அயல்கிரஹ வாசிகள்… அதாவது ஏலியன்ஸ் – நம் புவிக்கு ஏற்கெனவே விஜயம் செய்தது மட்டுமல்ல…. நம் நடுவில் வசித்து வருவதாகவும் நான் நம்புகிறேன். ஆதாரங்கள் உள்ளன. ஒரு அயல் கிரஹ கலாச்சாரத்திலிருந்து அவ்வப்போது நமக்கே தெரியாமல் விஜயமும் நடக்கிறது என்றும் நிரூபிக்க முடியும். நீங்கள் அப்படியானதொரு அயல்கிரஹ நாகரீகங்களில் இருந்து நம் புவியை விஜயம் செய்யும் ஏலியன் என்றால் புவியோடு தகவல் தொடர்பு கொள்ள உங்களுக்கு மிகுந்த வசதியான மலிவான ஊடகம் ரேடியோ எனும் வானொலிதான். ஒரே ஒரு சிறிய வானொலி அலை தகவல் துண்டை வான் வழியே புவிக்கு அனுப்பிட ஒரு நயா பைசாவை விட குறைவான செலவே ஆகும். அயல்கிரஹ – நண்பர்ளைத் தேட நாம் தொடங்க வேண்டிய இடம் வனொலி அலைகள் – ரிசீவர் டெர்மினலாகவே இருக்க முடியும்.

ஆனால் நாம் அவர்களை பற்றிய ஆதாரங்களை திரட்ட வேறு நமக்கு பரிட்சயமான இடங்களிலும் தேடலாம் அல்லவா. செவ்வாய் கிரஹத்தில் உயிரினம் உள்ளதா என்று கோடி கோடியாக செலவு செய்து – நம் காதை தீட்டி வித விதமான ரேடியோ சிமிக்கைகளை இதுவாக இருக்குமா… அதுவாக இருக்குமா என்று இரவும் பகலுதம் அல்லாடுவதை விட – புவியிலேயே பல ஆதாரங்கள் இருக்க – அவர்கள் நம் கூடவே இருக்க – அது தெரியாமல் இருப்பது ரொம்ப அபத்தமான காமடியாக இருக்காதா என்ன-?

இந்த பார்வையில் இரண்டு அனுமானங்கள் பிரபலமாக இப்போது அறியப்படுகின்றன. முதலாவது அறிவியல் பூர்வமான அனுமானம் இன்று நம் புவி அயல் கிரஹ பறக்கும் தட்டு போன்ற விண் – ஊர்திகளால் விஜயம் செய்யப்படுவது குறித்தது. அதற்கு அடையாளம் காணமுடியாத பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects) அனுமானம் என்று பெயர் (UFO – Hypothesis) இரண்டாவது அனுமானமும், இதே அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் புவிக்கு வந்தது சார்ந்ததே. ஆனால் அது நடந்தது பதிவு பெற்ற – பெற்று வரும் – வரலாற்று காலத்திற்கு முன்பு என்பது.

No description available.

அது எப்படியாயினும் இது ஒரு சிக்கல் மிகுந்த துறை. அயல்கிரஹ உயிரி – நிபுணர் தார்ண்டன் பேஜ்ஜுடன் இணைந்து நியூயார்க் இத்தாகரிவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் நான் நிகழ்த்திய உரையாடல் ஒரு புத்தகமாகவே வந்திருக்கிறது (கார்னெல் யுனிவெர்சிட்டி பிரஸ்). அதில் இந்த துறை சார்ந்த அனைத்து பக்கங்களையும் பற்றி அக்குவேறு ஆணிவேறாக விவாதித்தும் இருக்கிறேன். என் கருத்து என்னவென்றால் நாம் நேரடியாக பார்த்த சாட்சி என்பதோ அல்லது ஆச்சரியம் பரவசம் என்றோ கருதத்தக்க விஷயமெல்லாம் ஆராயத்தக்க நிலையிலேயே உள்ளது என்றாலும், நாம் நம் புவி சார்ந்த ராணுவ ஊர்தியில் அறிவு சார்ந்தே தேடலில் ஈடுபடுகிறோம். உதாரணமாக ஆறாம் நூற்றாண்டுகாரர்கள் ஒரு அயல் உயிரி புவிக்கு விஜயம் செய்ய உதிரும் நட்சத்திரத்தையே ஊர்தியாக கணித்திருப்பார்கள். ஒரு பத்து – பன்னிரெண்டாம் நூற்றாண்டில் புவியில் வந்து விழும் எரிகல் – அவர்களது ஊர்தியாக `ஆகி` இருக்கும். கூடவே – பீரங்கி குண்டுபோல கப்பல் விட்டு கப்பல் தாவிய வட்டமான இரும்பு, செம்பு, தாமிர குண்டு மாதிரி வானத்தில் தவறிக்கூட அவர்கள் புவி மீது வந்து விழுந்து விட்டதாக கூறினார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் யுத்த ராக்கெட் வழி கற்பனை அது கண்டம் விட்டு கண்டம் தாவி ஒரு ஏவுகளை ஆவதற்கு மேலும் 100 வருடங்கள் ஆவதற்கு முன்னாலேயே செவ்வாய்கிரஹத்தில் இருந்து நம் புவி மீதே படையெடுத்த கதையை ஹெச்.ஜி. வெல்ஸ் போன்றவர்களால் முன்மொழிய முடிந்தது.

நம் காலத்தில் ஒரு ஸ்பேல் ஊர்தி – புவிக்கு வரவேண்டும். நாம் நமது வளர்ச்சிக்கு தக்கவே நம் கற்பனையை மூளையில் ஏற்றி வைத்துக்கொண்டு இந்த பிரச்சனையை அணுகுவதால் இரவில் வானத்தை கடக்கும் விமானமும் சற்றே புவிக்கு கிட்டத்து சுற்றுப்பாதையில் சுற்றும் செயற்கோளும் கூட கண்களுக்கு ஏதோ அயல்கிரஹ ஊர்தி என்று படலாம். அயல்கிரஹ ஊர்தி என்பது நமது – எரிபொருள் அடைத்த அதே இயந்திரவியல் – பொறியியல் சார்ந்ததாக இருப்பதை கடந்து நம் ஆட்களுக்கு யோசிக்கவும் தெரியவில்லை.

ஒருவேளை, இப்படியும் இருக்கலாம். நம்மால் இன்னமும் அடைய முடியாத வகை வேக ஊர்திகள் வந்து போயிருக்கலாம். குறிப்பாக ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்ய முடிந்தவையாக இருப்பின் மின்னல் முக்கியத்துவம் பெறுகிறது. அப்படியானால் அவர்களது ஓரளவு இருப்பிட ரகசியங்களை நாம் சொல்லி விட முடியும். ஐன்ஸ்டீனின் ஒளி வளைவு கோட்பாடு மற்றும் சார்பியலின்படி, 80 ஒளி ஆண்டு தள்ளி பிரபஞ்சத்தில் ஒரு மூலையில் வசிக்கும் ஒரு அயல்கிரஹவாசிக்கு – தற்போது புவியில் இரண்டாம் உலக யுத்தம் நடந்து வருகிறது. ஒரு புவி ஆண்டில் (ஜுலியன் – நாட்காட்டி!) பயணிக்கும் தூரமே ஒரு ஒளி – ஆண்டு என்பது. சர்வதேச வானியல் யூனியனின் கூற்றுப்படி அது 9.46 டிரில்லியன் கிலோ மீட்டர். இது ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் நடுவே உள்ள தொலைவை இத்தனை கிலோ மீட்டர் தூரம் என்பது மாதிரி. நாம் விநாடிக்கு ஒளி போகும் தூரத்தை வைத்து மீட்டர் கணக்கிலும் முயற்சி செய்யலாம். அது சற்றே குழப்பலாம். பட்…ஹாவ் ய ட்ரை. ஒளி ஒரு வினாடிக்கு செல்லும் தூரம் 299792458 மீட்டர். நிலாவில் பட்டு எதிரொலிக்கும் சூரிய ஒளி நம் புவியை அடைய 1.3 நிமிடம் ஆகிறது, என்றால் அதை வைத்தும் நம் புவியில் இருந்து சந்திரன் இருக்கும் – தொலைவை அளந்து சொல்ல முடியும். சூரிய ஒளி நேரடியாக சூரியனில் இருந்து கிளம்பி புவியை அடைய எட்டு நிமிடம் ஆகிறது. இப்படி இரவு வானில் நம் கண்களுக்கு புலப்படும் நட்சத்திர ஒளி யாவுமே எப்போதோ அங்கிருந்து கிளம்பி இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறது.

அப்படிப் பார்த்தால் 80 ஒளி ஆண்டு தள்ளி இருப்பவர் நம்மை பார்க்கும்போது அவர் நமது 1950களைத்தான் பார்க்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி ஒன்றின் வழியே நமது புவியை 65 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் வசிக்கும் வேறு கிரஹவாசிகளின் வானியலாளர் ஒருவர் பார்த்தால் அவருக்கு நம் புவியில் டைனாசர் காலம்தான் தெரியும். இப்படி ஐன்ஸ்ட்னை மையமாக வைத்து நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்னொரு வகையிலும் நாம் இந்த பிரச்சினையை அணுகலாம். அதுவும் கூட அடையாளம் காண இயலாத பறக்கும் ஊர்திகள் (UFO) சார்ந்ததுதான் என்றாலும் நமக்கு மிக சிறிதளவே அறிய வந்த – நம்மால் பெருமளவு அறிவியில் ரீதியல் விரிவாக விவாதிக்க முடிந்த விஷயங்களை வைத்து அயல்கிரஹவாசிகளின் வருகையை குறித்து எதுவுமே நமக்கு தெரியாத நிலையில் இருந்து சற்றே விவரிக்க முடியும். இவ்விஷயத்தில் நான் கண் மூடித்தனமான சில கணக்கீடுகளை செய்து பார்க்க போகிறேன். அதற்கு முன் நாம் மக்களிடம் பொதுவாக நிலவும் ஒரு அம்சத்தை எடுத்து ஆராயலாம்.

Carl Sagan with the planets - PICRYL Public Domain Image

பல அனுமானங்கள் இருந்தும் ஒரு விஷயத்தை பரிசீலிப்போம். நாம் சாண்டாகிளாஸ் எனும் கிருஸ்துமஸ் தாத்தா அனுமானத்தை எடுத்துக் கொள்வோம். சான்டா கிளாஸ் எனும் குட்டி தேவதை ரக தாத்தா டிசம்பர் 24 – 25 இரவில் உலகிற்கு நம், புவிக்கு விஜயம் செய்வதாகவும் பல லட்சம் கோடி வீடுகளில் கிருஸ்துமஸ் பரிசுகளை வைத்துப் போவதாகவும் சொல்லப்படும் அனுமானம். நாம் அமெரிக்கா என்கிற ஒரு நாட்டை பரிசீலிப்போம். நிறைய உணர்வுகளை உள்ளடக்கிய உதாரணம் என்றாலும் ஒரு கணக்கீட்டை செய்து பார்ப்பதில் தவறில்லை. ஒவ்வொரு வீட்டிலும் அந்த குட்டி தாத்தா ஒரு வினாடி தன் பொழுதை கழிப்பதாக கொள்வோம். வழக்கமான அந்த பனிச்சறுக்கு மானின் ஹோ..ஹோ… சப்தத்தை கூட சேர்த்து யோசிக்க வேண்டாம். அவர் அதீத திறன் படைத்தவராகவும் அதிவேகம் கொண்டவராகவும் கற்பனை செய்வோம்.

நம்மால் சில கணக்கீடுகளை செய்ய முடியும். அவரை யாராலுமே பார்க்க முடியாத அளவு வேகம். ஒரு வினாடிக்கு ஒரு வீடு. முன்பெல்லாம் கொஞ்சம் கடினம். அவர் குழந்தைகளின் காலுரை (சாக்ஸ்)க்குள் அவரவர்களுக்கான பரிசுப்பொருளை வைத்து செல்வதாக நம்பப்பட்டது. தற்போது அப்படி அல்ல. எனினும் ஒரு வீட்டிற்கு ஒரு வினாடி என்று கணக்கிட்டாலும், நூறு மில்லியன் (அமெரிக்கா வீடுகளை முற்றிலும் விஜயம் செய்து முடிக்க – மூன்று வருடங்கள் (கிரிகேரியன் நாட்காட்டி) ஆகும். ஒரே இரவு எனும் எட்டு மணி நேரத்தில் என்றால் அது முடியாத விஷயம். எனவே அந்த பனிச்சறுக்கு கலைமான் பயணம் எல்லா வீடுகளிலும் – ஒரு வீட்டிலும் எந்த நேரமும் எடுத்துக் கொள்ளாமலே ஒரு பயணத்தை மேற்கொள்ள… கலைமான் வேக  அல்லது அதீத வேக இயந்திர நுட்பத்தை கைவிட்டு யோசிக்க வேண்டிய நிலையையே ஏற்படுத்தும். நாம் இதுபோல கருதுகோளை கையிலெடுத்து பலவகை புள்ளி விபர மறு ஆய்வுக்கு உட்படுத்தி சில நேரடியான சந்தேகங்களை அனுமானங்களை முன் வைத்து அந்த கருதுகோள் ஆய்வு செய்யுமளவு அறிவியல் தன்மை வாய்ந்ததா என்பதை பரிசீலிக்க முடியும். சாண்டா கிளாஸ் அனுமானம் ஏற்றுக்கொள்ள தக்கதல்ல என்றும் கூறிவிடலாம்.

இதே போலவே நாம் நம் கோளான புவிக்கு இதற்கு முன் இந்தந்த காலத்தில் எத்தனை முறை அயல் கிரஹவாசிகளின் அடையாளம் காண முடியாத வான் ஊர்திகள் எவ்வளவு தரை இறங்கி இருக்கும் என்பதையும் ஊகிக்க முடியும். நமக்கு வரும் இது சார்ந்த தகவல்கள் ஒரு நாளைக்கு பல என்பதாக இருந்தாலும் நான் அதை ஏற்க மாட்டேன். அந்த அனுமானத்தை நான் எடுக்க முடியாது. ஆண்டுக்கு சரியாக எவ்வளவு – வர வாய்ப்புள்ளது என்பதை கணக்கிட நான் ஒரு யுத்தி வைத்திருக்கிறேன்.
முதலில் N எனும் எண். இது நமது நட்சத்திர மண்டலங்களில் உள்ள – நட்சத்திரங்களுக்கு இடையிலான ஸ்பேஸ் டிராவில்- விண் பயணம் – மேற்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி அடைந்த அயல்கிரஹ நாகரீகங்களின் எண்ணிக்கை என்று வைப்போம். அவர்கள் எதை பயன்படுத்தி அந்த பயணங்களை மேற்கொள்வார்கள். எப்படி மேற்கொள்வார்கள் என்பதெல்லாம் – நமது கலைமான் வேக அனுமானம் போலவே N தவிர்த்து விடவேண்டியதுதான் N என்பது எவ்வளவாக இருக்கமுடியும் என்பதற்கு வேறுவழியே கணக்கிட முடியும். முதலில் N எனும் எண் பிரபஞ்சத்தின் நட்சத்திர கட்டங்களில் உருவாகும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை சார்ந்தது. இந்த விஷயம் நமக்கு ஓரளவு பிடிபட்ட விஷயம் ஆகும். N என்பது கோள்களைக் கொண்ட நட்சத்திரங்களையும் சார்ந்தது. நமக்கு ரொம்ப தெரியாது என்றாலும் ஓரளவு புள்ளி விபரம் உள்ளது. இந்த எண் ழி என்பது இதுபோன்ற கோள்களில் உயிரிகள் உருவாகி வாழத்தகுந்த தட்பவெப்பம் கொண்ட கோள்கள் எவை என்பதையும் சார்ந்தது. வாழத் தகுதி இருந்து போய் வாழும் கிரஹகங்கள் கூடவே உயிரிகளே தோன்றும் கிரஹகங்கள் இவற்றையும் சார்ந்தது எண் N உயிரிகள் தோன்றுவது என்பதை விட அறிவார்த்தமான – உயிரிகளின் பரிணாம் அடைந்த கிரஹகங்கள் எவ்வளவு, அப்படி அறிவார்த்த உயிரிகள் – தொழில்நுட்ப நாகரீகங்களாகி நமது புவி போல முன்னேற்றமடைந்த சமூகமாக அறிவியல் தேடலோடு கூடிய நாகரீகமாக மாறிய கிரஹகங்கள் எவ்வளவு என்பதையும் எண் N சார்ந்தது ஆகும். அப்படி ஆகி எத்தனை சராசரி கால அளவாகிறது என்பதையும் கூட நம் புவியை நோக்கி தனது ஊர்தியை அனுப்ப முடிந்த அயல்கிரஹ உயிரிகளின் எண்ணிகைகயான N குறிக்கிறது.

space, research, science, earth, universe, author, screenshot, venus, extraterrestrial, astronomer, radiation, astronomical object, carl sagan, cosmologist, astrophysicist, astrobiologist, amino acids

இப்படி அடுத்தடுத்து நாம் கழித்துக் கொண்டே போனால் N எனும் எண் குறித்த மாதிரிகள் குறைந்து கொண்டே போவதை பார்க்கலாம். நம்மிடம் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் அதைவிட பல மடங்கு எண்ணிக்கையில் குறைந்த நட்சத்திரங்களுக்கே கோள்கள் உண்டு. அவற்றுள்ளும் உயிர்தோற்றம் கொண்ட கோள்கள் எவ்வளவு இருக்கும். ஒரு சிலர் ஒன்றே ஒன்றுதான் என்பார்கள் – அதிலும் நாகரீக வளர்ச்சி மூலம் அறிவியல் மயமான கோள்களின் – அயல்வாசிகள் எவ்வளவு இருக்க முடியும். தொழில்நுட்ப அறிவியலை எட்டி – பல பத்தாண்டுகள் நூறாண்டுகள் கடந்தவை எத்தனை எனும்போது எண் N மேலும் குறுகுவதை காணலாம் ஒரு தொழில்நுட்ப நாகரீகத்தின் சராசரி வாழ்நாள் என்பதற்கு பத்தில் ஒரு பங்காக எண் N இருக்கக்கூடும்.

நாம் அந்த எண் N என்பது பத்து மில்லியன் (10³*10³) என்று கொண்டால், அதாவது சராசரி உயிரி வாழ் – நிலை ஆண்டுகளை அடைந்த கோள்கள் எனில் அதில் ஒரு மில்லியன் (10³*10³ தொழில்நுட்ப நாகரீகங்களை கண்டவையாக இருக்கலாம். நாம் மிகத் துல்லியமாக கணக்கிடுவது மிக மிக கடினம். 10 மில்லியன் வருடம் ஒரு சராசரி சமூகம் – தொழில்நுட்ப நாகரீகம் அடை ஆகும் காலம் என்பது ஏறக்குறைய நமது சொந்த அனுபவம் சார்ந்த விஷயமாகவும் கொள்ளலாம். இத்தகைய நம்பிக்கை – அடிப்படை எண்களையே எடுத்துக்கொண்டு அவை நம்மை எதை நோக்கி இட்டு செல்கிறது என்பதை பார்ப்போம்.

இந்த ஒரு மில்லியன் (10³*10³) தொழில்நுட்ப அயல்கிரஹ நாகரீகங்களும் னி எண்ணிக்கையிலான – விண் பயண ஊர்திகளை லாஞ்ச் – ஏவுவதாகக் கொள்வோம். எனவே 10³*10³N எண்ணிக்கையிலான விண் பயண ஊர்திகள் ஆண்டுதோறும் ஏவப்படுகின்றன. ஒவ்வொரு பயணத்தின்போதும் ஒரே ஒரு சந்திப்பு மட்டுமே நடப்பதாகவும் கொள்வோம். எனவே ஆண்டொன்றிற்கு பிரபஞ்சத்தில் 10³*10³- தரையிறக்கங்களை எதிர்பார்க்கலாம். பிரபஞ்சத்தில் 10³*10³*10³*10-ல் ஆர்வத்தை தூண்டும் தரையிறங்க விரும்பும் இடங்கள் இருக்கலாம். (நம்மிடம் 10³*10³*10³*10²ல் பன்மடங்கு நட்சத்திரங்கள் உள்ளன) எனவே ஒரு கோளில் ஆண்டுக்கு சராசரியாக 1/10²*10²=10–4 தரையிறக்கம் நடக்க வாய்ப்பு உள்ளது. அடையாளம் தெரியாத அயல்கிரஹ ஊர்திகள் புவியில் மட்டுமே தரை இறங்குவதாக கொண்டால் மட்டுமே – வேறு மாதிரி சராசரியை அளவிடலாம். ஆக ஆண்டுக்கு ஒரு தொழில்நுட்ப நாகரீகம் அடைந்த கோளில் இருந்து பத்தாயிரம் ஏவுதல்கள் நடக்கிறது என்பதோ ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 10 மில்லியன் விண் – ஊர்திகள் சக உயிரிகளை தேடி விண் கூட்டத்திற்கு இடையே பயணிக்கும் என்பதோ சற்று மிகையான கற்பனை. அப்படியே நம்மை விட தொழில்நுட்பத்தில் உயர்ந்துவிட்ட – அயல் கிரஹவாசிகள் நம் புவிக்கு மட்டுமே ஆண்டுக்கு பத்தாயிரம் விண் ஊர்திகளை ஏவுகிறார்கள் என்று யோசிப்பது அபத்தமே. நாம் சராசரி – நாகரீக கால அளவை வைத்து பார்த்தால் மேலும் சாத்தியங்கள் குறைந்து ஒளி ஆண்டுகள் குறித்த அறிவியலின்படி – விண் – ஊர்தி பயணமே எப்போதாவது நடக்கும் ஒன்றாகக்கூட உணர வைப்பதை காண்கிறோம்.

அமெரிக்க இயற்பியலாளர் ஹாங்-ஹீ-ஷியூ – ஆண்டு ஒன்றுக்கு புவியை விஜயம் செய்யும் அடையாளம் தெரியாத அயல்கிரஹ ஊர்திகளை இதே போல ஒரு கணக்கீட்டு முறைபடி அறிவித்தார் என்றாலும், அவர் வேறு ஒரு கணக்கீட்டு முறையை முன்வைத்தார். ஒட்டு மொத்த நட்சத்திர கூட்டத்தின் வரலாற்றை பரிசீலித்து அந்த ஊர்திகள் எத்தகைய உலோகங்களால் ஆனவை என்பது குறித்தது அவரது அணுகுமுறை. அமெரிக்கா நிலாவில் இறக்கிய அப்பல்லோ. காப்ஸ்யூல் போலவே ஒன்றை உருவாக்கிட நமக்கு எவ்வளவு என்ன வகை உலோகம் தேவைப்படும் என்பதை வைத்து அவரது அணுகுமுறை நீள்கிறது. அந்த உலோகங்களை நட்சத்திரங்களில் இருந்து அகழ்ந்து எடுக்க அந்த நாகரீகங்களால் முடிந்திருக்க வேண்டும் என்பது வேறு விஷயம். சிலர் அந்த ஊர்திகள் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள் என்று வாதிடுகிறார்கள். அதை நாம் மறுப்பதற்கில்லை. நம்மை போலவே பிளாஸ்டிக் போன்றவற்றை திறம்பட அடைந்தவர்களாகக் கூட அந்த அயல்கிரஹ நாகரீகங்கள் இருந்திருக்க முடியும்.

Buy Carl Sagan's Cosmic Connection: An Extraterrestrial Perspective Book Online at Low Prices in India | Carl Sagan's Cosmic Connection: An Extraterrestrial Perspective Reviews & Ratings - Amazon.in

இன்னொரு முக்கியமான எதிர்வாதம் என்னவென்றால் உண்மையில் நாம் – அதாவது புவியின் மனிதர்கள் பிற கிரஹவாசிகள் ஆர்வம் கொள்ளும் அளவிற்கு – உகந்தவர்களா என்பது நாமும் தொழில்நுட்ப நாகரீகமாக வளர்ச்சி அடைந்த – அணுஆயுதம் சந்திரனுக்கு மனிதன் – செவ்வாய் கோளுக்கு செயற்கைக்கோள் என்று சாதித்தவர்கள்தான் என்றாலும் வேற்று கிரஹவாசிகள் வந்து சந்தித்து மதிக்குள் அளவுக்கு இன்னமும் ஏதோ ஒரு விஷயம் பாக்கி இருக்கிறது என்பவர்களும் உண்டு. பிரபஞ்சத்தில் எத்தனையோ மூலை முடுக்குகளில் ஏதேதோ இருக்கும்போது இந்த குட்டிப் புள்ளியான பூமியை ஏன் ஒருவர் பார்த்து பின் தொடரவேண்டும்? ஒரு உயிரி – தோற்றவியல் – நாகரீக வளர்ச்சியியல் நிபுணர் வேற்று கிரஹம் ஒன்றில் வாழ்வதாகவும் அவருக்கு இதுபோன்ற உயிரி சமூகத்தின் வளர்ச்சி குறித்த ஆர்வம் என்றும் வைத்துக்கொள்வோம். அப்படி பார்த்தாலும் புவிதான் – என்று ஏன் வரவேண்டும். அந்தமானில் புதிய வகை மீன்பிடி வலை கண்டுபிடிக்கப்பட்டால் நமது உலகம் மீனவர்கள் போட்டதைப் போட்ட இடத்தில் விட்டு அந்தமானுக்கு பறப்பார்களா என்ன?

ஆனால் மிகவும் ஆச்சரியமூட்டும் ஆக சரியான துப்பு நமக்கு நமது வரலாற்றிலேயே கிடக்கிறது. ரஷ்ய அயல் உயிரி அறிஞர் ஐ.எஸ்.ஷொகொலோவ்ஸ்கி. ஊருக்கு ஊர் சொல்லப்படும் சொந்த மண்ணின் ஆதி வரலாற்றிலிருந்து அவர் நமக்கு ஆதாரங்களை அடுக்குகிறார். சுமேரியர்களிடம் ஒரு ஆதி-கலாச்சார நிகழ்வு உள்ளது. ஆதிகாலத்தில் வானத்தில் இருந்து இறங்கி வந்த மூதாதையர்கள் அவர்களுக்கு கணிதம், வானவியல், வேளாண்மை, சமூக அறிவியல், எழுத்து பயிற்சி என யாவும் கொடுத்து சென்றதாக – ஆறாண்டுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட மலை உச்சியில் உள்ள ஆதி கருங்கல் வடிவங்கள் முன்கூடி – கொண்டாடுகிறார்கள்.

நம் புவியின் பல கலாச்சாரங்களில் இப்படி விண்ணுலகிலிருந்து இறங்கி வந்தவர்கள் அந்த கலாச்சாரத்தின் புராண-கதாநாயக-நாயகிகளாக இருப்பதை பார்க்கிறோம். இந்தியா, ரோமாபுரி உட்பட பல சமூகங்களில் பல கைகள் பல கால்கள் இரண்டு மூன்று – ஏன் அதற்கம் மேற்பட்ட – தலை கொண்ட தேவதை உருவ கடவுளர்கள் உள்ளனர். ஏறக்குறை எல்லாம் மதங்களும் – வாழ்வின் ஒளியை அந்த வானத்திலிருந்து பெற்றதாக எப்போதும் வான் பார்த்தே தன் வேண்டுதல்களை வைப்பது தற்செயலல்ல. அதுதான் அயல்கிரஹவாசிகளின் பலவகை விஜயங்களை ஊர்ஜிதம் செய்யும் வரலாற்று சாட்சியங்கள் என்று ஐ.எஸ்.ஷொகொலெவ்ஸ்கி விவரிக்கும்போது நமக்கு வாவ் என சிலிர்க்கிறது.

இத்தகைய புதிர்களின் ஊடாக நம் கால கட்டம் என்பது இருநூறு புவி ஆண்டுகளை (கிரிகேரியன் நாட்காட்டி) உள்ளடக்கியதே. அயல்கிரஹவாசிக்கு இருநூறு வருடம் என்பது சும்மா தூசியாக இருக்கலாம். நமது பல பல சந்ததிக்கு முன் அவர்கள் விஜயம் செய்திருக்கிறார்கள். நம் கூடவே சிலர் தங்கியும் விட்டார்கள் என்பது ஷொகொலோவ்ஸ்கியின் வாதம். அல்லது நம் நண்பர் டக்ளஸ் ஆடம்ஸ், ஹிட்சிகர்ஸ் கைடு-டு- காலக்ஸியில் எழுதியதுபோல எங்கோ தொலைதூரத்து அயல்கிரஹ எலிகள் எல்லாம் சேர்ந்து முன்பு எப்போதோ, இங்கு வந்து தொடங்கிய பிரமாண்ட ஆய்வாகக்கூட – மனிதர்கள் – இருக்கலாம். அவ்வப்போது நமது அடுத்த நடவடிக்கை என்ன என்பதை யாரோ எங்கோ இருந்து கண்காணித்து ஆய்வு முடிவுகளை அவர்களுக்குள் பகிர்ந்து திருப்தி அடைவதும் புதிய – ஆய்வுகளுக்காக புவியில் எரிமலை, வைரஸ், என்று விட்டுப்பார்ப்பதுமாக இருப்பதையும் கற்பனை செய்தால் வயிற்றை கலக்குகிறது. எது எப்படியோ அவர்கள் ஏற்கெனவே வந்து விட்டார்கள். நம்மோடுதான் இருக்கிறார்கள். இரண்டில் ஏதோ ஒன்று உண்மை. அல்லது இரண்டுமே உண்மை.

———

காரல் சாகன் (1934-1996) – பல அறிவியல் நூல்களை எழுதிய பிரபல வானியல் அறிஞர். இந்தக் கட்டுரையை 19880ம் ஆண்டு – தி காஸ்மிக் கனெக்ஷன் நூலில் அவர் எழுதினார்.

———தொடர் 1:

அறிவியல் ரீடோ மீட்டர் 1: மனிதன் நாற்ற வாயுவை வெளியேற்றுவது ஏன்? – ஐசக் அஸிமவ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்தொடர் 2:

அறிவியல் ரீடோ மீட்டர் 2:  “ஆங்.. இவன்.. அவன் ல்ல..?!” தொ(ல்)லை நோக்கி இம்சைகள் – ஆர்தர் எடிங்டன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

 தொடர் 3:

அறிவியல் ரீடோ மீட்டர் 3: “நான் சும்மா டுபாகூருப்பா போலி நோயாளிகள் ” – டாக்டர் விக்டர் பென்னட் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்தொடர் 4:

அறிவியல் ரீடோ மீட்டர் 4: “குண்டக்க மண்டக்க அறிவியல்” – ரிச்சர்டு ஃபைன்மன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்தொடர் 5:

அறிவியல் ரீடோ மீட்டர் 5: அய்யோ… முடியல்ல…. உளவியல் உளறலிசம்! – நோட் கார்னல் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

 அறிவியல் ரீடோ மீட்டர் 6: நம்மள முழு கிறுக்கனாகவே ஆக்கிடு வாங்கப் போல… (நீங்கள் அணுவா… அதை பரிசோதிக்கும் கருவியா) – ஹெயின்ஸ் ஆர்.பாஜெல்ஸ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *