நூல் அறிமுகம்: ‘ஆதுர சாலை’ – சே.ப.மல்லிகா பத்மினி

‘ஆதுர சாலை’ நாவல் வடிவத்தில் இந்தியாவுக்கு, ஏன் இந்த உலகத்திற்கே, ஒரு மிக முக்கிய செய்தியைத் தாங்கி வந்துள்ளது. அலோபதி மருத்துவத்தைப் பற்றியும், குறிப்பாக ஆய்வுக்கூடங்களில் (Lab) நடப்பது என்ன என்பதைப் பற்றியும் நாவல் சொல்கிறது.
கதை முழுவதுமே நாயகன் கூறுவது போல அமைந்துள்ளது. ‘தம்பி’ என்றே அறியப்படும் நாயகன், ஆய்வுக்கூட பணியில் சேரும் புள்ளியில் கதை துவங்குகிறது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் அவனுக்கு பாடங்களை கற்றுத்தந்து கொண்டே இருக்கிறது.
இடையிடையே வரும் நினைவலைகள், கல்லூரிப்படிப்பு, சிறுவயது முதல் ஏற்பட்ட அனுபவங்கள், பழைய நண்பர்கள் வட்டம், தினசரி வாழ்க்கை போன்ற விவரணைகள் காலச்சக்கரத்தில் முன்னும் பின்னும் பயணித்தாலும், ஆசிரியர் நாவலைத் தொய்வின்றி சாதுரியமாகக் கையாண்டுள்ளார். அடுத்தது என்ன என்ற சஸ்பென்ஸ் தக்க வைக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில வரலாற்றுக் குறிப்புகள் கூறியிருக்கும் விதம், கதை ஓட்டத்தோடு இணைந்து இயல்பாக உள்ளது. பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுதும், நடந்து செல்லும் பொழுதும் வரும் ஊரைப்பற்றிய வர்ணனைகள் மனதை வருடி, நாவலுக்கு அழகூட்டியுள்ளன.
‘டாக்டர் அன்பு’ பாத்திரம் நாயகனுக்கு அரிய விஷயங்களை எடுத்துரைத்து, அவனுள் கேள்வித் தீயை மூட்டி நம் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது. நெடிய விளக்கங்கள் தேவைப்படக்கூடிய கடவுள், மரணம், சட்டம், கல்வி, பாரம்பரிய மருத்துவம் சிறுகச்சிறுக அழிக்கப்பட்டமை போன்ற கனத்த சிக்கலான விக்ஷயங்களை எளிய உதாரணங்களோடு விளக்கியிருப்பது அபாரம். சராசரி (average) மதிப்பீடு அடிப்படையில் எவரையும் நோயாளி ஆக்குவது எவ்வளவு அபத்தம் என்பதை நாவல் தெளிவாகப் புரிய வைக்கிறது.
பிறக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்த இடத்தில் குழந்தை பிறந்ததும், பிறக்க வேண்டிய சிசு சாகடிக்கப்பட்டதும் நாயகனை மட்டுமல்ல, நம்மையும் அதிர வைத்தது.
ஆய்வுக்கூட பணியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தந்த வலியினால் நாயகனுக்குள் கருக்கொண்ட எதிர்ப்புணர்வு, இரண்டு மாத கரு சிதைக்கப்பட்ட பொழுது முழுவதுமாக வெளிப்படுவதை நாவல் அருமையாக படம் பிடித்துள்ளது.
ஆதுரசாலை படிப்போரை நிச்சயம் உலுக்கி எடுக்கும். ‘சாலை’  நாவல் வடிவத்தில் இந்தியாவுக்கு, ஏன் இந்த உலகத்திற்கே, ஒரு மிக முக்கிய செய்தியைத் தாங்கி வந்துள்ளது. அலோபதி மருத்துவத்தைப் பற்றியும், குறிப்பாக ஆய்வுக்கூடங்களில் (Lab) நடப்பது என்ன என்பதைப் பற்றியும் நாவல்  சொல்கிறது.

பயனர்:- தமிழ் விக்கிப்பீடியா
அ.உமர் பாரூக்
கதை முழுவதுமே நாயகன் கூறுவது போல அமைந்துள்ளது. ‘தம்பி’ என்றே  அறியப்படும்
நாயகன், ஆய்வுக்கூட பணியில்  சேரும் புள்ளியில் கதை துவங்குகிறது. வாழ்க்கை
ஒவ்வொரு நாளும் அவனுக்கு   பாடங்களை கற்றுத்தந்து கொண்டே இருக்கிறது.
இடையிடையே வரும் நினைவலைகள், கல்லூரிப்படிப்பு, சிறுவயது முதல்  ஏற்பட்ட அனுபவங்கள், பழைய நண்பர்கள் வட்டம், தினசரி வாழ்க்கை போன்ற விவரணைகள் காலச்சக்கரத்தில்  முன்னும் பின்னும் பயணித்தாலும், ஆசிரியர்  நாவலைத் தொய்வின்றி சாதுரியமாகக் கையாண்டுள்ளார். அடுத்தது என்ன என்ற சஸ்பென்ஸ் தக்க வைக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில வரலாற்றுக் குறிப்புகள் கூறியிருக்கும் விதம், கதை ஓட்டத்தோடு இணைந்து இயல்பாக உள்ளது. பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுதும், நடந்து செல்லும் பொழுதும் வரும் ஊரைப்பற்றிய  வர்ணனைகள்  மனதை வருடி, நாவலுக்கு அழகூட்டியுள்ளன.
‘டாக்டர் அன்பு’ பாத்திரம் நாயகனுக்கு அரிய விஷயங்களை  எடுத்துரைத்து, அவனுள் கேள்வித்  தீயை மூட்டி நம் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது. நெடிய  விளக்கங்கள் தேவைப்படக்கூடிய கடவுள், மரணம், சட்டம், கல்வி, பாரம்பரிய மருத்துவம் சிறுகச்சிறுக அழிக்கப்பட்டமை  போன்ற கனத்த சிக்கலான விக்ஷயங்களை எளிய உதாரணங்களோடு விளக்கியிருப்பது அபாரம். சராசரி (average) மதிப்பீடு அடிப்படையில் எவரையும்  நோயாளி ஆக்குவது எவ்வளவு அபத்தம் என்பதை  நாவல் தெளிவாகப்  புரிய வைக்கிறது.
பிறக்க வாய்ப்பே  இல்லை என்று நினைத்த இடத்தில் குழந்தை பிறந்ததும், பிறக்க வேண்டிய சிசு சாகடிக்கப்பட்டதும் நாயகனை மட்டுமல்ல, நம்மையும் அதிர வைத்தது.
ஆய்வுக்கூட பணியில்  ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தந்த வலியினால் நாயகனுக்குள் கருக்கொண்ட எதிர்ப்புணர்வு, இரண்டு மாத கரு சிதைக்கப்பட்ட பொழுது முழுவதுமாக வெளிப்படுவதை நாவல் அருமையாக படம் பிடித்துள்ளது.
ஆதுரசாலை  படிப்போரை நிச்சயம் உலுக்கி எடுக்கும்.
சே.ப.மல்லிகா பத்மினி
சென்னை-24