ரிச்சர்ட் ஸ்டோன் (Richard Stone) ஆகஸ்ட் 30, 1913இல் பிறந்து டிசம்பர் 6, 1991இல் மறைந்த பிரித்தானிய நாட்டைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார், அவர் 1984ஆம் ஆண்டில், தேசிய அளவிலும் பின்னர் சர்வதேச அளவிலும் பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தக்கூடிய கணக்கியல் மாதிரியை உருவாக்கியதற்காகப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். ரிச்சர்ட் ஸ்டோன் தேசிய வருமானக் கணக்கியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
பிரித்தானியத் தேசிய வருமானம் மற்றும் செலவினங்களின் முதல் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் 1941இல் ஸ்டோனின் முறையைப் பயன்படுத்தித் தொகுக்கப்பட்டன. இருப்பினும், ஸ்டோனின் பெரும்பாலான பணிகள் 1950களில் செய்யப்பட்டன, அப்போது அவர் முதலீடு, அரசாங்க செலவு மற்றும் நுகர்வு ஆகியவற்றை அளவிடுவதற்கான முதல் உறுதியான புள்ளிவிவர வழிமுறைகளை உருவாக்கினார்; இந்த மாதிரிகள் சாராம்சத்தில், ஒரு தேசிய கணக்கியல் அமைப்பாக உருவாயின.
Double Entry Bookkeeping (இரட்டைப் பதிவு கணக்கு வைத்தல்)
தேசிய வருமானத்தை இரட்டைப் பதிவு கணக்கியல் வடிவத்தில் ஒருங்கிணைப்பதே ஸ்டோனின் தனித்துவமான பங்களிப்பாகும். இருப்பு நிலைக் குறிப்பின் ஒரு பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வருமான அலகையும் மறுபுறம் ஒரு செலவு அலகையும் பொருந்த வேண்டும், இதனால் நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பதாகும். ஸ்டோனின் இரட்டைப் பதிவு முறை தேசிய வருமானத்தை அளவிடுவதற்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாக மாறியுள்ளது.
Utility Functions (பயன்பாட்டுச் செயல்பாடுகள்)
நுகர்வோர் நடத்தையை அளவிடுவதில் ஸ்டோன் சில முக்கியமான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். நுகர்வோரின் பயன்பாட்டுச் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு நுகர்வோர் செலவுகள், வருமானங்கள் மற்றும் விலைகளைப் பயன்படுத்திய முதல் நபர் இவர்தான். Growth Project (வளர்ச்சி திட்டம்) குறித்த அவரது பணி, பெரிய, பிரிக்கப்பட்ட பேரியல் பொருளாதார அளவீட்டு மாதிரிகளை உருவாக்குவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பொருளாதார அளவீட்டு முறையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
Advisor of India (இந்தியாவின் ஆலோசகர்)
1950ஆம் ஆண்டில், தேசிய வருமானக் குழுவிற்கு மதிப்பீட்டு முறைகள் குறித்து ஆலோசனை வழங்க சைமன் குஸ்நெட்ஸ் மற்றும் ஜே.பி.டி. டெர்க்சனுடன் இந்தியாவிற்கு வந்தனர். இந்தியாவின் தேசிய வருமானம் கணக்கிட பல்வேறு அணுகுமுறையினை அவர் பரிந்துரைத்தார். அவர் கோலின் கிளார்க் மற்றும் ஜே.எம். கீன்ஸுடன் தொடர்புடையவராகவும், அவர்களால் செல்வாக்கு பெற்றவராகவும் இருந்தார். அவர் பிரித்தானிய அரசாங்கத்தில் நலப் பொருளாதார அமைச்சராக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
National Income and Expenditure, Input-output and National Accounts (1961)
Mathematics in the Social Sciences and Other Essays (1966)
Mathematical Models of the Economy and other essasy (1997)
ஆதாரம்
www.britannica.com; www.econlib.org; www.nobelprize.org; www.academic.oup.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

