Ayesha Era. Natarasan's Newton Kadavulai Nambiyathu Yen Book Review by Thandapani Thendral. Book Day is Branch of Bharathi Puthakalayam.



நியூட்டன் – கடவுளை நம்பியது ஏன்? 
ஆயிஷா. இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம்

விலை: ₹145.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

வெளிநாட்டுல புதுசுபுதுசாக் கண்டுபிடிச்சு சாப்டுறாங்க. அதுல பெஸ்டா இருக்குற உணவு வகைகள ஒவ்வொரு பகுதில இருந்தும் வரவழச்சு 13 வாழ இலைல மொத்தமா படையல் போட்டு ஏறக்குறைய முனி லாரன்ஸ் மாதிரி உட்கார்ந்து ஒவ்வொன்னா சாப்டா எப்டி இருக்குமோ அந்த சுவையனுபவத்த இந்த புத்தகம் கொடுக்கும்.

என்னடா அறிவியல்னு திங்குறதுல ஆரம்பிக்குறானேனு பாக்காதீங்க. 13 வாழ இலைல வந்து உட்காரப்போர பதார்த்தங்களும் 13புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறந்த 13 அத்தியாயங்கள். ஆக மேற்சொன்ன வரையறை இப்போது தெளிந்திருக்கும்.

முதலில் பிரபஞ்சத் தோற்றத்தில் இருந்து துவங்குகிறது. பெருவெடிப்பு விசைகள், துகள்கள், உயிர்கள் உருவாகி கோள்கள், சூரியக்குடும்பம், அண்டம் அமைந்த விதங்களை ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார். இக்கட்டுரையின் தலைப்புதான் புத்தகத்தின் தலைப்பு. நியூட்டன் ஏன் கடவுளை நம்பினார் என்று கேட்டால் எல்லாம் அவர் நேரம். ஒருபக்கம் மதம் என்கிற வீச்சரிவாள் இன்னொரு பக்கம் பாலமில்லாத தட் போதிய அறிவியல் முன்னேற்றங்களை அடையாத புதைகுழி. இடையில் மாட்டிய நீயூட்டன் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டார். ஆனால் இதை ஸ்டீபன் ஹாக்கிங் நொறுக்கினார்.

அடுத்து வேதியியல் புத்தகத்துல வேலூர் கோட்டை மாதிரி ஒன்ன பாத்துருப்போம். அதாங்க தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்த அட்டவணை. எப்படி உயிரியலுக்கு டார்வினோ அதேமாதிரி வேதியலுக்கு நம்ம மெண்டலீவ். முன்னவர் உயிரை அதன் தோற்றம் கொண்டு நோக்கினார். பின்னவர் தனிமங்களைக் கையாண்டார். ஆனா மெண்டலீவ் ஏறக்குறைய தஸ்தாயேவ்ஸ்கி மாதிரிதான். சூதாட்டக் கடன்களை அடைக்க சூதாடி எழுதுனமாதிரி இவரு ஆர்கானிக் பத்தி புத்தகம் எழுதியிருக்கார். கடைசி வாரம் தகவல்களை அட்டவணைப்படுத்தினா நல்லா இருக்குமே, வேலைப்பளுவும் குறையுமேனு யோசிச்சு எழுதியிருக்கார். புத்தகம் வெளிவந்தப்ப அட்டவணைல நிறைய காலி இடங்கள் இருந்துருக்கு. எங்கடா கோட்டைல பாதி செங்கல்ல காணோம்னு வேதியியல் படை கிளம்பித் தாக்க, இனிமே கண்டுபிடிக்குற தனிமத்துக்கு அந்த இடத்த ரிசர்வ் பண்ணிட்டேன்னு சொன்னார். இந்த அட்டவணைல அடங்காத தனிமத்த கண்டுபிடிச்சுட்டன்னு கத்துன பிராங்காயிஸ்க்கு அப்போ தெரியல அதுவும் அந்தக் கோட்டையோட செங்கல்தான்னு. வழக்கம்போல அதற்கான இடத்துல எடுத்து வெச்சாரு மெண்டலீப். அந்த கல் சாரி தனிமம்தான் காலியன்.

நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்..? - ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் (தமிழில்- ஆயிஷா.  இரா.நடராசன்) - Bookday

அடுத்து ஐன்ஸ்டீனோட E=mc^2 சமன்பாட்ட பத்தின கட்டுரை. இதை நூலகத்தில் நுழையும் குழந்தை அங்கு காணும் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள புதிர்த்தன்மையைக் கண்டறிந்து ஒரேயொரு புத்தகத்தை எடுக்கிறது என்பதன் மூலம் விளக்கியுள்ளார். அதாகப்பட்டது எல்லாரும் தனித்தனியா சோறு குழம்புனு வச்சுட்டிருந்தப்ப ஐன்ஸ்டீன் மொத்தமா அரிசிம்பரும்பாக்கினார். அதுதான் அந்த ஒன்றுபடுத்திப் பார்க்கும் தன்மைதான் ஐன்ஸ்டீனுக்கு மாபெரும் புகழைக் கொடுத்தது.

டார்வினால் மட்டுமே டார்வினாக முடிந்தது ஏன்? இது யாவரும் அறிந்த மீம்ஸின் விதைபோட்ட ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதியது. டார்வின் கடல் பயணத்தில் கொண்டுசென்ற நூல்கள். எத்தனை புத்தகங்கள் படித்தார். அவற்றின் பொருண்மை பற்றியும் இருக்கிறது. குறிப்பா ஓரிடத்தில் கிடக்கும் கல், கடிகாரம் கொண்டு டார்வினின் பரிணாமம் பிரிச்சுப் பிரிச்சு வைக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ-14,15ன் மூலம் மனிதன் சந்திரனில் இறங்கியது உண்மையா?? என்று கேட்டு உண்மைதான் என்று கொண்டுபோன கட்டுரை முடிக்கையில் நமக்கும் உண்மையா? என்றே தோன்றுகிறது.

அடுத்து கணிதம். பயப்படாதீங்க. எப்படி பிதாகரஸ் தேற்றத்த என்னனு நிரூபிக்க 400வருசமாச்சோ அதேமாதிரி அதோட அடுத்த கட்டமான அதாவது க்யூப் பெர்மட்டோட தேற்றத்த நிரூபிக்க 358வருடங்கள் ஆன கதையத்தான் இந்தப் பகுதி பேசுது.

எப்படி உயிரின் அடிப்படை அலகு டி.என்.ஏவோ அதேமாதிரி நம்மோட மனசுக்கு மூளையோட மென்படலம்தான் அடிப்படை என்கிற கட்டுரை. யாரும் அறிந்த விளையனூர் எஸ். ராமச்சந்திரனின் புகழ்பெற்ற கட்டுரை. அவரின் ஆய்வுகள் பிரதானமாக மூளை பற்றியது. அவருடைய சில நூல்களும் கூட.

இதனைத் தொடர்ந்து எதிர்கால இயற்பியல் குறித்தும் அதில் என்னென்ன கண்டடைய வேண்டி இருக்கு. அதாவது ஐன்ஸ்டீன் மாதிரி தொடர்புபடுத்துனீங்கனா நீங்கதான் ஐன்ஸ்டீன் என்று நம்முன் 5 சவால்களை வைக்கிறது.என் ஏரியாவுக்கு (உயிரியல்) வாங்கயா வாங்கயானு இத கடக்கவேண்டியதாகிடுச்சு. பை த பை எனி பிசிக்ஸ் ஸ்டூடன்ட்ஸ் கேன் டிரை திஸ்.

அப்புறம் பிளாஸ்டிக். ஆமா நீங்க நல்லவரா கெட்டவரா?? ஒருபக்கம் நீங்க வந்ததால யானைகளைக் கொன்று தந்தத்துல பூரா பயலும் தனக்குத் தேவையான வெளாட்டு சாமான்ல இருந்து விருந்து சாமான்கள் வரைக்கும் தயாரித்துக் கொண்டிருந்தவர்கள் முற்றிலும் கைவிட்டதால் யானைகள் பிழைத்தது. இன்னொரு பக்கம் யூஸ் அன் த்ரோ சூழலியல் சீர்கேடு(சூழலியலையும் கவர் பண்ணுவோம்). அன்புள்ள ப்ளாஸ்டிக் மதில்மேல் பூனையாவே இருக்கீங்களே. பீனால் (அதாங்க பெனாயிலு) ஆரம்பிச்சு பாலி வினைல் குளோரைடு அப்புறம் பாலி எத்திலீன் சோ கால்டு பாலித்தீன்னு அசுர வளர்ச்சி. எதிர்காலத்துல பிரமீடுக்கு பதிலா ப்ளாஸ்டிக் சவக்குழி பண்ணுவாங்க பாருங்க.

அடுத்து நம்ம சிதம்பரத்துக்காரர். வெங்கி ராமகிருஷ்ணனின் கட்டுரை. இந்த நூலை ஆங்கிலத்துலயே படிச்சு ரிவ்யூவும் எழுதியிருக்கேன். தேடிப் பாருங்க. X கதிர் மூலம் எப்படி மூலக்கூறுகளின் கட்டமைப்பைக் காண்பது எனும் பெர்னார்டு டோரத்தி ஆகியோரின் ஆய்வியல் பயணம்.

அடுத்து இப்ப நாம விண்வெளி வீரர் ஒருத்தர மீட் பண்ணி ஒரு கேள்வி கேட்குறோம். விண்வெளியில புத்தகம் வாசிக்க முடியுமா ? முடியும். இதுபோன்ற கேள்வியும் அதற்கான ஆழமான பதில்களுமே இக்கட்டுரை.

சமீபத்துல ஸ்க்ரோடிஞ்சர் பிறந்தநாள் வந்ததே. இவரோட பூனை எக்ஸ்பரிமண்ட். ரொம்ப ஆர்வத்த கொடுக்கும். டார்வின் தொடாத உயிரற்ற மூலக்கூறுல இருந்து உயிர் எவ்வாறு தோன்றி இருக்கும் என்பதை எழுதினார். குவாண்டமை உயிரியலுடன் இணைத்துப் பார்த்தவர்.
குட்டிச் சாத்தான் மூலக்கூறு வரைக்கும் அலசிறுக்காங்க.

கடைசியா மீண்டும் ஹாக்கிங் எழுதிய கட்டுரைக்கு வருகிறோம். நம் குழும ஜெயராஜ் சார் சொன்னமாதிரி சொல்லனும்னா மெது வடைய பதமா பொரிச்ச மாதிரி இருந்த கருந்துளையோட படத்த பாத்துருப்போம். ஆனா அத போட்டோ எடுக்காததற்கு முன்பே அது எப்படியிருக்கும்னு அச்சு பிசகாம கணித்திருக்கார் ஸ்டீபன் ஹாக்கிங்.

அதாவது இந்த 13 கட்டுரைகளும் எடுக்கப்பட்ட புத்தகங்கள் என்னென்னனு சொல்லலைனா வாசிப்புக் குத்தமாயிடும்கற காரணத்துனால அதயும் சொல்லிடறேன்

1. The grand design- Stephen Hawking
2. The disappearing spoon- Sam Kean
3. E=mc^2- David Bodanis
4. The God delusion- Richard Dawkins
5. It’s not Rocket science- Ben Miller
6. Fermat’s Last theorem- Simon Singh
7. This Explains Everything -Edited by John Brockman
8. The trouble with physics- Lee Smolin
9. Napoleon’s Buttons- Couteur, Burreson
10. Gene Machine- Venki Ramakrishnan
11. Ask an Astronaut- Tim Peak
12. The Demon in the Machine -Paul Devis
13. The theory of everything – Stephen Hawking

ஆக மொத்தத்துல சொல்லனும்னா இதுவொரு அறிவியல் ஆல்ரவுண்டர்.

-Thandapani Thendral (தண்டபாணி தென்றல்)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *