கோழைத்தனம் என்னும் இந்த சிறுகதை சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை நமக்குப் புரியவைக்கிறது. ஒரு பெண்ணின் விருப்பங்கள் எவ்வாறு குடும்பத்தினரால் உதாசீனப்படுத்தப்படுகின்றன என்று விளக்குகிறது. சமீபத்தில் நடந்த நிதன்யாவின் தற்கொலை தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் பலரும் தற்கொலை ஒரு கோழைத்தனம் என்று பேசுவதை நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால் இந்தக் கதையைப் படிக்கும்போது அதற்குப் பெயர் கோழைத்தனம் தானா என்னும் கேள்வி எழுகிறது.
இக்கதையில் வரும் முக்கிய கதாப்பாத்திரமான டாக்டர் மாலதி, தன் வாழ்க்கை முழுவதும் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்தவர். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அவளுடைய டாக்டர் கனவு ஏளனம் செய்யப்படுகிறது. வெறும் ‘குடும்ப கௌரவம்’ என்னும் குப்பை காரணத்திற்காக அவருடைய படிப்புக்கு மரியாதையில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். அவளுக்கு அரசாங்க வேலை கிடைத்தபோதும், ‘குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற காரணத்தைச் சொல்லி அவளுடைய கனவை உடைக்கின்றனர்.
சில வருடங்கள் கழித்து மூன்று லட்ச ரூபாய் கட்டி வேலை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் தன்னுடைய நகையை அடமானம் வைத்து பணம் கட்டினார். ஆனால் அவர் ஏமாற்றப்பட்டார்.
இப்போது அவர் தான் வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கையையும் இழக்கிறார். இப்போது தன்னுடைய வீடு என்று சொல்லிக்கொள்ள அவருக்கு ஒன்றுமே இல்லை என்று அவர் உணர்கிறார். யாரிடமிருந்தும் எந்த உதவியும் கிடைக்காது என்று எண்ணி, தன் உயிரைத் தானே எடுப்பது என்ற முடிவை எடுக்கிறார்.
இப்போது அவர் எடுத்த முடிவுதான் விவாதமாகிறது. இந்த முடிவுக்குக் காரணம் அவருடைய கோழைத்தனமா? இல்லை, அவர் இருந்த சூழலா? இல்லை, அவரை இந்தச் சூழலுக்கு உள்ளாக்கிய இந்தச் சமூகமும் அதன் கட்டமைப்புமா என்னும் கேள்வி மனதில் உருவாகிறது. இதன் பதில் ஒருவருக்கொருவர் மாறுபடும். நான் இந்தச் சமூகத்தின் கட்டமைப்புதான் காரணம் என்று நினைக்கிறேன்.
ஒரு ஆணின் முடிவுகள் அவனை மட்டும் சார்ந்தவையாக இருக்கின்றன. ஆனால் ஒரு பெண்ணின் முடிவு அவளின் குடும்பத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. அவளின் சுதந்திரம் அவளின் கையில் இருப்பதே இல்லை.
இதற்கான தீர்வாக நான் பார்ப்பது ஓரு ஆண் சில நேரங்களில் பெண்ணின் இடத்திலிருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பது தான்.
ஒரு சமூகமாகச் சேர்ந்து இதுபோன்ற ‘கொலைகளைத்’ தடுப்போம்.
நூலின் விவரங்கள்:
நூல் : கோழைத்தனம்
ஆசிரியர் : அருள்மொழி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.25
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர் :
✍🏻 மூ.நிரஞ்சனா
கணிதவியல் முதலாமாண்டு
கலசலிங்கம் பல்கலைக்கழகம்
கிருஷ்ணன்கோவில்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
