டேவிட் எர்னஸ்ட் வில்லியம் லைட்லர் (David Ernest William Laidler) ஆகஸ்ட் 12, 1938இல் பிறந்த ஆங்கில-கனடிய பொருளாதார அறிஞர் ஆவார், அவர் பணவியல் துறையில் முன்னணி அறிஞர்களில் ஒருவர் ஆவார். புகழ்பெற்ற பணவியல் அறிஞரான மில்டன் பிரிட்மேனிடம் ஆய்வு உதவியாளராக லைட்லர் பணியாற்றினார். University Of Western Ontario இல் நீண்டகாலம் போரசியராகப் பணியாற்றினார்.
தொன்மைப் பொருளாதாரம், புதிய-தொன்மைப் பொருளாதாரம், கீன்ஸிய பணவியல் பொருளாதாரம் போன்ற தளங்களில் அதிக ஆர்வத்துடன் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். குறிப்பாக, இவை வட அமெரிக்க, கன்னடா நாடுகளுடன் தொடர்புப்படுத்தி விளக்கினார். லைட்லர், பணத்தேவை, பண அளவுக் கோட்பாடு, பணம் மற்றும் பெயரளவு வருமானத்திற்கும் உள்ள உறவுகள், பிலிப்ஸ் வலைகோடு, பணவியல் நோக்கில் செலுத்துநிலை இருப்பு, பணக்கொள்கை போன்றவற்றில் அவருடைய எழுத்துக் களம் அமைந்துள்ளது.
அவரது புத்தகமான, The Demand for Money, 1969முதல் 1993வரை நான்கு பதிப்புகளில் வெளியிடப்பட்டது, ஆரம்பத்தில் வருமானத்திற்கும் பணத்திற்கான தேவைக்கும் இடையிலான உறவின் உறுதித்தன்மையை முன்வைத்தது, பின்னர் பணத்திற்கான தேவையில் சட்ட, தொழில்நுட்ப மற்றும் நிறுவன மாற்றங்களின் விளைவுகளைக் கருத்தில் கொண்டது. இந்த புத்தகம் பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், ஜப்பானிய மற்றும் சீன மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
லைட்லர், 1990கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டு வரை (வில்லியம் பிபி ராப்சனுடன்) பணத்திற்கான தேவை குறித்த அவரது தொடர்ச்சியான பணி, 2004ஆம் ஆண்டில் சிடி ஹோவ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Two Percent Target: Canadian Monetary Policy Since 1991 என்ற புத்தகத்திற்காக டோனர் பரிசைப் பெற வழிவகுத்தது. அவரது மற்றொரு குறிப்பிடத்தக்க முக்கிய புத்தகம் Introducation to Macroeconomcis என்பதாகும்.
ஆதாரம்: www.catalogobiblioteca.unach இல்.
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

