நீயென்பது
நீ என்பது உன் வயதல்ல
உன் ஆடைகளின் அளவுமல்ல
தசைகளின் எடைக் குவியலல்ல நீ
கேசத்தின் வண்ணமுமல்ல .
பின் என்ன வெறும் பெயரா?
குழி விழும் கன்னம் கொண்டு
உன்னைக் கணிக்காதே.
நீ வாசிக்கும் புத்தகங்களின்
தொகுப்பல்லவோ நீ?
பேசும் சொற்களின்
திரட்டல்லவோ நீ?
கரகரக்கும் காலைக் குரலே நீ!
மறைக்க முயற்சிக்கும் புன்னகையே நீ!
உன் சிரிப்பில் கலந்திருக்கும்
இனிப்பே நீ!
உன் அழுகையில் சிந்திய
கண்ணீரே நீ!
தனிமையை உணரும்போது
உரத்த குரலில் பாடும் பாட்டே நீ!
நீ பயணித்த இடங்களே நீயாவாய்.!
இல்லம் என்றழைக்கின்றாயே
அதுவும்தான் நீ!
நம்பிக்கை வைக்கும்
நற்பொருட்களே நீ!
நீ நேசிக்கும் மனிதர்களே நீயாவாய்.
உன் படுக்கையறையில்
மாட்டியிருக்கும் படங்களே நீ!
நீ கனவு காணும் எதிர்காலமே நீ!
நீ அல்லாத விஷயங்களே
உன் வரையறுப்பு
என்றெண்ணும்போது
எத்தனை எழிலோடு
நீ சமைக்கப்பட்டிருக்கிறாய்
என்பதெல்லாம் மறந்துவிட்டாயோ?
26வயதாகும் எரின் ஹான்சன் எழுதியுள்ள ஆங்கிலக் கவிதையை என் மகள் மீரா மிகவும் ரசித்து பாராட்டினார். எனக்கு அனுப்பி மொழிபெயர்க்க கேட்டிருந்தார். ஆகவே மொழியாக்கம் செய்திருக்கிறேன். எரின் ஜான்சன் ஆஸ்திரேலியாவில் பிறந்தார். தன்னுடைய 11 வயதில் ஒரு வலைப்பக்கத்தை தொடங்கினார்.16ஆவது வயது முதல் அதில் தீவிரமாக எழுதத் தொடங்கினார். மூன்று கவிதைத் தொகுதிகளை எழுதியிருக்கிறார்.(வலைத்தளத் தகவல்கள்)
தமிழில் ரமணன்
You are not your age, nor the size of clothes you wear,
You are not a weight, or the color of your hair.
You are not your name, or the dimples in your cheeks.
You are all the books you read, and all the words you speak.
You are your croaky morning voice, and the smiles you try to hide.
You’re the sweetness in your laughter, and every tear you’ve cried.
You’re the songs you sing so loudly when you know you’re all alone.
You’re the places that you’ve been to, and the one that you call home.
You’re the things that you believe in, and the people whom you love.
You’re the photos in your bedroom, and the future you dream of.
You’re made of so much beauty, but it seems that you forgot
When you decided that you were defined by all the things you’re not.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.