டத்துக் ரமேஷ் சந்தர் (Datuk Ramesh Chander) ஆகஸ்ட் 19, 1935இல் பிறந்து நவம்பர் 14, 2023இல் மறைந்த மலேசிய நாட்டினைச் சார்ந்த வளர்ச்சிப் பொருளாதார அறிஞர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆவார். ரமேஷ் சந்தர் சுதந்திர மலேசியாவிற்கான விரிவான மற்றும் பயன்பாட்டில் உள்ள புள்ளிவிவர அமைப்பை உருவாக்கித் தந்தவர் ஆவார். அவர் மலேசியா சுதந்திரம் அடைந்தபின்பு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பினை (1970) எடுப்பதற்கு பெரும் பங்களிப்பினை அளித்துள்ளார்.
அவரது நிபுணத்துவம் பரந்த அளவிலான சமூக-பொருளாதாரத் துறைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்தாக உள்ளது. 1977ஆம் ஆண்டில், உலக வங்கியின் புள்ளிவிவர ஆலோசகராகச் சேர அவர் அழைக்கப்பட்டார். வங்கியில், உலக வங்கியின் முதன்மை புள்ளிவிவர வெளியீடான உலக வங்கியின் புள்ளிவிவர சுருக்கத்தை அவர் வடிவமைத்தார். 1993ஆம் ஆண்டு தேசிய கணக்குகளின் அமைப்பு மற்றும் வீட்டுத் தரவுகளைச் சேகரிப்பதற்கான உலக வங்கியின் திட்டத்திற்கான வழிமுறை உள்ளிட்ட புள்ளிவிவர தரநிலைகளின் வளர்ச்சியிலும் அவர் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்தார்.
ஐ.நா., ஆசான் கூட்டமைப்பு போன்றவற்றிலும், கனடா, சீனா போன்ற நாடுகளிலும் முக்கிய பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். வளர்ச்சிக்கான தேசிய புள்ளிவிவர குறிக்கோள் என்பதை டத்தோ ரமேஷ் சந்தர் நிறுவினார். இது உலக வங்கியிடம் கடனைப் பெறும் அடிப்படையினை வெளிப்படுத்தியது, இதனை ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் உலக வங்கியிடம் கடன் பெற இதனைப் பயன்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.murrayhunter.substack.com; www.m.aliran.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

