ஆதியூர் விஜயா - பா. ஜோதி நரசிம்மன்

“அய்யோ காவல்துறையின் அடாவடித்தனம் காட்டாறு போல ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கே”

‘அத்தியூர் விஜயா’
இந்நூலை வாசித்து என்ன எழுதுவது என்று தெரியாமல் மிரண்டு போய் இதோ இப்போது தூக்கமின்றி திண்டாடிக் கொண்டிருக்கிறேன். நேற்று இலங்கையின் தமிழ் மக்களின் வேர் அழுகல் செய்யப்பட்ட ‘ஒப்பாரி கோச்சி’ நூலை வாசித்து விட்டு கலங்கி நின்று, “சரி வேறு நூலை எடுப்போம்” என்று கையை நீட்டினால் காவல்துறையினரால் அதுவும் புதுச்சேரி காவலர்கள் அத்தியூர் விஜயாவை சீரழித்த இப்புத்தகம் கையில் வந்தது. இந்நூலை வாசித்து முடித்தத் தருவாயிலும் எங்கோ ஒரு மூளையில் இருளர் இன மக்கள் என்ன இன்னலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்களோ என்ற பதற்றம் தான் கண்ணுக்கு முன் கண்ணீராய் துளிர்த்து நின்றது. இனிமேல் செய்தித்தாளில் வாகனத் திருட்டு சம்பந்தப்பட்ட செய்தி வந்தால் அப்பாவி இருளர் இன மக்கள் தானே கண்ணுக்குள் வருவார்கள். பொய் கேசு கேள்வி பட்டிருப்போம். ஆனால் கேசு பெரும்பாலும் இருளர் மக்கள் மீதே இட்டுக்கட்டி அவர்களின் வாழ்வியலை துரத்துகிறது என்றால் மனித வாழ்வு எவ்வளவு தரந்தாழ்ந்து கிடக்கிறது. இந்நூலில் திருட்டு கேசு ஒன்றிற்காக விஜயாவின் உறவினரைத் தேடி வரும் புதுச்சேரி போலீஸ் விஜயாவை ஆறு பேர் கொண்ட காவலர்கள் விஜயாவின் பெற்றோரை போலீஸ் வாகனத்தில் உட்கார வைத்துவிட்டு விஜயாவின் வீட்டில் விஜயாவை சீரழித்தக் கொடூரம் மனதை பதைபதைக்கிறது. அத்தியூர் விஜயா அவர்கள் எப்படி போராடினார்; அவருக்குப் பக்கபலமாக ஏன் முழுவதும் உடனிருந்து ஆறு கயவர்களுக்கும் ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தவர் கல்வியாளர் பேராசிரியர் கல்யாணி அவர்கள் எனும்போது ஒருபக்கம் மன ஆறுதல் கொண்டது. நான் 1992-95 வாக்கில் செய்தித்தாளில் இசீசெயீதியை வாசித்த ஞாபகம் வந்து போனது. நான் பிறந்த மாவட்டமான விழுப்புரம், அதுவும் பிறந்த ஊருக்கு அருகாமையில் இவ்வளவு பெரியக் கொடுமை நடந்ததே என்று இப்போது புரிகிறது. ஆம் இப்போதும் இருளர் இன மக்கள் உள்ளுக்குள்ளே புலம்பெயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் செங்கல் சூளை போன்றவற்றின் ஓரத்தில் குணிய முடியாத அளவிற்கான கிழிந்தக் கீற்றில் குழந்தைகளின் முகங்கள் உரசும் நான்கு கொம்பு கொண்ட குடிசை இல்லாத குடிசையில். மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு அவர்கள் இந்நூலுக்கு சிறப்பான முகவுரை எழுதியிருக்கிறார்கள். அது இந்நூலுக்கு மிகவும் வலிமை சேர்க்கிறது. எழுத முடியவில்லை மேலதிக தகவல்களுக்கு இந்நூலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே.

இந்நேரத்தில் பேராசிரியர் கல்யாணி அவர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நூலை எழுதிய ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றியும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

*பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நிற்க

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

 

நூலின் தகவல்கள் 

நூல் : அத்தியூர் விஜயா

ஆசிரியர் : பா. ஜோதி நரசிம்மன்

வெளியீடு : யாப்பு வெளியீடு

முதல் பதிப்பு : டிசம்பர் 2023

நூலைப்பெற : 9080514506

 

நூலறிமுகம் எழுதியவர் 

இரா. சண்முகசாமி

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *