ஆகஸ்ட் 20 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராஜேந்திர குமார் பச்சோரி (Economist Rajendra Kumar Pachauri Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 20 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராஜேந்திர குமார் பச்சோரி – முனைவர் பு. அன்பழகன்

ராஜேந்திர குமார் பச்சோரி (Rajendra Kumar Pachauri) ஆகஸ்ட் 20, 1940இல் பிறந்து பிப்ரவரி 13, 2020இல் மறைந்த இந்திய பொருளாதார அறிஞர் ஆவார். 1974ஆம் ஆண்டு தொழில்துறை பொறியியல் மற்றும் பொருளாதாரத்தில் இணைப் பாடங்களுடன் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் எரிசக்தி தேவை பற்றி முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். பச்சோரி 1981ஆம் ஆண்டு எரிசக்தி மற்றும் வள நிறுவனத்தின் (TERI) தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவர் அந்த நிறுவனத்தை வழிநடத்திச் சென்று மார்ச் 2016இல் TERIஇன் நிர்வாக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். TERI ஒரு சிறிய ஆவண மையமானது உலகளவில் பல நோக்கு பரிமாண ஆய்வு மையமாக உருவெடுக்க பச்சோரி பெரும் முயற்சியினை மேற்கொண்டு வெற்றியும் அடைந்தார். அவரது தலைமையின் கீழ், TERI காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளில் முன்னோடிப் பணிகளை மேற்கொண்டது.

ஏப்ரல் 2002 மற்றும் பிப்ரவரி 2015க்கு இடையில், பச்சௌரி 1988இல் உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் நிறுவப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் (IPCC) தலைவராகப் பணியாற்றினார். 2007இல், முன்னாள் அமெரிக்கத் துணைத் தலைவர் அல் கோருடன் இணைந்து IPCC சார்பாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் பள்ளியில் 2000ஆம் ஆண்டு இலையுதிர் கால செமஸ்டரில் மெக்ளஸ்கி ஃபெலோவாகக் கற்பித்தார். ஜூலை 2009 முதல் ஜூன் 2012 வரை யேல் காலநிலை மற்றும் எரிசக்தி நிறுவனத்தின் (YCEI) இயக்குநராகவும் இருந்தார்.

தேசிய அளவில், பச்சோரி இந்திய அரசாங்கத்தின் குழுக்களில் இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (ஜூலை 2001 முதல் மே 2004 வரை); பிரதமருக்கு நேரடியாக அறிக்கை அளிக்கும் எரிசக்தி ஆலோசனைக் குழு (1983-88); பிரதமரின் தலைமையில் தேசிய சுற்றுச்சூழல் கழகம் (நவம்பர் 1993 முதல் ஏப்ரல் 1999 வரை); மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ‘ஆர்’ குழுவின் எண்ணெய் தொழில் மறுசீரமைப்பு குழு (1994) ஆகியவற்றில் முக்கியப் பங்கினை வகித்தார். அவர் பிரதமரின் காலநிலை மாற்றம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

ஆதாரம்: www.rkpachauri.org; www.teriin.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *