சிறுகோள்கள் வீழ்ச்சியும் உயிரின அழிவும் | Planet Destruction | Asteroid impact and extinction | எரிமலை | இரிடியம் | விண்கல் - சிறுகோள் - https://bookday.in/

சிறுகோள்கள் வீழ்ச்சியும், உயிரின அழிவும் (Planet Destruction)

சிறுகோள்கள் வீழ்ச்சியும் உயிரின அழிவும்

கடந்த 539 மில்லியன் வருடங்களில் இருந்து  பூமியில் பலமுறை வெகுஜன அழிவுகள் (mass extinction) நடந்திருக்கிறது. இதில் இறுதியாகவும் பரிணாம வரலாற்றில் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்திய ஒன்று தான் கிரெட்டேசியஸ்-பேலியோஜீன் (Cretaceous/Palaeogene) அழிவு அல்லது KP-G அழிவு. 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னாடி ஒரு பெரிய மலைக்கு நிகரான சிறுகோள் ஒன்று பூமியில் விழுந்தது தான் டைனோசர்களுடன் சேர்ந்து சுமார் 75% உயிரினங்கள் அழிந்து போனது, என்பது தான் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு. 1970களின் பிற்பகுதியில்  யுகடன் தீபகற்பத்தில் (Yucatán Peninsula) நடத்திய பெட்ரோலியம் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட சிக்சுலப் பள்ளம் இதற்கு வலுவான ஆதாரத்தை கொடுத்துள்ளது.

பல தரப்பு வாதங்கள்: 

சிறுகோள்கள் வீழ்ச்சியும் உயிரின அழிவும் | Planet Destruction | Asteroid impact and extinction | எரிமலை | இரிடியம் | விண்கல் - சிறுகோள் - https://bookday.in/

டைனோசர்கள் அழிந்தது காணமல் போனதற்கு காரணமாக மாறியது விண்கல் அல்ல என்ற கருத்தும் இருக்கிறது. 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னாடி மிகப்பெரிய எரிமலை வெடிப்பு தான் அனைத்து உயிரின அழிவிற்கு (mass extinction) காரணமாக விளைந்தது என்றும் ஒரு தரப்பினர்கள் நம்புகிறார்கள். இந்தியாவில் இருக்கின்ற டெக்கான் பீடபூமி போன்ற எரிமலை மாகாணங்கள் இந்த காலகட்டத்தில் உருவானவை. 1 மில்லியன் வருடங்களாக நீடித்த  டெக்கான் டிராப்ஸ் எரிமலை வெடிப்புக்களால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு 10.4 டிரில்லியன் டன், மற்றும் கந்தகம் 9.3 டிரில்லியன் டன் வெளியிடப்பட்டது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்புக்களால் வளிமண்டலத்தில் வெளியாகி சூழ்ந்த சல்புரிக் ஆசிட் துளிகள் சூரிய ஒளியை மறைத்து ஆல்பிடோவை ( Albedo – சூரிய கதிர்வீச்சின் பிரதிபலிப்பு) அதிகரிக்கவும் செய்வதினால் உருவாகும் எரிமலை குளிர்காலம் (volcanic winter) தான் அழிந்து காணாமல் போனதற்கான காரணம் என இந்த தரப்பினர் நம்புகிறார்கள்.

சிறுகோள்கள் வீழ்ச்சியும் உயிரின அழிவும் | Planet Destruction | Asteroid impact and extinction | எரிமலை | இரிடியம் | விண்கல் - சிறுகோள் - https://bookday.in/
Deccan Traps Eruption

எரிமலை வெடிப்பு மட்டுமே உலக உள்ள அனைத்து உயிரின அழிவுக்கு காரணமல்ல. ஆனால் இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம் என்று வாதிக்கின்றவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். 1 மில்லியன் வருடங்களாக நீடித்த டெக்கான் டிராப்ஸ் என்ற எரிமலை வெடிப்பால் உருவாக்கப்பட்ட கடுமையான காலநிலையை சமாளிக்க வாழ்க்கை போராடும் போது விண்கல் வருகை நிகழ்ந்துள்ளது. விண்கல் உருவாக்கிய தூசி துகள்கள் மேகமாக வளிமண்டலத்தை நிரப்பும்போது சூரிய ஒளியில் 20 சதவீதம் குறைய காரணமாகியதும், ஒளிசேர்க்கை நடக்காமல் இருந்ததினாலும் உயிரினங்களின் உயிர் பிழைத்தலை பாதித்திருக்கிறது. ஒரே நேரத்தில் நடந்த இந்த இரண்டு நிகழ்வுகளும் டைனோசர்கள் காணாமல் போனதற்குப் பின்னால் இருந்திருக்கலாம்.

