“ஆதியின் அறிவியல் கொண்டாட்டம்” . இதை எழுதியவர் ஆயிஷா. இரா. நடராசன் அவர்கள். வெளியிட்டவர்கள்: பாரதி புத்தகாலயம் இதில் பல அறிவியல் பரிசோதனைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று- முதல் பரிசோதனை: பல பொருட்கள் மிகப்பெரியதாக இருக்கும். அவற்றை எப்படி எடைபோடுவது என்பது பற்றிய பரிசோதனை இது. ஒரு சுத்தியலை எப்படி மிகச்சிறிய தராசில் எடைபோடுவது? ‌‌ முதலில் ஒரு பாதி வாளி தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் அந்த சுத்தியலை வைத்து அந்த வாளியில் மூழ்க விடுங்கள்.

நீர் எவ்வளவு மேலே வருகிறது என்று ஒரு சாக்பீஸ் வைத்து குறித்துக்கொள்ளுங்கள். சுத்தியலை எடுத்து விடுங்கள். சில கற்களை எடுத்து ஒவ்வொன்றாக அந்த காலி பாட்டிலில் விடுங்கள். அந்த நீர் மட்டம் மிகச்சரியாக அந்த சாக்பீஸ் கோடுக்கு நெருங்கிவிட்டால் அந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை எடுத்து விடுங்கள். இப்போது அந்த குட்டி தராசில் அந்தக் கற்களை ஒவ்வொன்றாக எடை பார்த்து அதைக் கூட்டினால் சுத்தியலின் எடையை கண்டுபிடிக்கலாம். இதே உத்தியைக் கொண்டு யானையைக் கூட அளக்கலாம்.

இந்த மாதிரி இந்த புத்தகத்தில் நிறைய பரிசோதனைகள் உள்ளன. இப்படி மொத்தம் 12 பரிசோதனைகள் எப்படி செய்து பார்க்கலாம் என்று நடராஜன் அவர்கள் எழுதி உள்ளார். இதில் சில பரிந்துரைகளை செய்து பார்க்க தூண்டியது. குண்டூசி… ஆணி…. அறிவியல், வீட்டு திரையரங்கம் தண்ணீர் குவளைகளில் வர்ண மேஜிக் போன்ற பரிசோதனைகளை செய்து பார்க்கும் படி தூண்டியது. பரிசோதனைகளை கதை மாதிரி சொல்லவும் படிக்கவும் செய்து பார்க்கவும் தூண்டுகிறது.

ம.கா.சச்சின் சூர்யா,

ஆறாம் வகுப்பு,

ஈரோடு.

One thought on “ஆயிஷா. இரா. நடராசனின் ஆதியின் அறிவியல் கொண்டாட்டம் | மதிப்புரை ம.கா.சச்சின் சூர்யா”
  1. Sachin…. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சச்சின்…‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *