அத்து மீறல் | வி. அமலன் ஸ்டான்லி | விலை ரூ. 120

அறிவியல் நாவல். மிகவும் வித்தியாசமான படைப்பு. இது ஆய்வகங்கள் பற்றியது. ஆய்வக உயிரிகளின் கதையைப் பேசுகிறது. ஆய்வக எலிகள் என்பவை மனிதனை நோயிலிருந்து காக்க தன் உயிரை பரிசோதனைகளுக்கு பலியிடுகின்றன. அமலன் ஸ்டான்லி சொல்கிறார்.. அங்கேயும் காதல் உண்டு.

வெளிஆட்கள் உயிரிகள் நுழைய முடியாத பல்லடுக்குப் பாதுகாப்பை மீறி வெளியே இருந்து ஒரு ஆண் எலி ஆய்வகத்தின் அங்கமாகி ஆனால் கூண்டில் வாழப் பிடிக்காமல் தனித்து சுதந்திரமாய் திரியும் பெண் எலி மீது அலாதிகாதல் கொள்கிறது. பிறகென்ன திரைபடங்களை மிஞ்சும் திரில் காட்சிகள் ஆவணங்களை மிஞ்சும் அறிவியல் யதார்த்தங்கள்..

பேறுகாலம் 19-21 நாட்கள், 10 நாளில் செவிகளும், 12ம் நாள் கண்களும் திறக்கும். 3 வாரம் குட்டிகளுக்கு தாய் பாலூட்டும் என்றெல்லாம் புள்ளி விபரங்களும் வியப்பூட்டுகின்றன.
சுண்டெலியை காட்டின் தலைவனாய் ஏற்ற அமெரிக்க பூர்வகுடி கதையின் சுவாரசியம் அழகு. கிரிஅர்மெண்டலின் மரபியல் இறுதியாக வருகிறது. அந்த பெண் எலி உயிர்தியாகம் செய்யும் அந்த இறுதி அத்தியாயம் பரவசம் என்ன வித்தியாசமான அனுபவம்!