நாளையே இவர்கள் காற்றை விலை பேசி வாங்கி விடலாம் | அவர்களை எப்படி அழைப்பது – தோழர். ராம்கோபால்

நாளையே இவர்கள் காற்றை விலை பேசி வாங்கி விடலாம் | அவர்களை எப்படி அழைப்பது – தோழர். ராம்கோபால்

காட்டுக்குள் சென்று மரங்களை வெட்டியதால் அவர்களை போலீஸ் பிடித்து சென்றது. புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியதால் அவர்கள் வீடு இடிக்கப்பட்டது. நடை பாதையில் தடை போட்டதால் கடை இடிக்கப்பட கடை வைத்தவர்கள் கைதானார்கள்.

இப்படித்தானே செய்திகளை கேட்டு நாம் பழகி இருக்கிறோம். அதில் என்ன தவறு நடைபாதை நடப்பதற்கு அல்லவா, புறம்போக்கு நிலத்தில் எவர் வேண்டுமானாலும் வீடு கட்டலாமா, காடுகள் அழிக்கப்பட்டு என்ன ஆகும் என்ற கேள்விகள் நம்முள் வராமலா இருக்கின்றன?

இதே கேள்விதான் நம்மைப்போன்ற ஒருவர் மாமேதை காரல்மார்க்ஸ் இடம் எழுப்பினார். அதற்கு காரல்மார்க்ஸ் சொன்ன பதில் என்ன?

வெறும் 20 ரூபாய்க்கு அழகிய வண்ணப் படங்களுடன் பாரதி புத்தகாலயம் பலபல வண்ணத் தாளில் தோழர் மார்க்ஸ் அவர்களின் பதிலை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிச இயக்க வரலாறு நூற்றாண்டு காலத்தில் இந்தப் புத்தகம் பாரதி புத்தகாலயம் நிறுவனத்தின் நல்வரவு.

மாமேதை காம்ரேட் மார்க்ஸ் என்ன சொல்லியிருப்பார்? தோழர்களே நண்பர்களே அதை இந்த புத்தகத்தை வாங்கி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த புத்தகத்தில் கடைசி பக்கத்தில் தோழர் மார்க்ஸ் சொல்கிறார், “தோழர் நாளையே இவர்கள் காற்றை விலை பேசி வாங்கி விடலாம். தண்ணீரை வாங்கிவிடலாம். சாலையை கூட என்னுடையது என்று சொல்லிவிடலாம். அப்படி ஆகிவிட்டால் நீங்கள், நான், இந்த கூட்டத்தில் இருப்பவர்கள் என்று யாருமே சுவாசிக்க முடியாது. யாரும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியாது. வெளியில் எங்கும் நடமாட முடியாது. என் காற்றை எப்படி நீ காசு கொடுக்காமல் சுவாசிக்கலாம்? நீ ஒரு திருடன் என்று உங்களையே அவர்கள் சொல்லி விடுவார்கள். இந்த நிலை நமக்கு ஏற்படக் கூடாது என்றால் நாம் சரியானவர்கள் பக்கம் நிறுத்த வேண்டும். உலகமே எதிர்த்தாலும் நியாயமாக குரல் கொடுக்கவேண்டும்”.

என்ன நண்பர்களே புத்தகம் வாங்கிவிடவேண்டும் தானே??!!!

நினைத்த நேரத்தில் நினைத்த நூல்கள் பெற…

Whatsapp: 📞 87780 73949 Show Room: ☎ 044 2433 2924 Email: 📧 [email protected]

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *