அன்டோயின் அகஸ்டின் கோர்னோட் (Antoine Augustin Cournot) ஆகஸ்ட் 28, 1801இல் பிறந்து மார்ச் 31, 1877இல் மறைந்த பிரெஞ்சு நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். பொருளாதாரத்தில் கணிதத்தைப் பயன்படுத்திய முதல் பொருளாதார அறிஞர் கோர்னோட் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரம், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களிலும் திறமையான அறிவாற்றல் உடையவராக கோர்னோட் இருந்தார். செல்வக் கோட்பாடுகள், கணிதக் கோட்பாடுகள் பற்றிய ஆராய்ச்சிகளில் கோர்னோட் முக்கிய கவனம் செலுத்தினார். அவரது முதன்மையான ஆய்வுக் களமானது பகுதி சந்தை சமநிலையின் பகுப்பாய்வு (Partial market equilibirium analysis) ஆகும். பரிமாற்ற செயல்பாட்டில் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் அவர்களின் லாபத்தை அதிகப்படுத்துவது முக்கிய குறிக்கோள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அவருடைய பகுப்பாய்வு காணப்படுகிறது.
கோர்னோட், முற்றுரிமை, நிறைவுப் போட்டி, இருவர் முற்றுரிமை நிலைமைகளின் கீழ் அளிப்பு மற்றும் தேவை செயல்பாடுகள் மற்றும் சமநிலையைப் பகுப்பாய்வினை விளக்கியுள்ளார். உற்பத்திச் செலவில் ஏற்படும் மாற்றங்கள் என்று அவர் கருதிய வரிகளின் மாற்றம் பற்றியும் அவர் பகுப்பாய்வு செய்தார். பன்னாட்டு வர்த்தகத்தில் உள்ள சிக்கல்களை அவரது ஆய்வானது மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவைக்கான விலைக்கும் தேவைக்கும் இடையிலான உறவை விளக்குவதற்கு ஒரு தேவை வளைவை வரையறுத்த முதல் பொருளாதார அறிஞர் கோர்னோட் ஆவார்.
இறுதி நிலைச் செலவு இறுதி நிலை வருவாய்க்குச் சமமாக இருக்கும்போது ஒரு உற்பத்தியாளருக்கான லாபத்தை உச்ச அளவாக அதிகரிக்கும் நிலைக்கு வரும் என அவர் காட்டினார். 1938இல் Mathematical Principles of the Theory of Wealth என்ற புகழ்மிக்க புத்தகத்தை வெளியிட்டார். இதில் பொருளாதார பகுப்பாய்விற்காக கணக்கு சூத்திரங்கள், குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளார். இப் புத்தகம் நவீன பொருளாதார ஆய்விற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. கோர்னோட் சமூக ஆய்வுகளில் கணக்கினைப் பயன்படுத்திய முன்னோடியாகக் கருதப்படுகிறார். எட்ஜ்வெர்த், ஆல்பிரட் மார்ஷல், வால்ராஸ் போன்ற பொருளியல் அறிஞர்கள் கோர்னோட்டின் வெளியீடுகளைப் பயன்படுத்தி தங்களின் கருத்துகளை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1838 the book Researches on [10][11][12][13] was published, in which he used the application of the formulas and symbols of mathematics in economic analysis.
ஆதாரம்: www.britannica.com; www.hetwebsite.net; www.mathshistory.st-andrews.ac.uk
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

