விந்தை வானில் உலா வரும் வினாக்கள் (வானியல் வினாக்களும் விடைகளும்)
– பேரா.சோ.மோகனா
வானவியல் என்பது அதிசயங்களின் உலகம் – ஒவ்வொரு கேள்வியும் புது இரகசியங்களைத் திறக்கிறது!
1. விண்வெளியில் அழுகை வந்தால் கண்ணீர் சிந்துமா?
பூமியில் கண்ணீர் கீழே சொரிவதற்கு காரணம் ஈர்ப்பு விசை (Gravity).விண்வெளியில் (microgravity அல்லது zero gravity)பூமியில் இருக்கும் இந்த ஈர்ப்பு விசை கிட்டத்தட்ட, விண்வெளியில் இல்லை எனலாம்..கண்ணீரை உருவாக்கும்:கண்ணீர் சுரப்பிகள் (Lacrimal glands)கண் இமை அசைவுகள். ஆனால், கண்ணீரை கீழே இழுக்கும் விசை இல்லாததால்,அது கண்ணைச் சுற்றி ஒரு கோள வடிவ திரவமாக மிதந்து கொண்டிருக்கும். ISS (International Space Station)-இல் உள்ள விண்வெளி வீரர்கள் இந்த செயல்பாட்டினை நேரடியாக அனுபவித்துள்ளனர்.
அறிவியல் கருத்து:திரவங்களின் நடத்தை ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் Surface tension மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.
2. சூரியன் உண்மையில் “எரிகிறதா”?
சூரியனில் நிகழ்வது, தீ போல எரிவது வேதியியல் எரிப்பு (chemical combustion) அல்ல. சூரியனின் மையத்தில் நடப்பது என்னவெனில், அணுக்கரு இணைவு அல்லது பிணைவு. (Nuclear Fusion)
செயல்முறை: சூரியனில் 4 ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைத்து ஒரு 1 ஹீலியம் அணுவாக மாறும். இதில் சிறிதளவு நிறை (mass) → E = mc² விதிப்படி-பேராற்றலாக மாறுகிறது.
சூரிய மைய வெப்பநிலை: 1.5 கோடி °C.அதனால் அங்கு ஆக்சிஜன் தேவையில்லை. அங்கு தீ எப்போதும் அணையவே அணையாது. சூரியன் இன்னும் 10 பில்லியன் ஆண்டுகள்வரை ஒளிரும்/எரியும். அதன் பின்னர் இறந்துவிடும். .
3. நிலவின் “இருண்ட பகுதி” என்பது உண்மையில் இருட்டா?
நிலவு பூமியைச் சுற்றும் காலமும்,நிலவு தன் அச்சில் சுழலும் காலமும், ஒரே நேர அளவு (27.3 நாட்கள்) உள்ளது. இதை Tidal locking என்பார்கள்.அதனால்,நிலவின் ஒரே பக்கம் மட்டுமே பூமியை நோக்கி இருக்கும். அதனைத்தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதன் அடுத்த பக்கம் நமக்குத் தெரியாது.ஆனால்: அந்த பக்கத்திலும் பகல்,இரவுஉண்டு.“Dark side” என்பது நாம் பார்க்காத பக்கம், நம் கண்ணுக்குத் தெரியாத பக்கம், ஒளியில்லாத பக்கம் அல்ல.
4. சனிக்கோளில் உண்மையில் நீந்த முடியுமா?
சனியின் சராசரி அடர்த்தி: 0.69 g/cm³ என்பதே. நீரின் அடர்த்தி: 1 g/cm³ அதனால், கோட்பாடாக சனியை நம் பூமியில் இருக்கும் நீரில் போட்டால் மிதக்கும என்பது நம் கற்பனை கருத்து. ஆனால் உண்மை என்னவென்றால், சனி ஒரு திட கோள் அல்ல.அது ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் ஆனது. மேலும் அதற்கு திட மேற்பரப்பும் இல்லை.ஆனால் ஈர்ப்பு விசை மிக அதிகம்
5. விண்மீன்கள் எங்கே பிறக்கின்றன/உருவாகின்றன?
வின்மீன்கள் பிறப்பது என்பது Nebulae எனப்படும் ,தூசி + வாயு மேகங்களில் தான். அவை பெரும்பாலும், ஹைட்ரஜன், ஹீலியம் கனமான மூலக்கூறுகள். செயல்முறையில், ஈர்ப்பு விசை வாயுக்களை சுருக்குகிறது. அதன் மையத்தில் வெப்பம் உயரும் . இதனால் Nuclear fusion துவங்கும். அதாவது ஹைடிரஜன் அணுக்கள் இணையும், இதுதான் புதிய விண்மீன் பிறக்கும்.உதாரணம்: Orion Nebula விண்மீன் பிறக்கும் பகுதி ஆகும்.
6. கருந்துளையில் விழுந்தால் என்ன நடக்கும்?
கருந்துளையின் அருகில் ஈர்ப்பு விசை மிக மிக அதிகம்
உடலின் முன்–பின் பகுதிகளில் விசை வேறுபாடு
இதையே Tidal force என்பார்கள்.இதனால்,உடல் நீளமாக இழுக்கப்படும்.அணுக்கள் வரை சிதறும்.இதற்கு Spaghettification என்று பெயர்.
7. பூமி சரியான உருண்டையாக இருக்கிறதா?
பூமி சுழலுவதால்,அதன் நடுக்கோட்டு பகுதியில் வெளிப்புற விசை இருக்கும், ஆனால் ,துருவங்களில் சற்று தட்டையான வடிவத்தில் உள்ளது.அதனால்: பூமி = Oblate Spheroid உருவத்தில் உள்ளது. அதன் நடுகோட்டின் , விட்டம்,துருவ விட்டத்தை விட ~43 km அதிகம்.
8. விண்வெளியில் ஒலி ஏன் கேட்காது?
ஒலி பரவ, காற்று / திரவம் / திடம் என ஏதாவது ஓர் ஊடகம் தேவை.விண்வெளியில்: வெற்றிடம் (Vacuum) தான் உள்ளது. எனவே அங்கு ஒலி பரவாது . ஆனால்,மின்காந்த அலைகள்,பிளாஸ்மா அதிர்வுகள் உண்டு — அவற்றை கருவிகள் பதிவு செய்துள்ளன.
.
9. விண்வெளிக்கு “மணம்” உண்டா?
இது என்ன வினோதமா வினா? விண்வெளி வீரர்கள் கூறியது:
விண்வெளியில் இருந்து வந்த உடைகளில்,Polycyclic Aromatic Hydrocarbons (PAHs)இவை: விண்மீன் வெடிப்புகளில் உருவாகும்,கரி, உலோகம் போன்ற மணத்தை தரும்.இது நேரடி “மணம்” அல்ல,வேதியியல் சேர்மங்களின் விளைவுதான்.
.10. சூரியன் மறைந்தால் உடனே என்ன நடக்கும் /ஆகும்?:
சூரிய ஒளி பூமியை அடைய, 8 நிமிடம் 20 விநாடிகள் ஆகின்றன. அதனால் அதனால்:ஒளியும் ஈர்ப்பு தாக்கமும்அவ்வளவு நேரம் தொடரும்.ஆனால் 8 நிமிடத்திற்கு பின்ஒரே ஒரே கும்மிருட்டான இருள் தான். வெப்பம் குறைவு; கோள்களின் பாதை சிதைவு
இது Relativity விதிகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டு.
.
11. விண்வெளியில் நேரம் பூமியை விட மெதுவாக ஓடுமா?
ஆம். இது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு ( Relativity theory) விதி.
வேகம் அதிகமான இடங்களிலும், ஈர்ப்பு விசை அதிகமான இடங்களிலும் நேரம் மெதுவாக செல்கிறது.ISS விண்வெளயில் சுற்றிக்கொண்டு இருக்கும் விண்வெளி வீரர்கள் பூமியைவிட மில்லி விநாடிகள் குறைவாக வயதாகிறார்கள்.
12. ஒரு விண்மீன் ஏன் திடீரென வெடிக்கிறது?
ஆம் சில சமயம் விண்மீன்கள் திடீரென வெடிக்கின்றன. அப்படி ஒரு விண்மீன் வெடிப்பதை, அந்த நிகழ்வை, அதிலிருந்து வரும் ஒளியை Supernova வெடிப்பு என்கிறோம். விண்மீனின் எரிபொருள் முடிந்தவுடன் ,உள் ஈர்ப்பு விசை > வெளிப்புற அழுத்தம் அதிகமாகும். உடனே விண்மீனின் மையம் சுருங்கி, வெளிப்புற பகுதி வெடிக்கும். இதிலிருந்துதான் தங்கம், யூரேனியம் போன்ற கன உலோகங்கள் உருவாகின்றன.
13. விண்வெளியில் நம் இரத்தம் எப்படி நடந்து கொள்ளும்/இருக்கும் ?
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால், இரத்தம் கீழே செல்லாது/ கொட்டாது. இதனால்:முகம் வீங்கும். கால்கள் சுருங்கும்.இதற்கு Fluid Shift என்று பெயர்.
14. சூரிய குடும்பத்திற்கு வெளியே கோள்கள் உள்ளனவா?
ஆம் உண்டு. அவை நம் சூரிய குடும்பத்திக்கு வெளியே இருப்பதால், அவற்றை வெளிக்கள (Exoplanets).என அழைக்கிறோம். இன்றுவரை 6,500+ வெளிக்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.சில கோள்களில்:நீராவிமேகங்கள் கூட இருக்கின்றனர். கூடவே வாழ்க்கைக்கு ஏற்ற சூழலும் கூட இருக்கலாம்.
15. ஒரு கோள் “வாழ்க்கைக்கு ஏற்றது” என்பதை எப்படி கண்டறிவார்கள்?
கோள்களில் நாம் வாழ மூன்று முக்கிய அம்சங்கள் தேவை.:திட நீர்.திரவ நீர்,சரியான வெப்பநிலை (Habitable Zone). வளிமண்டலம். இந்த வளையத்தை Goldilocks Zone என்பார்கள்.
16. விண்வெளியில் தீ ஏன் எரியாது?
முழுமையான எடை இல்லாமை இல்லை.
ISS-ல் இருப்பவர்கள் Free fall நிலையில் இருப்பதால் எடை இல்லாதது போல உணர்கிறார்கள்.
17. கருந்துளை எல்லாவற்றையும் விழுங்குமா?
இல்லை.கருந்துளை ஒரு “வெற்றிட வில்லன்” அல்ல.நாம் சூரியனை கருந்துளையாக்கினாலும்,பூமியின் பாதை மாறாது – ஈர்ப்பு அதேதான்.
18. விண்வெளி உண்மையில் கருப்பா?
விண்வெளி உண்மையில் கருப்பு இல்லை.அதில் ஒளி இருக்கிறது.நம் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. மேலும் (Infrared, X-ray போன்ற அலைகள்) உள்ளன.
19. ஏன் வானம் நீலமாக தெரிகிறது?
Rayleigh Scattering.சூரிய ஒளியில் உள்ள நீல அலைநீளம் அதிகமாக சிதறுகிறது.
20. சூரியன் என்றாவது ஒருநாள் அணைந்து போகுமா?
பதில்:ஆம்.ஆனால் இப்போது அல்ல. இன்னும் சுமார் 5 பில்லியன் ஆண்டுகளில். அப்போது சூரியனில் உள்ள அனைத்து எரிபோருளுளும் தீர்ந்து போய், சூரியன் Red Giant ஆகிமாடிவிடுகிறது. அதன் பின்னர்,பிறகு White Dwarf ஆக மாறும்.
21. நிலவில்லாமல் இருந்தால் பூமி எப்படி இருக்கும்?
கடல் அலைகள் குறையும்;பூமியின் அச்சு நிலை குலையும்
பருவ காலங்கள் சீர்குலையும் .நிலவு பூமியின் “நிலைத்தன்மை காவலன்”.
22. விண்வெளியில் திசை உணர்வு இருக்குமா?
விண்வெளியில், மேல்–கீழ் என்ற கருத்தே இல்லை.திசை என்பதும் கூட ஒரு கற்பனைதான விஷயம்தான். நாம் சூரியன் தெரிவதை வைத்து உருவாக்கியது . அதனால், விண்வெளியில் திசை அறிய, விண்வெளி வீரர்கள் பயிற்சி பெற வேண்டும்.
23. விண்வெளி விரிவடைகிறதா?
ஆம்.ஒவ்வொரு நொடிக்கும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இந்த செயல்பாடு Cosmic Expansion என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் Dark Energy தான் .
24. Dark Matter என்றால் என்ன?
Dark Matter என்பது ஒளியை வெளியிடாது.ஆனால் அதற்கு மிக தீவிரமான ஈர்ப்பு விசை உண்டு.மொத்த பிரபஞ்சத்தின் 27% Dark Matter.
25. பிரபஞ்சம் எவ்வளவு பெரியது?
நாம் பார்க்கக் கூடிய பிரபஞ்சம் (Observable Universe) விட்டம், 3 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு நீளம் /தூரம்
26. விண்வெளியில் விண்வெளி வீரர்கள்/நாம் அங்கிருந்தால் தூக்கம் எப்படி?
சுவர், மேல்தளம் என்றே இல்லை .உடலை கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்.
27. சூரியனுக்கு “ஒலி” உண்டா?
உண்டு.அது Helioseismology மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.
28. விண்வெளியில் விதைகள் வளருமா?
விண்வெளியில் விதைகள் ISS-ல் வளர்க்கப்பட்டுள்ளன. ஆனால் பூமி போல இல்லை.
📚 எழுதியவர்:

– பேரா.சோ.மோகனா
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
