இறைமொழியின் "அவள் தூங்கட்டும்" கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

இறைமொழியின் “அவள் தூங்கட்டும்” கவிதை

 “அவள் தூங்கட்டும்” கவிதை

பருவத்திலிருந்தே உறக்கத்தைத்
தொலைத்திருந்தாள்
பெண்டுகள்
சூரிய உதயத்திற்குப் பின்
துயிலுதல் ஆகாது
முன்னெழுவாள்
இளநாற்றுப் பயிரானது

உறக்கம் கண்களைத்
தழுவும் போதெல்லாம்
கணவனின் கைகள்
அவற்றைக் காவு கேட்கும்
அயர்ந்து அவன் துயில்கையில்
இவள்
நித்திரைக் கலைத்து
வேலைகளுடன் தொலைந்துவிடுவாள்
இருந்த ஊனும் வற்றி
காய்ந்த சருகாய் தேகம்
பிள்ளை வளர்ப்பில் வலிகளினூடே
மனைவி எனும் பாத்திரத்தையும்
பவுசாக செய்துவிடுவாள்
செக்குமாடாய்ச் சுழலும் வாழ்க்கையில்
செத்தப் பிணமாய் மனம்

வருடங்கள் ஐந்தென்றானது
அவன் விளங்காது கிடந்து
பாடு ஒன்றே
பாட்டானது அவளுக்கு
ஈரலின் தோய்வு
இனியும் வேண்டாம் காற்றென்று கதவு மூடியதில்
அவன்
கண்களை இறுக்கிக் கொண்டான்
அயர்ச்சியில்
அதிர்ச்சியென போக்குக் காட்டி
இப்போது அவள் விழிமூடி
தரையில் சரிந்துவிட்டாள்
தயவு செய்து
அவள் மூர்ச்சையாகிவிட்டாள்
என்று யாரும்

அவள் முகத்தில்
நீரைத் தெளிக்கவேண்டாம்!

எழுதியவர்:

இறைமொழி
சென்னை.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *