கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் (Asaithadum Vetridankal) - Bookday Kavithaikal | Tamil Poetry - https://bookday.in/

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள்

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள்

நேற்றைய நாளைப்போலத்தான்
இன்றும் இருந்தது.
அதே கவலைகள்…
அதே சிக்கல்கள்…
அதே சிரிப்புகள்…
அதே எதிர்பார்ப்புத் துயரங்கள்.
வேறுபட்ட முகங்கள்
அந்நியப்பட்ட இடங்கள்.
அல்லது
பழக்கப்பட்ட முகங்கள்.
பழக்கப்பட்ட இடங்கள்.
புழங்கப்படாத வார்த்தைகள்.
வலி கூட்டும் கழிவுகள்
யாவுமாக.

நேற்றைய நிகழ்வொன்றில்
வீசிய
ஒளித்திவளைகளை
நாளைய ஒன்றின்
மீச்சிறுச் சமிக்ஞை
கூட்டித் தருகிறது
ஆகச் சிறந்த
இளைப்பாறுதலை
அணுக்கமாக்கி.
நேற்றென்பது
நீ
நினைத்தது போல
இல்லையென்பதாக
இன்றின்
இக்கணத்தைப்
பார்க்கச் சொல்கிறது
நிச்சலன மெய்யில்.

தளர்வுறாத மனம்
சந்தைக்குள் இழுத்து.
அதே பகலிரவு…
அதே படுக்கை…
அதே கோப்பையென
நிரப்பிக் கொண்டே
இருக்கிறது.
பருகுமாசைகள்
படுத்துமாறு.

குடித்தலுக்குள் விழாமல்
குடித்துக் கொண்டே இருப்பதன்
கற்பிதங்களில்
இக் குடிமையியல் வாழ்வு
ஆகச்சிறந்த
ஒன்றிற்காக
ஏங்குவதாக
எப்பொழுதும்.
****

எழுதியவர் : 

ரவி அல்லது

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *