ஓட்டோ எக்ஸ்டீன் (Otto Eckstein) ஆகஸ்ட் 1, 1927இல் பிறந்து மார்ச் 22, 1984இல் மறைந்த ஜெர்மன்-அமெரிக்க பொருளாதார அறிஞர் மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் போரசிரியராக பணியாற்றியுள்ளார். எக்ஸ்டீன், முக்கிய பணவீக்கத்தை (core inflation) அறிமுகப்படுத்தினார், இது நீ்ண்டகால பணவீக்கம், நிலையற்ற விலை போன்றவற்றை விளக்குகிறது. உணவு மற்றும் ஆற்றல் (energy) விலையானது எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் எனவே இதனை பணவீக்த்திலிருந்து விலக்கிட வேண்டும் என்ற கருத்தினை முன்மொழிந்தார். செலவு-பயன் பகுப்பாய்வு, பணவீக்கக் கோட்பாடு மற்றும் பொது நிதி போன்ற தலைப்புகளில் எக்ஸ்டீனின் ஆய்வுக் களங்கள் விரிந்து காணப்பட்டது.
1964ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜான்சனால் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட உள்நாட்டுத் திட்டங்களின் தொகுப்பான கிரேட் சொசைட்டிக்கான கூலி-விலை வழிகாட்டுதல்களை வகுக்கவும் பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கவும் எக்ஸ்டீன் உதவினார். 1968ஆம் ஆண்டில், எக்ஸ்டீனும் டொனால்ட் மாரோனும் Data Resources Inc. என்ற நிறுவனத்தை நிறுவினர், இது கணினிமயமாக்கப்பட்ட பொருளாதார முன்னறிவிப்பில் முன்னோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.hollisarchives.lib.harvard.edu; www.library.harvard.edu/services-tools/hollis-archival-discovery
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

