ஆகஸ்ட் 08 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பீட்டர் ஷ்மிட் & ஸ்டூவர்ட் எச். ஆல்ட்மேன் (Economist Peter Schmidt & Stuart H.Altman Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 08 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பீட்டர் ஷ்மிட் & ஸ்டூவர்ட் எச். ஆல்ட்மேன் – முனைவர் பு. அன்பழகன்

1. பீட்டர் ஷ்மிட் (Peter Schmidt) ஆகஸ்ட் 8, 1947இல் பிறந்த அமெரிக்க நாட்டினை சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் பொருளாதார அளவியல் நிபுணர் (econometrician) ஆவார். பீட்டர் ஷ்மிட் நான்கு தசாப்தங்களாக இந்தத் துறையில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் மதிக்கப்படும் பொருளாதார அளவியல் நிபுணர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் தனது திறமைகளைப் பல அறிவார்ந்த வெளியீடுகள் மற்றும் சமூகங்களுக்குக் கொண்டு வந்துள்ளார். 150 புகழ்மிக்க கட்டுரைகளை முன்னணி இதழ்களில் அவர் வெளியிட்டுள்ளார். 1976இல் Econometrics என்ற பாடபுத்தகத்தை வெளியிட்டார். பீட்டர் ஷ்மிட் புகழ்பெற்ற பல்வேறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

பீட்டர் ஷ்மிட் பொருளாதார அளவியல் துறையின் வளர்ச்சியில் ஒரு அடித்தளமான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை அளித்துள்ளார். பீட்டர் ஷ்மிட் 1982இல் Econometric Reviews இதழ் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவரது கருத்துக்கள் எப்போதும் நியாயமானதாகவும், தகவலறிந்ததாகவும், தெளிவாகவும், தீர்க்கமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் புலமைக்கு மரியாதை செலுத்துவது அவரது இயல்பாகும். பீட்டர் ஷ்மிட்டின் நினைவாக எக்கனோமெட்ரிக் ரிவியூஸ் சிறப்பு இதழை வெளியிட்டுள்ளது. நேரத் தொடர் பொருளாதார அளவீடுகள், குழு தரவு பொருளாதார அளவீடுகள் மற்றும் உற்பத்தியின் சீரற்ற எல்லை பகுப்பாய்வு போன்றவை அவரின் முக்கிய வழங்கல்கள் ஆகும்.

ஆதாரம்: www.tandfonline.com

****************************

2. ஸ்டூவர்ட் எச். ஆல்ட்மேன் (Stuart H.Altman) ஆகஸ்ட் 8, 1937இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர், அவரது முதன்மையான ஆராய்ச்சி, கூட்டாட்சி மற்றும் மாநில சுகாதாரக் கொள்கைத் தொடர்பானதாகும். இது தொடர்பாக அவர் ஏராளமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆல்ட்மேன் சுகாதாரத் துறையில் ஒரு புகழ்பெற்ற நிபுணராக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஆல்ட்மேன் ஒரு அரசு அதிகாரியாகவும், அரசு ஆலோசனைக் குழுக்களில் பங்கேற்றும், அரசு சாரா கொள்கை மற்றும் ஆராய்ச்சி குழுக்களிலும் ஈடுபட்டும் சுகாதாரத்திற்காக பெரும் பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.

ஸ்டூவர்ட் ஆல்ட்மேன், அமெரிக்காவின் சுகாதாரப் பாதுகாப்பு வரலாறு குறித்த Policies for an Ageing Society என்ற புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆவார். இந்த புத்தகம் பொது மற்றும் சுகாதாரக் கொள்கை, பொருளாதாரம், சட்டம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் நிபுணர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பதிவுசெய்துள்ளது. இத்துடன் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காணவும் யதார்த்தமான விருப்பங்களை ஆராயவும் இப் புத்தகம் உதவுகிறது. Power. Politics, and Unversal Health Care (2011) என்ற அவரது மற்றொரு புத்தகம், 20ஆம் நூற்றாண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் சுகாதாரப் பாதுகாப்பு வரலாற்றை விளக்குகிறது, இறுதியில் ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் வைக்கிறது. ஸ்டூவர்ட் ஆல்ட்மேன் 2018ஆம் ஆண்டு சமூக காப்பீட்டில் சிறந்த சாதனைகளுக்கான ராபர்ட் எம். பால் விருதைப் பெற்றுள்ளார்.

ஆதாரம்: www.brandeis.edu; www.nasi.org; www.premierespeakers.com; www.executivespeakers.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *