லியோனிட் ஹர்விச் (Leonid Hurwicz) ஆகஸ்ட் 21, 1917இல் பிறந்து ஜூன் 24, 2008இல் மறைந்த ரஷ்யாவைச் சார்ந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். சந்தையில் ஈடுபடுபவர்கள் உற்பத்தியில் சிறந்த விளைவை உருவாக்க முயலும் வள ஒதுக்கீட்டின் நுண்ணியல் பொருளாதார மாதிரியான இயந்திர வடிவமைப்பு கோட்பாட்டை (Mechanism Design Theory) உருவாக்கியதற்காக, எரிக் எஸ். மாஸ்கின் மற்றும் ரோஜர் பி. மியர்சனுடன் சேர்ந்து 2007ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.
லியோனிட் ஹர்விச், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) பேராசிரியர் பால் சாமுவேல்சனின் கீழ் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றினார். ஹர்விச், இயந்திர வடிவமைப்பு கோட்பாடு வாங்குபவர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் இருக்கும் அறிவுசார் இடைவெளியைக் குறிக்கிறது. சிறந்த சூழ்நிலைகளில், சந்தைகளுக்குள் பொருட்களின் விலை நிர்ணயம் குறித்து அனைத்து தரப்பினரும் சமமான தகவல்களைக் கொண்டுள்ளனர். இருப்பினும், உண்மையான உலக நடப்பில், தகவல் சமச்சீரற்ற நிலையில் வாங்குபவர்கள், விற்பனையாளர் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதைத் தடுக்கிறது. வாங்குபவர் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் விற்பனையாளர்களின் திறனைக் கட்டுப்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறார்.
லியோனிட் ஹர்விச் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
Hurwicz, Leonid and Stanley Reiter (2006): Designing Economic Mechanisms, Cambridge: Cambridgew University Press.
Arrow, Kenneth J, Leonid Hurwicz (1977): Studies in Resource Allocation Processes, Cambridge, Cambridge University Press.
Arrow, Kenneth J. Leonid Hurwicz, Hirofumi Uzawa and Hollis B. Chenery (1958): Studies in Linear and Non-Linear Programming Standford, Cal: Standford University Press.
Papandreou, Andreas G, O H.Sauerlender, O.H. Brownlee, Leonid Hurwicz and William M.H.Franklin (1957): A Test of a Stochastic Theory of Choice.
Schmookler, Jacob, Zvi Griliches and Leonid Hurwicz (1971): Patents, Invention and Economic Change, Cambridge: Harvard University Press.
ஆதாரம்: www.britannica.com ; www.economics.illinois.edu
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

