ஜேசன் ஃபர்மன் (Jason Furman) ஆகஸ்ட் 18, 1970இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். ஜேசன் ஃபர்மன் ஹார்வர்ட் கென்னடி பள்ளி மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையுடன் இணைந்த பொருளாதாரக் கொள்கை பயிற்சி மையத்தின் பேராசிரியராக உள்ளார். ஃபர்மன் பொதுக்கொள்கையில், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ஒபாமாவின் உயர் பொருளாதார ஆலோசகராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். ஒபாமா நிர்வாகத்தின் பல முக்கியப் பொருளாதாரக் கொள்கைகளில் ஃபர்மன் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்தார். மேலும், ஃபர்மன் ஜனாதிபதி கிளின்டனின் கீழும் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதிக் கொள்கை, வரிக் கொள்கை, சுகாதாரப் பொருளாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பேரியல் பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் ஃபர்மன் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் ப்ராஜெக்ட் சிண்டிகேட்டில் போன்றவற்றில் ஃபர்மன் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார்.
ஜேசன் ஃபர்மனின் அறிவுசார், உலக அனுபவம் மற்றும் கொள்கை மீதான முக்கியத்துவம் ஆகியவை அவரை உலகின் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவராக மாற்றிய முக்கிய காரணிகளாக டைலர் அவரைப் பாராட்டுகிறார்.
ஆதாரம்: www.nytimes.com; www.cepr.org/about/people/jason-furman
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

