வில்லியம் ஹரோல்ட் ஹட் (William Harold Hutt) ஆகஸ்ட் 3, 1899இல் பிறந்து ஜூன் 19, 1988இல் மறைந்த பிரித்தானிய நாட்டினை சார்ந்த தொன்மைப் பொருளாதார அறிஞர் ஆவார். புகழ்பெற்ற The Economics of the Colour Bar என்ற புத்தகத்தை 1964இல் வெளியிட்டார், இதில் தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சிக்குத் தாராளவாத பொருளாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். வில்லியம் ஹட், கீனிஸிய பொருளாதார வல்லுநர்களின் வழங்கலான தலையீட்டுத் கொள்கைகளுக்கு எதிராகப் போட்டி சந்தையினை ஆதரித்தார். மேலும் தனிப்பட்ட தொழிலாளியின் தொழிலாளர் சந்தைத் தேர்வுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் தொழிற்சங்க வாதிகளின் ஏகபோக நடைமுறைகளுக்கு எதிராக வாதிட்டார். போட்டியைத் தாமதப்படுத்தும் மற்றும் ஒரு சிலருக்குச் சலுகைகளை வழங்கும் ஒழுங்குமுறைக் கொள்கைகளுக்கு எதிராக இருந்தார். வில்லியம் ஹட், தென்னாப்பிரிக்காவில் அரசு திணித்த இனவெறியின் துயரத்திற்கு ஒரு தீர்வாகச் சுதந்திரமான மனிதர்கள் மற்றும் சுதந்திர சந்தைகளுக்கான தொன்மைவாத தாராளவாத நிலையினை ஆதரித்தார்.
ஹட்டின் 1926ஆம் ஆண்டு, அவர் தனது முதல் கட்டுரையான, The Factory System of the Early Nineteenth Century -ஐ வெளியிட்டார், 1939ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகமான, The Theory of Idle Resources, ஜே.எம்.கீன்ஸின் முக்கிய வெளியினடான The General Theory of Employment, Interest, and Money-க்கு பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்டது. ஹட் கீன்ஸின் சிந்தனையின் அடித்தளத்தைத் தகர்த்தார். போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நெகிழ்வான ஊதியங்கள் மற்றும் விலைகளின் அமைப்பு, எப்போதும் மாறிவரும் விநியோகங்கள் மற்றும் கோரிக்கைகளின் சரிசெய்தல் மற்றும் ஒருங்கிணைப்பை எவ்வாறு உறுதி செய்கிறது என்பதையும், நிதிநிலை பற்றாக்குறைகள் மற்றும் பண விரிவாக்கம் ஒரு மாயையான செழிப்பை உருவாக்கியது என்பதையும், அது உண்மையான சரிசெய்தலைத் தாமதப்படுத்தி, பணவீக்கம் மற்றும் பொறுப்பற்ற அரசாங்க செலவினங்களுடன் எப்போதும் தீங்கு விளைவிக்கும் அதிக அளவிலான மற்றும் பொருளாதார சிதைவுகளை உருவாக்கும் என்பதையும் அவர் நிரூபித்தார்.
தனிப்பட்ட தொழிலாளிக்குத் தலையிடாக் கொள்கை தீங்கு விளைவிக்கும் என்பது தவறான நம்பிக்கை என்று ஹட் கூறினார். அந்த நம்பிக்கை அவரது The Theory of Collective Bargaining (கூட்டமைப்பு பேரம் பற்றிய கோட்பாடு) 1930இல் வெளியிடப்பட்டதும் 1973இல் The Strike-Threat System (வேலைநிறுத்த-அச்சுறுத்தல் அமைப்பு) வெளியிடப்பட்டதுமான புத்தகங்களில் இதைப்பற்றி விரிவாக விளக்கியுள்ளார். தனிப்பட்ட தொழிலாளியின் பொருள் முன்னேற்றத்திற்கான மிக முக்கியமான வாய்ப்பு தடையற்ற தொழிலாளர் சந்தை என்பதை ஹட் நிரூபித்தார், அதன் மீது முதலாளிகள் ஒருவருக்கொருவர் எதிராக அவரது சேவைகளை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர். குறைபாடுள்ள பொருளாதாரக் கோட்பாடு மோசமான பொருளாதாரக் கொள்கைக்கு வழிவகுத்தது என்றும் ஹட் வாதிட்டார். இதுவே அவரது இரண்டு படைப்புகளான Economists and the Public (1936) மற்றும் Politically Impossible? (1971) ஆகியவற்றின் கருப்பொருளாக இருந்தது, இது பொதுத் தேர்வு மரபிற்கு மிகவும் ஒத்துப்போகிறது.
சந்தைப் பொருளாதாரம் “சிறந்த சமநிலைப்படுத்தி” என்று அவர் வாதிட்டார். புதிய மற்றும் இளம் போட்டியாளர்களின் சவாலின் கீழ் நிறுவப்பட்ட செல்வம் மறைந்து போகக்கூடும். ஏழைகளாக இருந்தவர்கள் நுகர்வோரைச் சிறப்பாகத் திருப்திப்படுத்த வழிகளை வகுக்க முடிந்தால் செல்வந்தர்களாக உயர முடியும், அதே நேரத்தில், முதலாளித்துவ முன்னேற்றம் தேர்வுக்கான எல்லையை விரிவுபடுத்தியது மற்றும் அனைவருக்கும் செழிப்புக்கான அடித்தளத்தை விரிவுபடுத்தியது. வில்லியம் எச். ஹட் தனது வாதங்களின் கூர்மையான விளிம்புகளைச் சமரசம் செய்யவில்லை அல்லது குறைக்கவில்லை. ஹட்டை நினைவுகூர்ந்த சிலரின் கூற்றுப்படி, அவர் எப்போதும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக மென்மையான இதயத்தைக் கொண்டிருந்தார் என்று குறிப்பிடுகின்றனர்.
ஆதாரம்: www.aier.org ; www.fee.org ; www.liberalism.co.za
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

