கில்பர்ட் ஸ்லேட்டர் (Gilbert Slater) ஆகஸ்ட் 27, 1864இல் பிறந்து மார்ச் 8, 1938இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தென்னிந்தியாவின் கலாச்சாரம், கிராமப்புற வாழ்க்கை பற்றி தரவுகளுடன் வெளிப்படுத்தியவர் ஆவார். திராவிட கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மீது ஸ்லேட்டர் பெரும் அன்பு கொண்டவராக இருந்தார், குறிப்பாக அவர் தமிழ் மொழி கற்றுக்கொண்டார். தனது குழுவுடன், அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் கிராமங்களில் (தற்போதைய தமிழ்நாட்டில் ஐந்து கிராமங்கள் உள்ள 11 ஸ்லேட்டர் கிராமங்கள், அதாவது கங்கைகொண்டான் கிராமம் – திருநெல்வேலி, இருவேல்பட்டு கிராமம் – விழுப்புரம் மாவட்டம், துசி – வட ஆற்காடு மாவட்டம், பாலக்குறிச்சி – தஞ்சாவூர் மாவட்டம், வடமலைபுரம் – ராமநாதபுரம் மாவட்டம்) ஒரு கணக்கெடுப்பை நடத்தினார்.
இத்துடன் மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ள அவர்களின் சொந்த கிராமங்களில் விரிவான கணக்கெடுப்பை நடத்த ஸ்லேட்டர் தனது மாணவர்களை ஊக்குவித்தார். தசாப்த கால மக்கள்தொகை மாறுபாடுகள் (Decadal population variations), நில உரிமை, நில சாகுபடி செலவு, மக்களின் தொழில்கள் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவு பற்றிய தகவல்களைச் சேகரிக்க அவர் தனது மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். கிராம ஆய்வுகளில் மக்கள்தொகை, நிலப் பயன்பாடு, நில உரிமை, குத்தகை, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமத் தொழில் மற்றும் வர்த்தகம் பற்றிய ஏராளமான தரவுகள் உள்ளடக்கியுள்ளன.
இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் 1918இல் Some South Indian Villages (சில தென்னிந்தியக் கிராமங்கள்) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டன. இந்தியப் பொருளாதாரத்திற்கு ஸ்லேட்டரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 1920இல் அலகாபாத்தில் நடைபெற்ற இந்தியப் பொருளாதார கழகத்தின் ஆண்டு மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார். 1915 முதல் 1921வரை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தின் முதல் பேராசிரியராக பணியாற்றினர், பின்னர் 1921-22வரை மெட்ராஸ் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.
ஸ்லேட்டரின் புகழ்பெற்ற மாணவர்களில் ஒருவரான எம்.சி.டி. முத்தையா செட்டியார் என்பவர் யுனைடெட் இந்தியா லைஃப் இன்சூரன்ஸை நிறுவுனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்நாளில், ஸ்லேட்டர் 12க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார், அவை பெரும்பாலும் பொருளாதாரம் பற்றியது – அவற்றில் நான்கு இந்தியாவுடன் தொடர்புடையவையாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
(1919): Some South Indian Villages.
(1924): The Dravidian Element in Indian Culture
(1936): Southern India, Its Political and Economic Problems
ஆதாரம்: www.nature.com; www.whowaswho-indology.info; www.search-jogjalib.jogjaprov.go.id; www.madrasmusings.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