இரிடியம் ஒழுங்கின்மை : 

1970 களின் பிற்பகுதியில், லூயிஸ் மற்றும் வால்டர் அல்வாரெஸ் என்ற ஒரு தந்தை மற்றும் மகன் குழு, Chicxulub பள்ளம் கண்டுபிடிப்பின் பின்னணியில் உள்ள விண்கல் கோட்பாட்டிற்கு மேலும் ஆதாரங்களைக் கண்டறிந்தனர். உலகின் பல பகுதிகளில் கிரெட்டேசியஸ்-பேலியோஜீன் பாறைகளுக்கு இடையே சேற்றில் காணப்படும் ‘இரிடியம்’ என்ற பொருளை இதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தினர். விண்கற்களில் ஏராளமாக உள்ள இரிடியம், பூமியின் மேற்பரப்பு பாறைகளில் அரிதாக உள்ளது. அதனால்தான் கிரெட்டேசியஸ்-பேலியோஜீன் எல்லையில் காணப்படும் இரிடியம் நிறைந்த மண் சகதிகள் ‘இரிடியம் அனோமலிஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.

புதிய கண்டுபிடிப்புகள் :
சிறுகோள்கள் வீழ்ச்சியும் உயிரின அழிவும் | Planet Destruction | Asteroid impact and extinction | எரிமலை | இரிடியம் | விண்கல் - சிறுகோள் - https://bookday.in/
                      C-வகை சிறுகோள்கள்

விண்கல் கோட்பாடு என்பது அங்கீகரிக்கப்பட்டாலும் எங்கிருந்து இந்த சிறு கோள் வந்தது என்பது கேள்வியாகவே இருந்தது. சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு  வேதியியல் மூலக்கூறு மேகம் சரிந்து உருவானது.  இவ்வாறு வெவ்வேறு வேதியியல் கலவைகள் கொண்ட சிறுகோள்கள் அந்த சரிவில் இருந்து உருவாகி, சூரிய குடும்பத்தில் இன்னும் உள்ளன.  சூரியனிலிருந்து தொலைவில் இருக்கும் சிறு கோளின் வளையத்திற்கு வெளியில் இருக்கின்ற C-வகை சிறுகோள்களில் அதிக அளவில் கார்பன், தாதுக்கள், நீர் அடங்கியிருக்கிறது. ஆனால் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள சிறுகோள், பெல்ட் சிலிக்கேட் கனிமங்களைக் கொண்ட S-வகை சிறுகோள்களின் தாயகமாகும்.

சிறுகோள்கள் வீழ்ச்சியும் உயிரின அழிவும் | Planet Destruction | Asteroid impact and extinction | எரிமலை | இரிடியம் | விண்கல் - சிறுகோள் - https://bookday.in/
                           S-வகை சிறுகோள்கள்

ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய சிறுகோள், வியாழனுக்கு அப்பால் இருந்து வந்த S-வகை சிறுகோள் என்று ‘சயின்ஸ்’ இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை மூலம் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர். டைனோசர்கள் காணாமல் போனதற்கான காரணங்களைத் தேடுவதுடன், பூமியின் வாழ்க்கைப் போக்கை மாற்றிய சிறுகோளின் வேதியியல் கலவையையும் அவர்கள் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளனர்.

பிளாட்டினம் குழு உலோகங்கள்: 

பிளாட்டினம் குழுவில் ஒரே மாதிரியான உடல் மற்றும் வேதியியல் பண்புகள் கொண்ட ருத்தேனியம், ரோடியம், பல்லேடியம், ஆஸ்மியம், இரிடியம் மற்றும் பிளாட்டினம் ஆறு உலோகங்கள் உள்ளன. டென்மார்க், இட்டலி, ஸ்பெயின் போன்ற இடங்களில் இருந்து கிடைத்த பாறையில் இருந்து ருத்தேனியம் கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் மற்ற விண்கல் பாறைகளின் வேதியல் கலவையும் அவர்கள் கவனித்தார்கள். நீர், சகதி, கார்பன் போன்றவற்றை உள்ளடக்கிய S வகை சிறுகோள் டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது.

சிறுகோள்கள் வீழ்ச்சியும் உயிரின அழிவும் | Planet Destruction | Asteroid impact and extinction | எரிமலை | இரிடியம் | விண்கல் - சிறுகோள் - https://bookday.in/
                                                          பிளாட்டினம் குழு உலோகங்கள்

இந்த ஆராய்ச்சியில் 470 முதல் 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த ஐந்து விண்கற்களும், 3.2 முதல் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மற்றொன்றும் அடங்கும். சிக்சுலப் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களில் அதிக அளவு ருத்தேனியம் இருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  மற்ற ஐந்து பள்ளங்களும் S வகை சிறுகோள்களால் ஏற்பட்டவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எழுதியவர் :

டாக்டர். குஷலா  ராஜேந்திரன்

தமிழில் : டயானா சுரேஷ்

நன்றி : தேசாபிமானி நாளிதழ்

ഛിന്നഗ്രഹ പതനവും വംശനാശവും
Read more: https://www.deshabhimani.com/articles/planet-destruction/1135112

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *