ஆகஸ்ட் 1 : உலக நுரையீரல் புற்றுநோய் தினம்
நம்மில் பலர் நுரையீரல் புற்றுநோய் பற்றிய முழு விவரங்களையும் விழிப்புணர்வையும் பெற்றிருக்க மாட்டார்கள்…. எய்ட்ஸ்,டெங்கு, இரத்த தானம் தெரிந்த அளவுக்கு குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் பற்றி அறிவதில்லை…. நுரையீரல் புற்றுநோயும் பெரிய அளவில் பாதிக்க கூடிய ஒரு உயிர்க்கொல்லி நோயாகும்…. இந்த நோயால் வருடத்திற்கு இரண்டு மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இறப்பு விகிதம் இரண்டு மில்லியன் ஏன் அதற்கு மேல் கூட உள்ளது… நுரையீரல் புற்றுநோய் மிகவும் கடினமான நோயே ஆகும். இதிலும் பலவகையான காரணங்கள் வித்தியாசமான அறிகுறிகள் என உள்ளது. இதில் இரண்டு வகைகள் அதிக அளவில் பாதிக்க கூடிய வகைகளாகும்…
1.Small cell lung cancer
2.Non – small cell lung cancer
இந்த Small cell lung cancer ஆல் நூற்றுக்கு 15% பாதிக்கப்படுகிறார்கள் இது மிகவும் அரிதானதாகும் ஆனால் மிகவும் கொடியது…. Non-small lung cancer ஐ விட கடினமாக பாதிக்கக்கூடும்…. இது நம் நுரையீரலில் Bronchi என்ற இடத்தில் இருந்து உருவாகிறது….
Non – small cell lung cancer இந்த நோய் நூற்றுக்கு 85% பாதிக்கப்படுகிறார்கள்….. இதில் மூன்று வகைகள் உள்ளது…
1.Adenocarcinoma – இது சாதாரணமானது நுரையீரல் வெளிப்புறம் பாதிக்கும் குறிப்பாக பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள்…
Squamous Cell carcinoma இது அதிகமாக Bronchus என்ற மூச்சுக்குழாயை பாதிக்கும்…. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக புகைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள்….
Large cell carcinoma இது நுரையீரலில் எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கும்…..

அறிகுறிகள்
1.விடாப்பிடியான் இருமல்
2.சுவாசப்பிரச்சனை (சின்ன வேலை செய்தால் கூட மூச்சு வாங்குதல்)
3.மாதக்கணக்காக நெஞ்சுவலி
4.ஏதும் இன்றி திடீர் எடைக்குறைவு
5.ஆற்றல் குறைவாக உணர்தல்
6.இருமலுடன் கூடிய இரத்த வாந்தி
7.குரல் கரகர வென்று மாறுதல் (மூச்சுக்குழாய் பாதிப்பதால் இந்த மாற்றம் ஏற்படும்)
காரணங்கள்
1. 85% புகைப்பிடித்தல்
2. Passive smoking (புகைப்பிடிப்பவருடன் இருத்தல்)
Occupational exposure (textile and product manufacturing)
Occasional exposure ( working in mining constructions)
நிறுவனங்கள் சணல்,பட்டு மற்றும் சுரங்க வேலை போன்ற இடங்களில் வேலை செய்வது….
3. சுற்றுப்புற சூழலின் மூலமாக வருதல் (Environmental factors)
4. Genetics (மரபனு)
:max_bytes(150000):strip_icc()/GettyImages-183029444-570e9f433df78c7d9e56800a.jpg)
தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. Chemical preservatives (உணவு கெட்டுப்போகாமல் பாதுகாக்க கலக்கப்படும்) கலந்த உணவை குறைப்பது நல்லது.
2. அதிகமாக சர்க்கரை அதாவது இனிப்பு பண்டம் சாப்பிட கூடாது
3. அதிகமான கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட கூடாது
4. மது, புகையிலை, பொருட்களை தவிர்க்கவும்
சாப்பிட வேண்டிய உணவுகள்
1. பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கிழங்கு அதிக Fybere content உள்ள உணவை சாப்பிடலாம்
2. மஞ்சள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்
3. Nuts and seeds சாப்பிடலாம்
பெரிய ஆசிரியாராக இருந்தாலும் சரி திரைக்கலைஞனாக இருந்தாலும் சரி எவராக இருந்தாலும் இந்த மது,புகையிலை, புகைப்பிடித்தல் போன்ற பழக்கம் இயல்பாகவே சர்வசாதாரணமாக உள்ளவர்காக உள்ளார்கள்…. இதனால் அவர்கள் மட்டும் அல்லாது சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்…. மனவலிக்கும் மகிழ்ச்சிக்கும் மதுவோ புகையோ ஒரு தீர்வை தராது….
எழுதியவர்:
சங்கீதா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நுரையீரல் புற்று பற்றிய சங்கீதா அவர்களின் கட்டுரை, பயனுள்ள நல்ல கட்டுரை; வாழ்த்துகள்.