பு மைதானத்தில் நடந்த த மு எ க ச வின் கூட்டங்களில் பங்கேற்ற தருணங்கள் இனிமையானது.

திருப்பரங்குன்றம் போராட்டம்: 195 பேர் மீது வழக்கு | Thiruparankundram protest: Case filed against 195 people

 

உடல் பயிற்சிக்காக மலையேறிய அனுபவம் அழகானது.! அடிக்கடி குடும்பம் மற்றும் நட்பு உறவுகளோடும், மலையேறிய நாட்கள் பசுமையானது!. குன்றத்தில் மலையை உயரத்திலிருந்து கீழே பார்க்கும் காட்சி த்ரிலிங்கா இருக்கும். ஒரு பக்கம் வயல் வெளிகள் இன்னொரு பக்கம் வீதிகளில் நிறைந்து காணப்படும் கட்டிடங்கள் அங்கு வசிக்கும் மக்களில் குறைந்த எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களிடம் இந்துக்கள் யாரும் வேற்றுமை பாராது பழகும் முறை சிறப்பானது! . இவர்களிடம் தம் பிரியாணி செய்ய கற்றுக்கொண்ட அனுபவம் இந்துக்கள் பலருக்கும் ருசிகரமானது.! மலையில் அமைந்துள்ள தர்ஹா குறித்து முஸ்லிம்களிடம் இந்து மக்கள் பேச்சுக்கூட விவாதித்தது கிடையாது.!

மலைக்குச் செல்ல இரண்டு பாதைகள் உள்ளன.1, கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாதைதான் ஆரம்ப முதல் உள்ளது. 2 பின் வாக்கில் உள்ள பாதை படிக்கட்டுகள் (600) கட்டப்பட்டு ஒரு 15ஆண்டுக்குமேல் இருக்கும். இதன் வழியாக சென்றால் நேராக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு போகலாம். நாங்களெல்லாம் விடுமுறை நாட்களில் விழாக்காலங்களில் விருந்தினர் வந்தால் குழந்தைகளுடன் ஆரத்தழுவிக் கொள்ள ஒரே போக்கெடம் திருப்பரங்குன்றம் அதை விட்டால் அழகர் மலை . , இப்படி மதுரை மாவட்ட மக்கள் மலையோடு ஒட்டி உறவாடுமிடம் தி ப குன்றம்.

வீட்டிலிருந்து சமைத்த அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்று சாப்பிட்டதும் மேலே தர்ஹாவில் பந்தியில் பிரியாணி உண்டு களித்த நினைவுகள் (குரங்குகளுக்கு பயந்துகொண்டு அவைகளுக்கும் தீனியும் குச்சி எடுத்துச் சென்றது) அலையாய் வந்து போகின்றன மனசுக்குள்.

அயோத்தியில் கலவரத்தை முடிச்சிட்டு, திருப்பரங்குன்றத்தில ஆரம்பிச்சுருக்காங்க'- செல்வப்பெருந்தகை |selvaperunthagai about thiruparankundram issue

மனசு அமைதிக்காக மலையில் தனியே சென்று உட்கார்ந்து வருவது முண்டு அது சமயம் , ஆடு கோழி பலியிடுவதை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். கீழிருந்து மேலே சமைப்பதற்கு பொருட்களுடன் ஆடுகளையும் சுமந்து மூச்சு வாங்க ஏறுவார்கள் . முஸ்லிம்கள் அங்குள்ள தர்ஹாவில் முடி இறக்குவதை பார்த்துவிட்டு இஸ்லாமியர்களும் மொட்டை எடுப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.

முருகனுக்கு சரவண பொய்கையில் முடி வளிப்பவர்கள்தான் இஸ்லாமியர்களுக்கு மொட்டை போட மலையில் உள்ள மசூதிக்கு வருவார்கள். அவர்கள் மொட்டை போட்டு விட்டு மதியம் வரை இருந்து பிரியாணி சாப்பிடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

மலையேறும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் நேரெதிர் சந்தித்துக் கொள்வதும் நெல்லித் தோப்பு மைதானத்தில் ஒருவருக்கொருவர் வேறுபாடின்றி தண்ணீர் கேட்டு குடித்து விட்டு இளைப்பாறிக்கொள்வது சுவையானதும் கூட

மதுரை குறித்து ஒரு பாடலில் முதல் படைவீடாம் குன்றத்திலே தர்ஹாவும் அமைந்திருப்பது மத நல்லிணக்கத்திலே என்ற வரி திருப்பரங்குன்றம் மட்டுமல்ல மதுரையில் மும்மதத்தினரும் சமத்துவத்தையே கடைபிடித்து வந்திருக்கிறார்கள். சான்றாக வரலாற்று கதைகளும் உண்டு குறிப்பாக அழகர் ஆற்றில் இறங்கி விட்டு துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கிய கதை நாம் அனைவரும் அறிந்ததே! கடவுளாக இருந்தாலும் காதலுக்கு மதம் எப்போதும் தடையாக இருந்ததேயில்லை .

பெளர்ணமி நாளில் மலையை வலம் வரும் மக்களில் அனேக பேர் வெளியூர் மக்கள். மலையை சுற்றி வருபவர்கள் ஒரு நாளும் சிவனோடு சிக்கந்தரையும் சுற்றுகிறோமே என்ற எந்த வினையும் இல்லாதவர்கள்.! அப்படி நடந்து வருபவர்களுக்கு இரு மதத்தினரும் தண்ணீர் , நீர் மோர் சுடச் சுட பொங்கல் புளியோதரை வழங்கி மகிழ்வர் . பக்தர்கள் போதும் போதுமென்றளவுக்கு மேல் உண்டு களிப்பார்கள் (களைப்படைவார்கள் .) இதற்காவே அங்கு செல்பவர்களில் நானும் ‌. அதே போல தேர் திருவிழா. முகமதியர்களின் சந்தனக்கூடு, தெப்பத்திருவிழா, தைப்பூசம், பங்குனி திருவிழாவில் அனைத்து தரப்பினரும் (அன்றாடம் ஆயிரக்கணக்கான ஜனங்கள்) வந்து போகும் திருப்பரங்குன்றம் ஜெகஜோதியாக காணப்படும் எப்போதும்.!

இப் பெருமை மிக்க மண்ணில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து எப்படி இப்படி பூதாகரமான பிரச்சினைகள் வெடித்தன என்று ஆராய்ந்தால் ஒரு விஷயம் புலப்படுகிறது . அது ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபம் ஏற்றுவது பற்றிய சர்ச்சையை கிளப்பும் இந்துத்துவ அமைப்புகள் கடந்த ஒரு நூற்றாண்டுகளாக திட்டமிட்டு வருவது அப்பட்டமாக தெரிகிறது. (நடந்து முடிந்த 144ல் தடை உத்தரவு)

அது குறித்த கீழ் கண்ட வழக்கு விபரக்குறிப்பு
திருப்பரங்குன்றம் – நீதிமன்றங்கள் கூறுவது என்ன?
வழக்கு எண் 1 முதன்மை கூடுதல் நீதிபதி , மதுரை நீதியரசர் ராம ஐயர்

இறுதிஉத்தரவு:

நெல்லி தோப்பிலிருந்து பள்ளிவாசல் வரை உள்ள படிக்கட்டுகள் மலை உச்சி வரை உள்ள பள்ளிவாசலும் கொடி மர கம்பமும் மலை உச்சியின் முழுமைக்கும் முகமதியர்களே சொந்தமானவர்கள். இதை தவிர்த்து மற்ற பகுதிகள் மனுதாரர் முருகன் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என்று O.S. No. 4/1920 25.08.1923. அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது .

OS என்றால் (Original Suit.) சட்டம் என்பது ஒரு நிறுவனம் அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வதற்கு உதவுவதே OS சட்டத்தின் நோக்கமாகும்.

வழக்கு 2. Privy council, London P.C. Appeal No. 5/1930 Order dated: 12.05.1931 இறுதி தீர்ப்பு மேற்கண்ட முதல் வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு தான் லண்டன் ப்ரிவி கவுன்சில் வழங்கியது.!

வழக்கு 3 , O.S. No. 506/1975 தீர்ப்பு நாள் 22.11.1978 அதே தீர்ப்பு.

வழக்கு 4, ல் கார்த்திகை தீபம் குறித்தது W.P. No 18884/1994 dated 21.11.1996 ல் இறுதி தீர்ப்பு தர்ஹாவை தவிர்த்து அதிலிருந்து 50 மீட்டர் இடைவெளி விட்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம் உத்தரவு பிறப்பித்துள்ளது நீதி மன்றம்.

வழக்கு 5 , Crl O.P. No 21192 of 1998 dated 30.11.1998 அதே தீர்ப்பு இதில் கூடுதலாக சொல்லியிருப்பது, மலை உச்சியிைலிருக்கும் பள்ளி வாசல் தர்ஹாவிற்கும் இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி மற்றும் இதர கட்சியினர் அச்சுறுத்தலை அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு எண் 6. 173/2011 Order dt 29.08.2012 அதே தீர்ப்பு

வழக்கு எண் 7 WP(MD) No.15565 of 2023 dt 28.06.2023

1947 சுதந்திரத்திற்கு பின்பு வழிபாட்டு தலங்கள் எவ்வாறு யார் யார் பின்பற்றினார்களோ அதே நிலை தொடர் வேண்டுமென்பதே நீதிமன்ற தீர்ப்பு அதைப் பின்பற்றாமல் , மலையை சொந்த கொண்டாட துடித்த கலவரக்காரர்கள் மேற்கண்ட ஏழு வழக்குகளை தொடுத்தது தொடர் தோல்வியை சந்தித்தது.. அதன் பிறகு கார்த்திகை தீபம் மலை உச்சியில் தர்ஹா அருகில் உள்ள தூணில் ஏற்றுவதற்கு வழக்கு கொடுத்ததும் தோல்வியில் முடிய மதம் பிடித்த இந்து முன்னணியினர் எல்லாவற்றுக்கும் நொட்டனை சொல்லி இஸ்லாமியர் 21 அடி கொடியேற்றுவதற்கு ஏற்றுவதற்கு தடையாக 17 அடியாக உயரத்தை குறைக்க இடையூறு செய்கின்றனர் . ஒரு நூற்றாண்டாக.!

இவர்களுகெதிராக இஸ்லாமியரும் வக்ஃபு வாரியமும் எந்த வழக்கும் தொடுக்கவில்லையென்பது கண் கூட பார்க்க முடிகிறது.

ஐயர் என்றால் சாம்பார் தயிர் சாதம் முகமதியரென்றால் பிரியாணி பெரும்பான்மை இந்துக்களும் (அய்யர்களும்) அசைவம் உண்ணுகிறபோது இஸ்லாமியர்களை அவர்களின் மத கோட்பாடுக்கெதிராக அவர்களுக்குரிய இடத்தில் ஆடு கோழி வெட்டுவதற்கு தடை விதிக்க கோரி கலவரத்தை உண்டு பண்ணும் போக்கு எந்த விதத்தில் நியாயம் !? இதிலிருந்து இவர்கள் லட்சணம் இந்துத்துவ அரசியலே நோக்கமென்பது தெளிவாகிறது.

இயற்கையாக அமைந்த மலையடிவாரத்தை, அதன் அழகியலை ரசிக்கமால் அடுத்த வரும் சந்ததியினர்களும் பயன் பெறும் வகையில் பாதுகாப்பதை விட்டு விட்டு தங்களுக்குதான் சொந்தமென்று துவேஷ அரசியலை நடத்துகின்றனர் இந்து மத தீவிரவாதிகள்.

இவர்களுக்கெதிராக கடந்த முப்பதாண்டு காலமாக கடவுளின் பெயரால் கலவரம் வேண்டாமென திருப்பரங்குன்றம் த மு எ க சவும் இடதுசாரி அமைப்புகளும், ஒற்றுமையை விரும்பும் இயக்கங்களும், பொதுமக்களும், மத நல்லிணக்க மேடையை உருவாக்கி தீவிரவாத தன்மையை மேலெழுப்ப விடாமல் பதிலடி கொடுத்து வருகிறது இன்று வரையில் . திருப்பரங்குன்றம் மக்கள் ஒன்னுமண்ணுமா கலந்தே வாழ்கின்றனர். அவர்களை கண்டு முருகனும் ஆனந்தமாய் புன்னகைக்கிறார் . திருப்பரங்குன்றத்தில் முருகன் சிரித்தால் திருத்தணி மலையில் ஒற்றுமையைத்தான் எதிரொலிக்கும் .!

கட்டுரையாளர் :

க பாண்டிச்செல்வி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *