ஹார்வி லீபென்ஸ்டீன் (Harvey Leibenstein) ஆகஸ்ட் 11, 1922இல் பிறந்து பிப்ரவரி 28, 1994இல் மறைந்த உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார நிபுணர். பொருளாதாரத்திற்கு அவர் அளித்த மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, X-inefficency and the critical minimum effort thesis in development economics (எக்ஸ்-திறனின்மை மற்றும் வளர்ச்சி பொருளாதாரத்தில் முக்கியமான குறைந்தபட்ச முயற்சி ஆய்வறிக்கை) ஆகும். லீபென்ஸ்டீன் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி (1951–1967) மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் (1967–1992) பேராசிரியராகப் பணியாற்றினார். லீபென்ஸ்டீன் தொடக்கத்தில் பணிகள் பொருளாதார வளர்ச்சியில் மக்கள்தொகையின் பங்களிப்பினை ஆய்விட்டார், பின்னர், மனிதர்கள் அறிவார்ந்த முடிவெடுத்தல் பற்றி அவரது கவனம் திரும்பியது. லீபென்ஸ்டீனின் முதல் புத்தகம், A Theory of Economic-Demographic Development, 1954இல் வெளியிடப்பட்டது, இரண்டாவது புத்தகம், Economic Backwardness and Economic Growth, 1963இல் வெளியிடப்பட்டது.
அன்மை ஆண்டுகளில் Behavioural Economics (நடத்தை பொருளாதாரம்) பற்றி ஆராய்ந்த முதல் பொருளாதார நிபுணர்களில் லீபென்ஸ்டீனும் ஒருவர். இது அவரது எக்ஸ்-செயல்திறன் கோட்பாட்டின் வளர்ச்சியின் மூலம் விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வளர்ச்சியின் காரணமாகவும் விளைவாகவும் ஊட்டச்சத்து உள்ளீடுகளைப் பயன்படுத்துவதில் லீபென்ஸ்டீன் முன்னோடியாக இருந்தார். உண்மையில், மூலதன உள்ளீடுகளைக் காட்டிலும் அதிக சராசரி வருமானங்களைக் குறிக்க “வளர்ச்சி” என்ற வார்த்தையை லீபென்ஸ்டீன் அதிகளவில் பயன்படுத்தினார்.
லீபென்ஸ்டீன் Micro Micro என்ற அமைப்பினை நடத்தை உளவியலில் அடிபிபடையில் உருவாக்கினார். இந்த அமைப்பு தனிப்பட்ட தொழிலாளர்கள் என்ன உற்பத்தி செய்ய முடியும், அவர்களின் வேலைகளைத் தக்கவைக்க என்ன தேவை, மற்றும் அவர்கள் என்ன விரும்புவார்கள் என்ற மூன்று நிலைகளின் அடைப்படையில் செயல்பட உதவியது. மிக உயர்ந்ததை விட மிகக் குறைந்ததை அதிகரிப்பதை விவரிக்க அவர் “எக்ஸ்-செயல்திறன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். தனிப்பட்ட தொழிலாளர்களின் அணுகுமுறைகளை மட்டுமல்ல, அடையாளம் காணப்பட்ட மூன்று வெளியீட்டு நிலைகளுக்கு இடையிலான வேறுபாடுகளானது தொழிலாளர் குழுக்கள் எவ்வாறு நிலையை பாதிக்கும் என்பதை விளக்கியுள்ளார். ஜார்ஜ் ஜே. ஸ்டிக்லர், X-Efficiency Theory and Economic Development (1978), மற்றும் Inflation, Income Distribution and X-Efficiency (1980) வெளியிட்டக் கட்டுரைகளில் இவற்றைப் பற்றி மேலும் விரிவாக விளக்கியுள்ளார்.
ஆதாரம்: www.encyclopedia.com; www.hup.harvard.edu
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

