தாமஸ் ஹைக்லாக் (Thomas Hyclak) ஆகஸ்ட் 4, 1947இல் பிறந்த அமெரிக்காவைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவரது பெரும்பாலான ஆராய்ச்சிகள் தொழிலாளர்கள், நகர்ப்புற-பிராந்திய பொருளாதாரம் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. பிராந்திய வேலையின்மை, ஊதியம் மற்றும் வருமான சமத்துவமின்மை, பாலினம் மற்றும் இன ஊதிய வேறுபாடுகள் மற்றும் மனித வள மேலாண்மை நடைமுறைகள் குறித்து அவர் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக Rising Wage Inequality: the 1980s Experience in Urban Labour Markets மற்றும் Fundamentals of Labour Economics பேன்ற புகழ்மிக்க புத்தகங்களின் ஆசிரியர் ஹைக்லாக் என்பது குறிப்பிடத்தக்கது.
The Rich Get Richer (2023) என்ற தனது புத்தகத்தில், அமெரிக்கா மிகவும் சமமற்ற ஊதியம் மற்றும் வருமான விநியோகங்களைக் கொண்டிருப்பதற்கும், அடுத்த தசாப்தங்களில் சமத்துவமின்மையின் மேலும் வேகமாக உயரும் என்று கனித்துள்ளார். இப் பிரச்சனை நீண்ட காலமாக வளர்ந்து வருவதாகவும், சில காலமாகக் கல்வி ஆர்வத்தின் பொருளாக இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே சமத்துவமின்மை கணிசமான பொது கவனத்தை ஈர்த்துள்ளது மேலும் இது ஒரு அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம்: www.independent.academia.edu; www.doc.cerdi.uca.fr; www.worldscientific.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

