அருப்புக்கோட்டை சிறப்பு புத்தக திருவிழாவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பாரதி புத்தக நிலையத்தில் மூன்றாவது நாளாக சிறப்பு புத்தக திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதில் நேற்றைய மாலை நிகழ்வாக சிறு குழு உரையாடல் நடந்தேறியது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஆசிரியை முத்து குமாரி அவர்களும், சிறப்பு விருந்தினராக எஸ்.அருண் குமார் (துளிகள் இயக்கம்), மேலும் வாசகர்கள் சிலரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

Image

தினந்தோறும் அடுத்தடுத்து நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. அனைவரும் ஆதரவு தந்து புத்தாண்டை புத்தகங்களோடு செலவிடுங்கள் அருமை உறவுகளே…