புத்தகம் மிகச் சிறியதாகக் கைக்கு அடக்கமாக இருந்தது ஆனால் உள்ளே பிரித்து படிக்கும்போது மிக சுவாரஸ்யமான குறுங்கதைகளைக் கொண்டுள்ளது இப்புத்தகம் படிக்க ஆர்வமாக எளிய நடையில் உள்ளது முதல் குறுங்கதை “அழைப்பு மணி” படிக்க ஏதோ மாயாஜால கதை போன்று விரிகிறது முடவை’ படித்தால் எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் எனப் புரியும்.
“மரணத்தெரு” யாரும் போகாத தெரு போய் பார்த்தால் புரியும் விடுகதை அருமை.
“வெண்சங்குக்கடல்” இந்தக் குறுங்கதையும் மிகச் சரளமாகச் செல்கிறது முடிவு சிறப்பாக அமைந்துள்ளது.
“சமாதானம்” உண்மையில் சமாதானம் அடையாத மனித மனங்கள் சமாதானம் எப்படி அடைகின்றன என்பதை விவரிக்கிறது இந்தக் குறுங்கதை.
‘பகல் ஆசை’ ஆண்களுக்கு ஏற்படும் சபலத்தை விவரிக்கும் விதமாகவும் மனைவியின் நம்பிக்கையும் அன்பும் அவர் மனதை மாற்றி நிம்மதி அடையச் செய்வதையும் காட்சிப் படுத்துகிறது.
” பொம்மை மாமா” குறுங்கதை குழந்தைகள் விரும்பும் நெகிழ்ச்சியான விதமாகவும் கண்ணீர் ததும்பும் கதாபாத்திரமாகவும் அமைந்திருக்கிறது
“புராதனத்தின் துக்கம்” மிகச் சிறந்த கதை முழுக்கைச் சட்டை அணிந்தவரை விமர்சிக்கும் மக்கள் அவரின் இறுதி முடிவைக் கண்டு துக்கத்தில் அனைவரையும் ஆழ்த்துகிறது கதை அருமை மொத்தத்தில் சிறிய புத்தகம் உள்ளே இருபது குறுங் கதைகள் இருக்கின்றன.
குறுங்கதைகள் சுவார்ஸ்யமாகவும் நல்ல கருத்துக்களை உள்ளடக்கியும் உள்ளன. திரும்பப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்கின்றன புத்தக்கத்தை எழுதிய எழுத்தாளர் திரு உதயசங்கர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ. ஷம்ஷாத்,
சென்னை
நூலின் பெயர் : அசைவற்று மிதக்கும் நிழல்
நூலாசிரியர் – எழுத்தாளர் உதயசங்கர்
புத்தகம் :- அசைவற்று மிதக்கும் நிழல்
பதிப்பகம் :- நூல் வனம்.
விலை :- 100.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஆயிரம் ஆயிரமாய் நூல் அறிமுகம் பெருகட்டும்
வாழ்த்துகள் ..