ஆகஸ்ட் 22 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- முகமது சதிப் "டெடே" பாஸ்ரி (Economist Muhammad Chatib Basri Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 22 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- முகமது சதிப் “டெடே” பாஸ்ரி – முனைவர் பு. அன்பழகன்

முகமது சதிப் “டெடே” பாஸ்ரி (Muhammad Chatib “Dede” Basri) இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 22, 1965இல் பிறந்த பொருளாதார அறிஞர் மற்றும் இந்தோனேசியாவின் முன்னாள் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். அவர் இந்தோனேசிய முதலீட்டு ஒருங்கிணைப்பு வாரியத்தின் தலைவராக இருந்தார். டெடே பாஸ்ரி பன்னாட்டு வர்த்தகம், பேரியல் பொருளாதாரம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவர் ஆவார். கல்விசார் பொருளாதார நிபுணராகவும், உலக பொருளாதாரம், ஆசியப் பொருளாதார ஆவணங்கள் மற்றும் இந்தோனேசியப் பொருளாதார ஆய்வுகளின் புல்லட்டின் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார இதழ்களில் வெளியிட்டுள்ளார்.

பாஸ்ரி இந்தோனேசியாவில் பல தலைமைப் பொருளாதார ஆலோசனை பதவிகளில் பணியாற்றினார். தற்போது அவர் பாலினம் மற்றும் மேம்பாடு குறித்த உலக வங்கி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள பயன்பாட்டு மேக்ரோ பொருளாதார பகுப்பாய்வு மையத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

ஆதாரம்: www.crawford.anu.edu.au; www.lpem.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *