இனிப்பு மட்டுமல்ல…
காரமும் உண்டு!
கசப்பு மட்டுமல்ல
துவர்ப்பும் உண்டு!
புளிப்பு மட்டுமல்ல
உவர்ப்பும் உண்டு!
என்றாலும்….
கேட்கக் கேட்க…
படிக்கப் படிக்க…
திகட்டாத தீஞ்சுவை!
ஒன்பான் சுவைகளும்
உண்டு!
அவைகளை
ஒப்புமைப் படுத்த இயலாது
இங்கு!
ஆனால்…
ஒரு சுவையை மட்டும்
ஒதுக்கவே முடியாது
அது
பெருமிதச்சுவை!
நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் நிறைந்தப்
பெருமிதம்!
யார் புகட்டுவரோ
இப்பெரும் சுவையை
எதிர்கால
இந்நாட்டுப் பிள்ளைகட்கு!
பெருந்தலைவ
நின் சுவையை!