ஆகஸ்ட் 23 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கென்னத் ஜே. ஆரோ & ராபர்ட் சோலோ (Economist Kenneth Arrow & Robert Solow Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 23 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கென்னத் ஜே. ஆரோ & ராபர்ட் சோலோ – முனைவர் பு. அன்பழகன்

1. கென்னத் ஜே. ஆரோ (Kenneth J. Arrow) ஆகஸ்ட் 23, 1921இல் பிறந்து பிப்ரவரி 21, 2017இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர், இவர் நலப் பொருளாதாரம் மற்றும் பொது பொருளாதார சமநிலைக் கோட்பாட்டிற்கான பங்களிப்பினை செய்துள்ளார். 1972ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை ஜான் ஆர். ஹிக்ஸுடன் இணைந்து பெற்றார். முழு பொருளாதாரமும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதை விவரிக்கும் பொது சமநிலைக் கோட்பாட்டிற்கு கென்னத் ஆரோ குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளார். புதிய கணித முறைகளைப் பயன்படுத்தி, அவர் சமநிலைக் கோட்பாட்டைத் திருத்தி, அதை ஒரு நிலையான தத்துவார்த்த அடித்தளத்தில் நிறுவினார். நலப் பொருளாதாரத்திற்கும் ஆரோ குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்தார், அதற்கான உகந்த தன்மை பற்றி அவர் நிரூபித்தார். அவரது Impossibility set (சாத்தியமற்ற தொகுப்பிற்காக) ஆரோ மிகவும் பிரபலமானவர். பொதுவான அளவுகோல்களின் கீழ், தனிப்பட்ட விருப்பங்களை ஒரு பொதுவான தேர்வாக இணைப்பது சாத்தியமில்லை என்பதை அவர் நிரூபித்தார்.

ஆரோவின் மிகவும் புகழ்பெற்ற ஆய்வறிக்கை (தொடக்கக் கணிதத்தில் கட்டமைக்கப்பட்டது) Impossibility theorem (சாத்தியமற்ற தன்மை தேற்றம்), பகுத்தறிவு மற்றும் சமத்துவத்தின் சில நிபந்தனைகளின் கீழ், இரண்டுக்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் தேர்வுகள் சம்பந்தப்பட்டிருக்கும் போது சமூக விருப்பங்களின் தரவரிசை தனிப்பட்ட விருப்பங்களின் தரவரிசைக்கு ஒத்திருக்கும் என்பதை உத்தரவாதம் செய்ய முடியாது என்று கூறுகிறது. கற்றல் வளைவு இருப்பதைக் கவனித்த முதல் பொருளாதார வல்லுநர்களில் அரோவும் ஒருவர். உற்பத்தியாளர்கள் ஒரு பொருளின் உற்பத்தியை அதிகரிக்கும்போது, அவர்கள் அனுபவத்தைப் பெற்று மேலும் திறமையானவர்களாக மாறுகிறார்கள் என்பது அவரது அடிப்படைக் கருத்தாகும். நிச்சயமற்ற தன்மையின் பொருளாதாரத்திலும் அரோ சிறந்த பணிகளைச் செய்துள்ளார், இது பொருளாதார வல்லுநர்களுக்குப் பயன்பாட்டிற்கு உரியதாக உள்ளது. ஆரோவின் ஆராய்ச்சி சமூகத் தேர்வுக் கோட்பாடு, எண்டோஜெனஸ் வளர்ச்சிக் கோட்பாடு, கூட்டு முடிவெடுப்பது, தகவலின் பொருளாதாரம் மற்றும் இனப் பாகுபாட்டின் பொருளாதாரம் போன்றவற்றையும் ஆராய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: www.econlib.org; www.hetwebsite.net; www.nobelprize.org

****************************

2) ராபர்ட் சோலோ (Robert Solow) ஆகஸ்ட் 23, 1924இல் பிறந்து டிசம்பர் 21, 2023இல் மறைந்த பொருளாதார வளர்ச்சிக்கான கோட்பாடுகளுக்கு அவர் செய்த முக்கிய பங்களிப்புகளுக்காக 1987ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

சோலோவின் வளர்ச்சி மாதிரி

A Contribution to the Theory of Economic Growth (1956) என்ற தலைப்பில் சோலோவின் வளர்ச்சி மாதிரி வழங்கப்பட்டது. இந்தக் கட்டுரையில் அதிகரித்த மூலதனப் பங்கு எவ்வாறு அதிக தனிநபர் உற்பத்தியை உருவாக்குகிறது என்பதை விவரிக்கும் ஒரு கணித மாதிரியாகும் (வேறுபட்ட சமன்பாட்டின் வடிவத்தில்). சோலோவின் தொடக்கப் புள்ளி , சமூகம் அதன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையான விகிதத்தைச் சேமிக்கிறது என்பதாகும். நிலையான விகிதத்தில் வளரும் மக்கள் தொகை, உழைப்பின் அளிப்பானது, மூலதனச் செறிவினைக் கட்டுப்படுத்தலாம். உற்பத்தி காரணிகளின் விலைகள் மூலதன செறிவினைத் தீர்மானிக்கின்றன. இருப்பினும், குறைந்து வரும் மகசூல் காரணமாக, கூடுதல் மூலதன சேர்க்கையானது (அதிகரிக்கும் மூலதன தீவிரம்) உற்பத்திக்கு எப்போதும் சிறிய அளவிற்குப் பங்களிப்புகளைச் செய்யும். இதன் பொருள், நீண்ட காலத்திற்கு, பொருளாதாரம் மூலதனம், உழைப்பு மற்றும் மொத்த உற்பத்திக்கு ஒரே மாதிரியான வளர்ச்சி விகிதங்களை நோக்கியதாக இருக்கும்.

சோலோவின் மாதிரிக்கும் ஹாரோட்-டோமர் மாதிரிக்கும் இடையிலான முதன்மையான வேறுபாடு, தொழிலாளர்களின் முழு வேலைவாய்ப்பு ஊதியங்கள் சரிசெய்யப்படலாம் என்ற சோலோவின் அனுமானத்தில் உள்ளது. பொருளாதாரம் கத்தி முனையில் உள்ளது என்ற முடிவினை ஹாரோட்-டோமர் எட்டினார். 1957 ஆம் ஆண்டு Technical Change and the Aggregate Producation Function என்ற கட்டுரையில், பொருளாதார வளர்ச்சியில் பாதியை மூலதனம் மற்றும் உழைப்பின் அதிகரிப்பால் கணக்கிட முடியாது என்று சோலோ குறிப்பிட்டார். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் கணக்கிடப்படாத பகுதியினை Solow residual (சோலோவின் எஞ்சிய பகுதி) என்று அழைக்கப்படுகிறது.

கீன்ஸியவாதியான சோலோ, மார்க்சிய பொருளாதார வல்லுநர்கள், ஜான் கென்னத் கால்பிரைத் போன்ற தலையீட்டு கருத்துக்களை கொண்டுள்ளவர்கள் முதல் மில்டன் ஃப்ரீட்மேன் போன்ற ஒப்பீட்டளவில் தலையீடு செய்யாத பொருளாதார வல்லுநர்கள் வரை பல பொருளாதார வல்லுநர்களை நகைச்சுவையுடன் விமர்சித்துள்ளார். ராபர்ட் எம். சோலோ, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தனது எழுத்துக்களில் ஆழமாகப் பதிவு செய்த ஒரு புரட்சிகர பொருளாதார நிபுணர். மேலும் எம்ஐடியின் பொருளாதாரத் துறையை ஆழமாக வடிவமைக்க சோலொவின் வழிகாட்டல் முக்கியமானதாகும், இத்துடன் அவர் ஒரு முன்னோடி ஆராய்ச்சியாளர் மற்றும் சிறந்த ஆசிரியராகவும் செயல்பட்டார். அவர் தனது 99 வயதில் இறந்தார்.

ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.nobelprize.org; www.investopedia.com; www.news.mit.edu

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *