நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்துள்ள சிறுகதை ஆசிரியர்களின் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பதினாறு சிறுகதைகள் கொண்ட இத் தொகுப்பை தேர்வு செய்து தொகுத்துள்ளார் அசோகமித்திரன். பல்வேறு வாழ் நிலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கதைகளாக இவை அமைந்துள்ளன.

16 சிறுகதைகளும் 16 சிறுகதை எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். இவர்கள் சிறுகதை எழுதுவதில் மிகுந்த தேர்ச்சியும் வெற்றியும் பெற்றவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாழ்நிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் மனதில் நிற்கக் கூடிய முறையில் சிறு கதைகள் அமைந்துள்ளன.

கிருஷ்ணன் நம்பி எழுதிய மருமகள் வாக்கு எனும் கதையோடு துவங்கி அசோகமித்திரன் எழுதிய காலமும் ஐந்து குழந்தைகளும் என்ற கதையோடு தொகுப்பு நிறைவடைகிறது. இத்தொகுப்பில் அம்பை எழுதிய மிலேச்சன், ஆதவன் எழுதிய நிழல்கள், வண்ணநிலவன் எழுதிய எஸ்தர், சார்வாகன் எழுதிய உத்தியோக ரேகை, இந்திரா பார்த்தசாரதியின் தொலைவு, நீல பத்மநாபனின் சண்டையும் சமாதானமும் , ஆ மாதவனின் நாயணம் , சுஜாதா எழுதிய நகரம் , சா கந்தசாமி எழுதிய ஒரு வருடம் சென்றது , நாடன் எழுதிய “ஒரு” இந்நாட்டு மன்னர் , வண்ணதாசன் எழுதிய தனுமை , கி.ராஜநாராயணன் எழுதிய நாற்காலி , ஆர் சூடாமணி எழுதிய அந்நியர்கள், ஜெயந்தன் எழுதிய பகல் உறவுகள் ஆகிய கதைகள் இடம் பெற்றுள்ளன.

பிச்சைப்பாத்திரம்: அசோகமித்திரன் ...

பரபரப்பை மட்டும் முக்கியமாக கொள்ளாமல் பரிணாமத்தின் ஒவ்வொரு காலத்தில் சூட்சுமங்களை கலை உணர்வோடு படித்து தருபவை என்று எனக்கு உறுதியாகத் தோன்றும் கதைகளில் சிலவற்றை தொகுப்பின் அமைப்பு கட்டுத் திட்டங்களுக்கு இணங்க தேர்ந்தெடுத்திருக்கிறேன் இன்று என்று அசோகமித்திரன் தன்னுடைய முன்னுரையில் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சிறந்ததை இயங்கிய தளத்தை அதன் உயர்ந்த நிலையில் பிரதிபலிக்கச் செய்யும் முயற்சி என்று குறிப்பிட்டாலும் இதுவே எக்காலத்துக்கும் ஆன தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பாக காது என்றும் ஆழமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல் சிறுகதை கிருஷ்ணன் நம்பி எழுதிய மருமகள் வாக்கு இதில் மீனாட்சி அம்மாளும் ருக்மணியும் மாமியாரும் மருமகளும் விருப்பத்தையும் உறவையும் பேசுகிறது.

கரோனா எனும் தொற்று வியாதி உலகத்தையே கட்டிப்போட்டு கூடிய சூழலில் இக்கதை இக்கதை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அது சுஜாதா எழுதிய நகரம் என்ற கதைதான். 12 வயது ஆன பாப்பாத்தி காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார் .
அவருடைய தாய் வள்ளியம்மாள். புதிய வகையான வியாதி என்பதால் மருத்துவமனையில் உடனடியாகஅனுமதிக்க சொல்லி அனுமதிக்க சொல்லி உத்தரவிடுகிறார் தலைமை மருத்துவர்.
ஆனால் அதற்கு பொறுப்பான மருத்துவர் அந்த பணியை சரிவர செய்யாமல் விடுவதன் காரணமாக வள்ளியம்மாள் படும் கஷ்டம் கண்களை கலங்கச் செய்கிறது. வழியற்று போன வழியற்று போன வள்ளியம்மாள் தன் மகளை தூக்கிக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு போவது வரை கதை வருகிறது.

புதிய தமிழ்ச் சிறுகதைகள் by Ashokamitran

எளியவரின் நோய்மை சூழல் எத்தகைய கொடியது என்பதை மிகுந்த வேதனையோடு வலியோடும் உணரவைக்கிறது. இச்சிறுகதை இது ஏதோ கிராமத்தில் இருக்கும் வள்ளியம்மாள் கதை மட்டுமல்ல. நாடு முழுவதும் இருக்கக்கூடிய கோடான கோடி எளிய மக்களின் வேதனை கதைதான் இது.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வாழ்வையும் பேசுகிறது ஒட்டுமொத்தமாக கதைகளும் மனித மனங்களில் ஏற்படுகிற விருப்பங்களையும் சிக்கல்களையும் ஏக்கங்களையும் ஆழமாக எடுத்துரைக்கிறது. சிறுகதைத் தொகுப்பை வாசிப்பதின் மூலம் நம்முடைய மனதிலும் பல எண்ண ஓட்டங்கள் உருவாகிறது.இதுவே சிறுகதைகளின் வெற்றியாகும்.

நூல்: புதிய தமிழ் சிறுகதைகள்

ஆசிரியர்: அசோகமித்திரன் 

வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட் 

One thought on “நூல் அறிமுகம்: புதிய தமிழ் சிறுகதைகள் – எஸ்.பாலா (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்)”
  1. ஆதவனின் நிழல்கள் சிறுகதை ஒரு அற்புத ரசாயன கலவை மனதில் நல்ல ரசவாதத்தை ஏற்படுத்திவிடுகிறது அவரது எழுத்தாளுமைக்கு ஒரு சாட்சி!

    எஸ்.மைக்கேலே ஜீவநேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *