அறிவியல் மைல்கல் 4:-
கணினி சில்லுகள் முதல் குறை கடத்திகள் வரை.. இந்தியா என்ன செய்ய வேண்டும்?
– ஆயிஷா இரா.நடராசன்
கணினி சில்லுகள் மற்றும் குறை கடத்திகள் உற்பத்தி சார்ந்துதான் இன்றைக்கு உலக தொழில்துறை இயங்கிக்கொண்டிருக்கிறது… இந்த துறை சார்ந்து சில சொல்லாடல்களை முதலில் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இந்த துறை சார்ந்த சொற்களை அறிவீர்களா?
சிப் வடிவமைப்பு என்பது கணினி சில்லுகளின் செயல்பாடு மற்றும் கட்டமைப்பை வடிவமைத்தல் ஆகும்..
சில்லு புனைவு உற்பத்தி எனும் ஃபேப்ரிகேஷன் சொல்லாடல் சிலிகான் வேஃபர் என்றழைக்கப்படுகின்ற ஒரு துறை சார்ந்து அதன் மீது நுண்ணிய மின்னணு சுற்றுகளை உருவாக்குதல் என்பதன் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது..
மூன்றாவது மிக முக்கிய சொல் பேக்கேஜிங் அதாவது சிப் பொதி இடல் அல்லது சில்லு பொதி இடல் என்று அழைக்கப்படுகிறது இது தயாரான சில்லுகளை பாதுகாப்பான தொகுப்பாக மாற்றுகின்ற படிநிலை ஆகும்..
அடுத்து டெஸ்டிங் என்கிற சொல்லாக்கம் ஷிப் சோதனை மற்றும் சில்லு சோதனை என்று சொல்லலாம் ஒரு கணினி சில்லின் செயல்திறன் தரம் நம்பகத்தன்மை ஆகியவற்றை பரிசோதிக்கும் படைநிலை..
மெட்டீரியல் என்கிற குறை கடத்திப் பொருட்கள் அல்லது குறை கடத்தி மூலப்பொருட்கள் என்கிற ஒரு சொல்லாக்கம் கண்டிப்பாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் சிலிகான் வேதிப் பொருட்கள் அல்லது வாயுக்கள் போன்ற பிரத்யேகமான சிலவற்றின் உற்பத்திக்கு தேவைப்படுகின்ற பொருட்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்..
கருவிகள் அல்லது உபகரணங்கள் என்கிற இந்த துறை சார்ந்த சொல்லாக்கம் குறை கடத்தி உற்பத்தி இயந்திரங்களை குறிக்கிறது லித்தோகிரஃபி, டி-பொசிஷன், எட்ஜிங் போன்ற செயல்களுக்கு இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இறுதியாக குறை கடத்தி தொழில்துறை சூழல் அமைப்பு.. வடிவமைப்பு முதல் உற்பத்தி, சோதனை, சந்தை வரையிலான முழுமையான ஒரு பாதை இந்த சூழல் அமைப்பு..
இவை சார்ந்து ஒரு நாடு தன்னுடைய தொழில்துறையை எப்படி எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பது சார்ந்ததுதான் இன்றைய தொழில் புரட்சி அடையாளங்கள்..

ஏன் இந்த அறிவியல் தொழில்நுட்ப துறை மிக மிக முக்கியம்?
முதலில் குறை கடத்தி என்றால் என்ன? இந்த கேள்வியில் இருந்து தொடங்குவது தான் சரியாக இருக்கும்.
குறை கடத்தி தொழில்நுட்பம் அனைத்து நவீன மின்னணு இயலின் மூளையாக செயல்படும் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் சிலிக்கான் போன்ற பொருட்களாலான நுண்ணிய மின்னணு பாகங்கள் மைக்ரோசில்லுகள் வடிவமைக்கும் உற்பத்தித் துறையாகும்.. இந்தத் துறை நவீன தொழில்நுட்பத்திற்கு ஆற்றலை வழங்குகிறது சிப்புகள் எனப்படும் சில்லுகள் திறன் பேசிகள் கணினி கார்கள் மருத்துவ சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரணப் பொருட்களை இயக்குகின்ற குறை கடத்திகளை உற்பத்தி செய்வது இந்த பிரம்மாண்ட தொழில் துறையின் அடிப்படை. மேம்பட்ட சில்லுகள் பாதுகாப்பு அமைப்புகள் தொலைத்தொடர்பு வலையமைப்புகள் மற்றும் மின் கட்டமைப்புகளை இயக்குகின்றன.
நமக்கெல்லாம் நன்றாக தெரியும் இரும்பு தங்கம் உட்பட பல உலோகங்கள் மிகை கடத்திகள் ஆகும்.. அதீதமான மின்சாரத்தை கடத்துவதன் மூலம் மின்னணு சாதனங்கள் வேலை செய்யாது.. ரப்பர் உட்பட பொருட்கள் மின்சாரத்தை கடத்துவது இல்லை. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட தேவையான மின்சாரத்தை மட்டுமே வழங்கும் அளவிற்கு முறைப்படுத்த முடிந்த சாதனங்களை தான் குறை கடத்திகள் என்று நாம் அழைக்கின்றோம்.
மின்சாரத்தை முழுமையாக கடத்தும் மின்கடத்திகள் மற்றும் மின்சாரத்தை கடத்தாத பொருட்களுக்கும் நடுவில் உள்ள பண்புகளைக் கொண்ட குறை கடத்திகள் சிலிகான், ஜெர்மானியம், காலியம் நைட்ரேட், காலியம் ஆர்சனைடு, சிலிகான் கார்பனைடு போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகின்றன இதில் சிலிக்கான் உலகக் குறை கடத்திகளின் உற்பத்தி தொழிலில் மிக முக்கியமான அடித்தள வேதிப்பொருளாக பயன்படுகிறது.
ஆனால் குறை கடத்திகள் என்பவை ஒரு தனிப்பட்ட தொழில்நுட்பம் அல்ல இது நவீன நாகரிகத்தின் கட்டுப்பாட்டு நரம்பு மண்டலம் என்று சொல்லலாம். கோவிட் தாக்கப்பட்ட ஆண்டுகளில் அதாவது 2020-22 ஆண்டுகளில் குறை கடத்தி உற்பத்தி முற்றிலும் நின்றுபோன பொழுது சந்தையில் குறைக்கடத்திகள் கிடைக்காத ஒரு நிலை ஏற்பட்டது.. இதன் மூலம் உலகம் மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொண்டது. கார் உற்பத்தியில் இருந்து திறன் பேசிகள் உற்பத்தி வரை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன ஒரு நாட்டினுடைய பொருளாதார பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு தகர்ந்து போகிற பொழுது ஒரு நாடு என்ன ஆகும்.. என்பதை நாம் கண்கூடாகப் பார்த்தோம்.
செயற்கை நுண்ணறிவு கிளவுட் கம்ப்யூட்டிங் துறை போன்ற மேம்பாட்டுத் துறைகள் உயர் செயல்திறன் கொண்ட குறை கடத்திகளை முழுமையாக சார்ந்துள்ளன.. எனவே துறைகடத்திகளின் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட நாடுகள் அறிவியல் தொழில்நுட்பத்தில் மேலாதிக்க நாடுகளாக கருதப்படுகின்றன
இந்தத் துறையில் இன்று உலக அளவில் முன்னணியில் இருக்கும் நாடுகள் என்னென்ன?
இந்த துறையின் ஜாம்பவான்களாக இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கும் நாடுகள் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். தைவான் தென்கொரியா மற்றும் சீனா ஆகியவை உற்பத்தி சார்ந்து இந்தத் துறையில் புனை அமைப்பு முறையில் முன்னிலை வகிக்கின்றன உலகின் சந்தை பங்கில் 70% இந்த நாடுகளைச் சார்ந்து இயங்குகிறது.. உலகின் முன்னணி ஒப்பந்த கணினி சிப்பு தயாரிப்பு நிறுவனமான TSMC தைவானில் அமைந்துள்ளது. ஆனால் ஏனைய நாடுகள் பின் தங்கிவிடவில்லை
உதாரணமாக அமெரிக்காவில் இன்டெல் மற்றும் க்வால்காம் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் உயர்தர கணினி சில்லு வடிவமைப்பு மென்பொருள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு ஆகியவற்றில் அமெரிக்காவை முன்னணி நாடாக வைத்துள்ளன.. ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் பிரத்தியேக வாகன கணினி சில்லுகள் மற்றும் மேம்பட்ட உற்பத்தி இயந்திரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றன.. எனவே சில்லுகள் தயாரிப்பது ஒருபுறம் என்றால் அந்த சில்லுகளை தயாரிக்கும் இயந்திரங்களை தயாரித்துக் கொடுப்பது.. இந்த தொழில் சார்ந்த முன்னேற்றப் பாதையை வடிவமைக்கிறது.
இந்தியா எங்கே இருக்கிறது?
இந்தியாவின் குறை கடத்தி உற்பத்தி (SEMICONDUCTOR) வரலாறு என்பது நேற்று தொடங்கிய ஒன்று அல்ல.. நம் நாட்டில் இதற்கான முயற்சிகள் 1960 களில் இருந்தே தொடங்கின என்றால் நம்புவது கஷ்டம்.. அப்போது இந்தியாவில் ஜெர்மானியம் மற்றும் சிலிக்கான் அடிப்படையிலான குறை கடத்தி அமைப்புகளை உற்பத்தி செய்கின்ற மின்சுற்றி தொடர்பான CSIR உற்பத்தி முயற்சிகள் தொடங்கின.
எனவே இந்த துறை சார்ந்த நாம் இந்தியா என்ன செய்திருக்கிறது என்பதை பேசுவது என்பது 60 ஆண்டுகள் தாமதமாக தொடங்கிய கதையாக இல்லாமல் நீண்ட ஆனால் இடைநிறுத்தங்களுடன் கூடிய ஒரு பயணமாக இந்த வரலாறு இருப்பதை பார்க்கலாம்.
உதாரணமாக இந்தியாவில் SCL என்கிற ஒரு பழைய நிறுவனம் இருந்தது மொஹாலியில் செமிகண்டக்டர் லாபரேட்டரி என்று இதற்குப் பெயர் இந்த நிறுவனத்தின் விரிவாக்கம் செமிகண்டக்டர் காம்ப்ளெக்ஸ் லிமிடெட்(SCL).. நாம் மேலே குறிப்பிட்ட சிப்பு வடிவமைப்பு உற்பத்தி பொதி இடல் சோதனை மூலப்பொருள் உற்பத்தி என அனைத்தையும் அன்றைக்கு செய்யத் தொடங்கிய அற்புதம் இந்த நிறுவனம்..
இந்தியா குறை கடத்திகளின் வடிவமைப்பில் வேகமாக முன்னேறியது.. வடிவமைப்பது என்பதே சில்லுகளை உற்பத்தி செய்வதாக மாறவில்லை.. சில்லுகளை உருவாக்கும் பயணம் பல படிநிலைகள் கொண்டது இதற்கு சங்கிலி தொடர் தொழிற்சாலைகள் தேவை இந்த இடத்தில்தான் இந்தியா சறுக்கியது.
இந்தியாவிடம் ஏற்கனவே மிகப் பெரிய குறை கடத்தி வடிவமைப்பு திறன் உள்ளது.. இந்தத் திறமையை தொழில்துறை சார்ந்த உற்பத்தி நிலையங்களாக மாற்றுவதில் பல ஆண்டு காத்திருப்பு தொடர்ந்தது..2026 சமீபத்திய தரவுகளின் படி இந்தியா உலக குறை கடத்தி சில்லுகளின் வடிவமைப்பில் 20% தொழிலாளர்களை கொண்டுள்ளது. குறை கடத்தி உலகில் உலக குளோபல் கபாசிட்டி சென்டர் சுமார் 7% மட்டுமே இந்தியாவில் உள்ளன. ஆனால் இந்த தொடக்கத்திற்காகவே நாம் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது.
இன்டெல், ஏஎம்டி, க்வால்காம்,NIVDIA, டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், மைக்ரான், சாம்சங் போன்ற உலக நிறுவனங்களில் இன்றைக்கு வேலை பார்ப்பவர்களில் பல நாடுகளை சேர்த்து 35% இந்தியர்கள் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது இந்தியப் பொறியியலாளர்கள் குறை கடத்தி அறிவுத்திறனோடு இந்த உலக சந்தையில் உற்பத்தி நிறுவனங்களின் கவனிக்கத்தக்க அளவிற்கான உழைப்பாளர்களாக உயர்ந்துள்ளனர். ஆனால் இந்த அறிவை நம்முடைய நாடு தன்னுடைய நாட்டின் சொந்த உற்பத்திக்கு பயன்படுத்த தவறிவிட்டது.
தொடக்க நிதியாக 76000 கோடி ஒதுக்கப்பட்டது இதில் முக முக்கியமான இன்றைய திருப்பம் என்னவென்றால்..SEMICON 2.0 என்கிற திட்டமாகும். 2026 ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சரவை இன் த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.. கேட்கப்பட்ட தொகையில் பாதியை அதாவது 1,27,000 கோடி அதை அங்கீகரித்தது.. எனவே பல நாடுகள் உற்பத்தியின் பல படிநிலைகளை அடைந்த பிறகு இப்போதுதான் நாம் விழித்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறோம்.. மொத்தம் அரசுக்கு வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான குறை கடத்தி உற்பத்தி செயல் திட்டங்களில் 12 திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன இவற்றின் மொத்த மதிப்பீடு1.64 லட்சம் கோடி.. இவை உற்பத்தி சாலைகளாக மாறி குறை கடத்தி உற்பத்தியில் உலகின் கதவுகளைத் தட்டுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும்..
பெரும்பாலான திட்டங்களை குஜராத் மாநிலத்திற்கே தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு சமீபத்தில் 2026 பிப்ரவரி மாதம் தேசிய அறிவியல் தினத்தன்று குஜராத்தின் சனந்த் பகுதியில் மைக்ரான் செமிகண்டக்டர் டெக்னாலஜி இந்தியா என்கிற ஒரு புதிய தொழில் நிலையத்தை தொடங்கியுள்ளது.. சிலிகான் என்கின்ற மிகத் தேவையான வேதிப்பொருள் தென்னிந்தியாவில்தான் அதிகம் கிடைக்கிறது என்பதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் முறைப்படி இந்த தொழிற்சாலை தென்னிந்தியாவில்தான் தொடரப்பட்டிருக்க வேண்டும்.. என்று ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
டாடா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய குறை கடத்தி உற்பத்தி கனவோடு களத்தில் இறங்கியது ஆனால் பல நாட்கள் அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்ட இந்த கனவு 2024 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் அனுமதியை பெற்றது 91000 கோடி முதலீடு.. சில்லு வேஃபர் தயாரிக்கும் உற்பத்தி.. ஆனால் இந்தத் திட்டத்தை டாடா நிறுவனம் தொடங்குவதற்கு முன்னர் அனுமதி கேட்ட இடம் கர்நாடகா.. தனக்கான தொழிற்சாலை இடத்தை குஜராத்தில் உள்ள தோலராவில் தொடங்குவதாக டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்தபொழுது உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.. குறைக்கடத்தி உற்பத்தி சார்ந்து எளிதான அடிப்படை உற்பத்தி பொருட்களை கொண்ட.. தென்னிந்தியாவில் இவற்றை வரவிடாமல் தடுப்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. இந்த விமர்சனங்கள் ஒரு பக்கம்.
இந்தியா மிகப்பெரிய அளவிலான செமிகண்டக்டர் தொழிற்சாலை மற்றும் அதுகுறித்த சிலிக்கான் சில்லுகளின் தொழில் கட்டமைப்பை ஏன் இன்னும் பெற முடியவில்லை என்கிற ஒரு கேள்வி தொடர்ந்து நிலவுகிறது. குஜராத் மாநிலத்தில் டொலராவில் செயற்படுகின்ற டாட்டாவின் உற்பத்தி நிலையம் எதிர்பார்த்த அளவிற்கு தன்னுடைய செயல்திட்டத்தைத் தொடங்க முடியாமல் திட்டமிட்டதைவிட தாமதமாகி உள்ளது என்று சமீபத்தில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே இந்தக் கட்டுரையை குறைக்கடத்திகள் உற்பத்தி என்கிற உலகளாவிய முன்னேற்றத்திற்குள் இந்தியா நுழைந்துவிட்டது என்று அவசரப்பட்டு எழுத முடியாது என்பதுதான் உண்மை. பெரும்பாலும் இந்தியாவில் இந்த துறை சார்ந்த அயல்நாட்டிலிருந்து தெரிவிக்கப்பட்ட உதிரி பாகங்களை ஒன்றிணைக்கும் அமைப்புகளைத்தான் எல்லா இடங்களிலும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
உதாரணமாக டாட்டா குறை கடத்தி ஒன்றிணைப்பு அதாவது அசம்ப்ளி தொழிற்சாலை அசாமில் உள்ள மோரிகாம் என்கிற இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது வாகனங்கள், மின்சார வண்டிகள், திறன் பேசிகள் அன்றாட சாதனங்கள் போன்ற துறைகளுக்கான சில்லுகளை பேக்கேஜிங் செய்யும் திறன் கொண்ட சிறு தொழிற்சாலை இது.. இது போன்ற முயற்சிகள் இந்தியா முழுவதும் தொடங்கப்பட வேண்டும்.
காலியம் நைட்ரைடு இந்தியாவின் புதிய குறை கடத்திப் பாதையாக தற்போது ஏற்கப்பட்டுள்ளது.. இந்த வேதிப்பொருள் இந்தியாவில் ஏராளமாக கிடைக்கிறது இந்த வெடிபொருள் அடிப்படையிலான உலோகக் கலவை குறை கடத்திகள் மினி மைக்ரோ எல்இடி போன்றவைகளின் உருவாக்கத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.. ஸ்மார்ட்வாட்ச் எனப்படுகின்ற திறன் கைகடிகாரங்கள் திறன் பேசிகள் எக்ஸ் ஆர் கண்ணாடிகள் போன்ற உற்பத்தியில் இவை இந்தியாவைத் தன்னிறைவு அடைய வைக்கக் கூடும் எனவே இந்தியாவினுடைய முறை கடத்திகள் விஷயத்தில் சிலிகான் மட்டுமே அல்ல ஏனைய வேதிப்பொருட்களும் உள்ளன என்பது தெளிவாய்ந்தது.

நம்பிக்கை தரும் விக்ரம் 3201
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முழுமையான உள்நாட்டு விண்வெளி தரத்திலான 32 பிட் உன் செயலி அதாவது கணினி சில்லு விக்ரம் 3201. மொஹாலியில் உள்ள கொறைக்கடத்தி ஆய்வகத்துடன் இணைந்து இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இதை உருவாக்கி அசத்தி இருக்கிறது.. இதன் முக்கிய அம்சங்கள் என்று பார்த்தால் 64 பிட் IEEE-754 மிதவை. செயல்பாடுகளுக்கான ஆதாரத்துடன் கூடிய புதிய வகையான கட்டமைப்பு 55 டிகிரி செல்சியஸ் முதல் 125 டிகிரி செல்சியஸ் வரையிலான கடுமையான சூழல்களிலும் இயங்கக்கூடிய கணினி சில்லு.. என்று இதனை சொல்கிறார்கள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விண்வெளி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் அடா என்கின்ற கணினி நிரலாக்க மொழியை அடிப்படையாகக் கொண்டது இது. நம்முடைய ஏவுகணைகளில் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விக்ரம் 1601 எனும் சில்லுக்கு மாற்றாக இந்த தொழில்நுட்பம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
PSLV – C60 ராக்கெட் அனுப்பப்பட்டபொழுது அந்த பயணத்தின் ஊடாக விண்வெளியில் அது சோதிக்கப்பட்டது ஏவுகணைகளில் உள்ள வழி செலுத்துதல் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்தியாவுக்கு சில்லுகளின் வடிவமைப்பு செய்யும் திறனும் குறிப்பிட்ட துரைகளில் அதைப் பயன்படுத்தும் திறனும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது ஆனால் சந்தை மதிப்பில் சாதாரண பொருட்களின் உற்பத்தி சார்ந்த சில்லுகளை உருவாக்குவதில்தான் இந்தியா பின்தங்கி உள்ளது.. ஏவுகணைகளின் உற்பத்தியின் மூலம் அதில் பயன்படுத்தப்படும் சில்லுகளை வைத்து பொருளாதார முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை.. பாதுகாப்பு காரணங்களை நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருப்பதும் நியாயமில்லை. ஐஐடி மதராஸ் வளாகத்தை அடிப்படையாகக் கொண்ட நம் விஞ்ஞானிகளின் சக்தி பிராசசர் எனும் குறை கடத்தி ஆய்வகத் திட்டமும் குறிப்பிடப்பட வேண்டிய அற்புதமான முன்னேற்றப் பாதை.. இந்த சக்தி திட்டத்தை பொறுத்தவரை அதிகமான மக்கள் பயன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்தத் துறை சார்ந்த உலக வரலாறு என்ன சொல்கிறது?
- 1947 ஆம் ஆண்டில் ஜான் பர்டின், வால்டர் ப்ரொட்டின், வில்லியம் ஷாக்லே போன்றவர்கள் இணைந்து பெல் ஆய்வகத்தில் அமெரிக்காவில் டிரான்ஸிஸ்டர் எனும் வில்லைகளை உற்பத்தி செய்தார்கள்.. அதற்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட வெற்றிட குழாய்களுக்குப் பதிலாக இவை அறிமுகம் செய்யப்பட்டன. எனவே கணினியின் அறை அளவிலான உலகத்தை உள்ளங்கையின் அளவிற்கு கொண்டு வரப்போகும் முதல் விதை 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- 1954 அம் ஆண்டில் சிலிகான் டிரான்ஸிஸ்டர்கள் அறிமுகம் ஆயின.. இந்த விஷயத்தில் உலகம் பதிவு செய்திருக்கும் பெயர்கள் மோரிஸ் டான்அண்ட்போம், கோர்டான் டீல், மற்றும் வில்ஸ் அட்காக் போன்ற அறிவியல் மேதைகள். 1954 ஆம் ஆண்டில் ஜனவரியில் அதே பெல் ஆய்வகத்தில் சிலிக்கான் டிரான்ஸிஸ்டர்கள் உருவாக்கப்பட்டன எனவே ஜெர்மானியம் என்கிற உலோகத்தில் இருந்து சிலிகான் என்பதை நோக்கி தொழில்துறை மாறுதல் வேகம் அடைந்தது.
- 1958-59 காலகட்டத்தில் ஜாக் கில்பி, ராபர்ட் நாய்ஸ் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைந்த மின்சுற்றிகள்(INTEGRATED CIRCUIT) என்கிற முக்கியப் படி நிலையை அடைத்தனர். முன்பு பிரான்சிஸ்டர் ரெசிஸ்டர் கபாசிட்டர் என்றெல்லாம் தனித்தனியாக இருந்தவற்றை அவர்கள் ஒன்றிணைத்து ஒரு சிறிய வில்லையாக உருமாற்றினர்.
- 1959-60 மோஸ்-ஃபெட்(MOSFET) அறிமுகமானது.. அதாவது மெட்டல் ஆக்சைடு செமிகண்டக்டர் ஃபீல்ட் எஃபெக்ட் பிரான்சிஸ்டர்.. சிலிகான் மேற்பரப்பில் ஆக்ஸைடு அடுக்கு ஒன்றை பயன்படுத்தியதன் மூலம் வெறும் டிரான்சிஸ்டர் என்பது கெட்(GATE) என்று அழைக்கப்படும் கட்டுப்படுத்தும் கருவியாக மாறிப் போனது. இன்றைய கணினிகளின் நினைவு பகுதி சி பி யு போன்றவைகளின் கோடிக்கணக்கான பில்லியன் கணக்கான டிரான்ஸிஸ்டர்களின் அடிப்படை தொழில்நுட்பமாக இந்த மோஸ்ஃபெட் மாறிப்போனது. இதில் அடிபடும் அற்புதமான பெயர்கள் முகம்மது ஜான் அட்டாலா மற்றும் டேவான் காங்.
- 1959 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ப்ளானர் செயல்முறை. இதை கண்டுபிடித்து அறிவித்தவர் ஜீன் ஹார்னி. குறை கடத்திகளின் உற்பத்தியில் ஜீன் ஹார்னி உருவாக்கிய ப்ளானர் செயல்முறை என்பது மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது சிலிகான் வேஃபர் என்பதன் அடிப்படையில் அதன் மேற்பரப்பில் ஆக்சைடு அடுக்கை பாதுகாப்பாக வைத்துக் கொண்டே டிரான்ஸ்ஸ்டரை உருவாக்கும் புதிய அணுகுமுறையாகும்.. இது உலோகத்தின் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து உற்பத்தி செலவை கட்டுப்படுத்தியது.
- 1965 மோர்ஸ் விதி. கோர்டான் மோர் குறை கடத்தியில் உள்ளே ஒரு கணினி வில்லை அடங்கக்கூடிய மின் பொருட்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்பதை கணித்தார். ஆரம்ப கணிப்பு சுமார் ஆண்டுக்கு இரட்டிப்பு..1975 முதல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இரட்டிப்பு என்று அவர் மாற்றினார் இதைத்தான் நாம் மோர்ஸ் விதி என்று அழைக்கிறோம் இது இயற்கை விதி அல்ல குறை கடத்திகளின் தொழில்நுட்பம் சார்ந்த அதன் கண்டுபிடிப்பு சார்ந்த தொழில்நுட்ப இலக்காக அது மாற்றப்பட்டது.
- 1971 மைக்ரோ பிராசசர் அதாவது நுண் செயலி. இந்த முக்கியமான முன்னேற்றத்தில் நுழைந்த உலக அளவிலான அற்புத அறிஞர்கள் ஃபெடரிகோஃபாகன், டெட் ஹாஃப், ஸ்டான்லி மாசோர், மாசாடாஷி ஷியாமா ஆகியோர்.. எடுத்து வைத்த இந்த படிநிலை ஒரு கணினியின் சிபி யூ எனும் மையப் பகுதியின் செயல்பாட்டை ஒரே ஒரு கணினி சில்லு அதாவது சிப் முடித்து விடும் என்கிற அளவிற்கு கொண்டு செல்லப்பட்ட மைல்கள் பூசி காம் என்கிற கால்குலேட்டர் திட்டத்திலிருந்து இந்த நுண் செயலி உருவானது
- டீனார்டு ஸ்கேலிங் என்பது அடுத்த படிநிலை ராபர்ட் டீனார்டு மற்றும் அவரை சார்ந்த ஐபிஎம் ஆய்வகர் குழு இதனைச் சாதித்தது.. டிரான்ஸிஸ்டர் வில்லைகளை சிறிதாக்கிக் கொண்டே போனால் அதனுடைய செயல்திறன் ஆற்றல் மற்றும் அடர்த்தி எவ்வாறு மாறும் என்பதை விளக்குகின்ற அளவுநிலை விதிகள் கொண்டு வரப்பட்டன.. வெறும் டிரான்சிஸ்டர் எம் ஓ எஸ் டிரான்சிஸ்டராக மாறியது. இதனால் மோர்ஸ் விதி நேரடி செயலாக்கத்திற்கு வந்தது.
- 1987 ஆம் ஆண்டில் கணினி செல்லுகளை குறை கடத்திகள் உற்பத்தி செய்யும் ஆலைகள் உலகெங்கிலும் உருவாவதற்கான படிநிலையை மோரீஸ் சாங் எடுத்து வைக்கிறார்..TSMC உருவாக்கிய இது உலக அளவிலான திறன் பேசிகளின் அளவை எடையை குறைத்ததில் மிகப்பெரிய பங்கு வகித்தது.. பிற்காலத்தில் ஒவ்வொரு திறன் பேசியும் ஒரு கணினி அளவிற்கு கொண்டுவர இந்த படிநிலை உதவியது என்று சொல்லலாம்.
- 2000 ஆம் ஆண்டில் டிரான்சிஸ்டர்களை மேலும் மிக மிக சிறிதாக்குகின்ற முறையை லித்தோகிரஃபி என்கின்ற அடிப்படையாக மாற்றி ஜப்பானிய விஞ்ஞானி ஹீரோ கினோஷிதா அறிமுகம் செய்கிறார்.. எனவே கணினி வில்லை எனப்படும் சிப் ஒரு டிரான்சிஸ்டர் அல்ல அது ஒரு உலகளாவிய அறிவியல் சங்கிலி என்பதாக மாறிப்போனது.
இந்த படிநிலைகளில் இந்தியர்களின் பெயர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்.. பென்டியம் உருவாக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் வினோத் தாம்..1380 அமெரிக்க உரிமங்கள் வைத்திருக்கும் அற்புத கண்டுபிடிப்பாளரான அடாமிக் லேயர், லேயர் டிபொசிஷன் என்னும் படிநிலையைக் கண்டுபிடித்த குர்டேஜ் சாந்து.. அதைவிட முக்கியமாக ராவ் துமாலா மின்னணுவியல் பேக்கேஜிங் துறையின் வித்தகராக உலக அளவில் போற்றப்படுவதை பார்க்கிறோம்.. ஆனால் இவர்கள் அனைவருமே இந்தியாவில் பிறந்திருந்தாலும் அயல் நாடுகளில் சென்று தன்னுடைய பங்களிப்புகளை செய்தவர்கள்.
இந்தியாவிலேயே பணியாற்றி இந்தத் துறையில் இந்தியாவை தலைநிமிர வைக்கும் விஞ்ஞானிகள் இல்லையா.
நிறையப் பேரை நாம் குறிப்பிட முடியும். உலக அளவில் இந்தத் துறை அறிமுகமான பொழுதே இந்தியாவில் இது சார்ந்து இயங்க வேண்டிய அவசியத்தை நம்முடைய அறிவியல் ஜாம்பவான்களான விக்ரம் சாராபாய், ஹோமி பாபா போன்றவர்கள் எடுத்து வைத்தார்கள்.. ஏற்கனவே நாம் குறிப்பிட்டதைப் போல இந்தியாவின் குறைக்கடத்திகள் குறித்த பயணம் 1960 களிலேயே தொடங்கிவிட்டது.
இந்தியக் குறைக்கடத்தித் துறையுடன் தொடர்புடைய முக்கிய விஞ்ஞானிகளில் முதன்மையானவர் என்று நான் கருதுவது டாக்டர் ராஜா ராமண்ணா. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இந்தியாவின் அணுசக்தி துறையோடு சம்பந்தப்பட்ட ஒருவரை எப்படி நாம் அப்படி அழைக்க முடியும் என்று அவருடைய குறை கடத்திகள் துறையுடனான நேரடி தொடர்பை நான் மிகைப்படுத்தவில்லை இந்தியாவினுடைய மின்னணுவியல் மற்றும் உள்ளூர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான அறிவியல் சூழலை உருவாக்கிய தலைமுறையின் முக்கிய முகமாக நான் அவரைப் பார்க்கிறேன் ஏனெனில் அவர் காலத்தில்தான் மூன்று அடிப்படை தொழில்முறை ஆய்வுக்கூடங்கள் இந்தத் துறையில் உருவாக்கப்பட்டன.
இரண்டாவது முக்கிய மாமனிதர் டாக்டர் எம் ஜே சராபி. இந்தியாவின் குறைக்கடத்திகள் உற்பத்தி வரலாற்றில் குறிப்பிடத் தக்க பெயர் ஆனால் இந்தப் பெயர் பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது எஸ் சி எல் சிஎம்டி என்று உருவாக்கப்பட்ட குறை கடத்தி உருவாக்கும் தொழில்துறையை டி ஆர் டி ஓ உடன் இணைத்து கேலியம் ஆர்சனைடு தொழில்நுட்ப மையம் என்கிற அளவுக்கு கொண்டு சென்றவர் அவர்.
பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகம் தன் உள்ளே வைத்திருக்கும் குறை கடத்திகள் ஆய்வகத்தின் எம் இ எம் எஸ் நானோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் இந்தியாவின் ஆராய்ச்சி திறனை வளர்த்தவர்களில் ஒருவராக நாம் பேராசிரியர் நவகாந்தா பட் போன்றவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் போற்ற வேண்டும் இவர் இந்தியாவினுடைய தற்போதைய குறைக்கடத்திகள் உருவாக்க ஆலோசனை அமைப்பிலும் இருக்கிறார்..
சமீபகாலமாக எப்போதுமே குறைக்கடத்திகள் உற்பத்தி விஷயத்தில் ஐ ஐ டி மெட்ராஸ் இயக்குனர் காமகோட்டி அவர்களை பாராட்டுவதை கொஞ்சம் அதிகப்படியாக நடந்து கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்.. கணினி வில்லை அமைப்பாக்க அறிவியலில் குறிப்பாக சக்தி ப்ராசசர் உருவாக்கத்தில் விஞ்ஞானிகளுக்கு தலைமை வகித்தார் என்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால் இந்த விஷயத்தில் நான் ஜிஎஸ் மதுசூதனன், நீல் காலா, அர்ஜூன் மேனன், போன்றவர்களின் பெயர்களை இருடடிப்பு செய்துவிடக்கூடாது என்பதை பதற்றத்தோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது.. ஐஐடி மெட்ராஸ் குஜராத்தை முந்திக்கொண்டு குறை கடத்திகள் விஷயத்தில் உற்பத்தி மையமாக மாற வேண்டும்.. என்பதற்காக சொல்லுகின்றேன்.
டாக்டர் கமல்ஜீத் சிங் இறுதியாக நான் குறிப்பிட விரும்பும் பெயர்களில் ஒன்று. தற்போது குறை கடத்தி ஆய்வகத்தின் இயக்குநராக இந்தியாவின் முதல் குறை கடத்தி உற்பத்தி பேக்கேஜிங் டெஸ்டிங் மற்றும் நுண் எலக்ட்ரானிக்ஸ் துறை மையங்களை இணைக்கின்ற.. அற்புத அறிஞர் இவர்.
குறை கடத்தி உற்பத்தித் துறை சார்ந்து சீனாவும் ஏனைய நாடுகளும் அடைந்திருக்கும் உயரத்தை நாம் அடைய வேண்டும் என்றால்.. அடிப்படை மாற்றம் இந்தியாவினுடைய உயர்கல்வியில் ஏற்பட வேண்டும்..
இன்னமும் நாம் பொறியியல் துறையில் பழைய ECE,IT, என்று வைத்திருக்கிறோம்.. அல்லது டேட்டா சயன்ஸ்.. செயற்கை நுண்ணறிவு என்று மாணவர்கள் கொத்து கொத்தாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.. அதை விடுத்து பொறியியல் கல்லூரி கல்வியில் குறை கடத்திகள் கணினி வில்லைகள் தொடர்பான நேரடி பாடங்களும் துறைகளும்.. ஆய்வுக்கூடங்களும் தொழிற்சாலைகளோடு தொடர்புடைய ஆய்வு முயற்சிகளும் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த துறையில் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளை நம்மால் உருவாக்க முடியும் என்பதுதான் இன்றைய நிலை…
எத்தனையோ நாடுகளில் தற்போது கைவிடப்பட்டு விட்ட பழைய காலத்து பொறியியல் பாடங்களை இன்னமும் வரிந்து கட்டி படித்துக் கொண்டிருக்கும் நம்முடைய பொறியியல் படிப்புக்கான மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தை அருகிவிட்டது அல்லது முற்றிலும் நின்றுவிட்டது என்பதை எப்போது உணரப்போகிறோம்.
📚 எழுதியவர் :

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
