அறிவியல் ரீடோ மீட்டர் – 9: நல்லாத் தானேடா போயிட்டிருந்துச்சு?! (இசை மட்டுமா இசை) – வால்டர் லெவின் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்எனக்கு பத்து வயதாக இருக்கும்போது வயலின் கற்றுக் கொள்ள சென்றேன். படுதோல்வி. ஒரே வருடம். நின்று விட்டேன். பிறகு எனக்கு இருபது வயதானபோது பியானோ முயற்சி. பியானோ ஆசிரியரே கையெடுத்து கும்பிடும் அளவு சோதனை. படுதோல்வி. இன்றும் கூட எனக்கு எப்படி சிலரால் காகிதத்தில் அச்சடித்த நோட்ஸ் பார்த்து அதை ரம்மியமான இசையாக வாசிக்க முடிகிறது என்பது பிடிபடுவதே இல்லை. ஆனால் இசையினை ரசிக்கின்றேன். எப்படி தெரியுமா?. இசையின் உணர்வு நிலையை சொல்லவில்லை. நான் இசையின் இயற்பியலை புரிந்து கொண்டிருக்கிறேன். அதை ரசிப்பேன். அது ஒலியின் இயற்பியலோடு தொடங்குகிறது.

ஒருடமாரம் அல்லது டியூனிஸ் ஃபோர்க் எனப்படும் இசைக்கவடில் அல்லது வயலின் போன்ற கருவிகளில் அதிவேக அதிர்வுகள் ஏற்படும்போது ஒலி தொடங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியும். பட்டரை வேலை இரும்பு அடிக்கிற  வேலை முதல், ஒரு பறவை கத்துவது வரை அதிர்வுகளே ஓசை ஆகின்றன. இந்த அதிர்வுகள் வெளி தெரிபவையாக உள்ளன அல்லவா? ஆனால் இவை அதிரும்போது என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியாது ஏனெனில் அது கண்ணிற்கு தெரிவதில்லை.

முன்னும் பின்னுமாக அதிரும் – வேகமாக இசைதல் – இயக்கம் என்பது  ஒரு இசைக்கவடில் ஏற்படும்போது இசைக்கவடு முதலில் தன் அருகே உள்ள  காற்றை அமுக்கி இறுக்குகிறது. பிறகு மெல்ல அதிர்வு நகர்ந்து பிறகு உள்ள காற்றுப் பகுதியில் அழுத்தம் தகர்த்தும். இப்படி மாறி மாறி தள்ளுவதும் இழுப்பதுமாக ஒரு அலை காற்றழுத்த அலை உருவாகிறது. இதுவெ ஒலி அலை.  நம் காதுகளை இந்த அலை வெகு வேகமாக வந்து சேர்கிறது. இதை நாம் ஒலியின் வேகம் என்று அழைக்கிறோம்.  இதன் அளவீடு நொடிக்கு 340 மீட்டர்கள் (ஐந்து வினாடிக்கு ஒரு மைல் அல்லது மூன்றே வினாடியில் ஒரு கிமீ என்றும் சொல்லலாம்). அறை – வெப்பநிலையில் இதுதான் ஒலியின் வேகம். இது எந்த ஊடகத்தின் வழியே பரவுகிறது என்பதை வைத்து ஒலியின் வேகம் மாறும் தன்மை உடையது. காற்றைவிட தண்ணீரில் நான்கு மடங்கு அதிக வேகத்திலும், இரும்பு வழியே பதினைந்து மடங்கு அதிவேகத்திலும் ஒலி செல்கிறது.

ஒளி – ஒரு வெற்றிடத்தில் செல்லும் வேகம் மிகப்பிரபலமான ஒரு மாறிலி. அதை C என்று குறிக்கிறார்கள் அது ஒரு நொடிக்கு 300,000 கி.மீ ஆகும். நாம் கண்ணால் காணும் ஒளி (ஒலி போல இல்லாமல்) தண்ணீரில் மூன்று மடங்கு குறைவான வேகத்தில் செல்கிறது.

நாம் இப்போது இசைக்கவடுக்கு திரும்புவோம். அந்த ஒலி அலை நம் காதுகளை எட்டும் போது என்ன நடக்கிறது? ஒலி  அலை நமது காதுகளை எட்டும்போது அது நமது செவிப்பறை எனும் செவி மென் சுவர்மீது விழுகிறது. இது ஒரு மென் சவ்வு. ஒலி அலை அந்த மென் சவ்வை அதிர்வுற வைத்து அதை ஊசலாட்டத்திற்கு உட்படுத்துகிறது. இசைக்கவடு காற்றுக்கு அழுத்தம் கொடுத்ததாலேயே இது நிகழ்கிறது. செவிப்பறை – பிறகு இதே அதிர்வுகளை மிக சிக்கலான ஒன்றுக்கு ஒன்று பொருத்தமே இல்லாத முறைப்படி நடுச்செவி எனும் பகுதியின் எலும்புகளை அடைகிறது. சம்மட்டியுரு(hammer), பட்டயுரு (anvir) மற்றும் ஏந்தியுரு (Stirrup) எனும் காது குமிழிவரை அதிர்வுகள் கடத்தப்பட்டு உள் செவியில் செவிதிரவத்தை அதிர்வடைய செய்கின்றன. இந்த அதிர்வுகள் நரம்பு மின் உந்துவிசையாக மாறி மூளையை அடையும். அங்கே மூளை இந்த அதிர்வுகளை இனம் பிரித்து அறிகிறது. என்ன ஒரு படிப்படியான செயலாக்கம்.

No description available.

ஒரு  அலைகள், உண்மையில் அனைத்து வகை அலைகளுமே மூன்று அடிப்படை குணாம்சங்கள் நிறைந்தவை. முதலாவது அலை அதிர்வெண் (Frequency) இரண்டாவது அலை நீளம் (wave Length) மற்றும் இறுதியாக அலை வீச்சு (amplitude). ஒரு குறி்ப்பிட்ட புள்ளியை ஒரு குறிப்பிட்ட கால அளவில் கடக்கும் அலைகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படுகிறது. நீங்கள்  படகிலோ, சிறு கப்பலிலோ கடலில் பயணித்தபடி இருக்கும்போது உங்களை பத்து அலைகள் ஒரு நிமிடத்தில் கடந்து சென்றால் அதிர்வெண் நிமிடத்திற்கு பத்து என்று கணக்கிடலாம். உண்மையில் அலை அதிர்வெண்ணை நொடிக்கு இத்தனை ஊசலாட்டம் என்று கணக்கிறடுகிறார்கள். ஒலி அலை அதிர்வெண் ஹெர்ட்ஸ் எனும் அலகால் குறிக்கப்படுகிறது. ஒரு வினாடிக்கு 200 ஊசலாட்டமெனில் 200 ஹெர்ட்ஸ்.

அடுத்த அலை நீளத்தை எடுத்துக் கொள்வோம். அலை என்பது அலை முகடு மற்றும் அலை பள்ளதாக்கு இவற்றால் ஆனது அல்லவா. அலை நீளம் என்பது அடுத்தடுத்த இரு அலை முகடுகள் அல்லது அலை பள்ளத்தாக்குகளுக்கு இடையிலான தூரம் ஆகும். ஒலி அலைகளின் அடிப்படை குணாதிசயம் என்னவென்றால் அலை அதிர்வெண் அதிகமாக அதிகமாக அலை நீளம் குறையும். அலைநீளம்  அதிகமாக அதிகமாக அதிர்வெண் குறையும். இந்த இடத்தில் நாம் இயற்பியலின் மிக மிக முக்கியமான அடிப்படை தொடர்புகளுக்குள் நுழைகிறோம். அதாவது ஒன்று தொடர்புடையவை. ஒரு அலையின் அலை நீளம், அதன் வேகத்தை அதிர்வெண்ணால் வகுக்கும்போது கிடைக்கும். இது மின்காந்த அலைகள். (எக்ஸ்கதிர்கள், ஒளி. அகசிவப்பு கதிர்கள், வானொலி அலைகள்), ஒலி அலைகள் நமது குளியல் தொட்டி கடல் அலை என எல்லாவற்றுக்கும் பொருந்தும் உதாரணமாக, பியானோவில் (நடு A பட்டன்) 440 ஹெர்ட்ஸ் நாததொனியின் அலை நீளம் 340 வகுத்தல் 440 அதாவது 0.77 மீட்டர் (30 இன்ச்) என கணக்கிடலாம். நாம் ஒலியின் அலை நீளத்தை மீட்டர்களிலும், ஒளியின் அலை நீளத்தை நேனோ மீட்டரிலும் கணக்கிடுகிறோம். ஒரு நேனோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் பில்லியனாவது பகுதி.

ஒலியின் வேகம் எந்த ஊடகத்தை எடுத்தாலும் அந்த ஊடகம் வழியே செல்லும்போது மாறாதது (மாறிலி) என்பதால் இதை புரிந்து கொள்வது எளிது. ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு அதிக அலைகள் இருக்க வேண்டுமானால் அவற்றின் நீளம் குறைவாக இருந்தால் மட்டுமே  அந்த கால அளவுக்குள்  பொருந்த முடியும். நேர் எதிர் விஷயமும் உண்மை. அந்த  கால அளவில் அலைகளின் எண்ணிக்கை குறைவெனில் அவற்றின் அலைநீளம் நீண்டிருக்கும்.

சரி. அலை வீச்சு (amplitude) என்பது என்ன? மீண்டும் ஒரு படகில் அமர்ந்தபடி கடலின் அலைகளை நீங்கள் காண்பதாக கற்பனை செய்யுங்கள் சில அலைகள் உயரமானதாகவும் சில உயரம் குறைவாகவும்  அலைகள் உருவாவதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் அலை நீளம் மாறாது. அலையின் இந்த குணாம்சம்தான் அலை வீச்சு என்று அழைக்கப்படுகிறது. ஒலி அலையின் அலை வீச்சு தான் அதன் அதிக சத்தம் இரைச்சல் அல்லது இதமான ஓசை என்ற ஏற்ற இறக்கத்தை தீர்மானிக்கிறது. அலை வீச்சு அதிகமாக இருந்தால் சத்தம் அதிகமாகவும் அலை வீச்சு குறையக் குறைய சத்தம் மெலிதாகும். ஏனெனில் அலை வீச்சு அதிகம் கொண்ட அலைகளுக்கு ஆற்றல் மிக அதிகம். கடலில் அலை சறுக்கு விளையாடுபவர் உங்களுக்கு எளிதில் இதை விளக்குவார். கடல்  அலை உயரமாக உயரமாக அதிக ஆற்றலை அது தனக்குள்ளே வைத்திருக்கிறது. கித்தாரின் கம்பியை எவ்வளவு வேகமாக அழுத்தமாக மீட்டுகிறீர்களோ அவற்றில் அதிக ஆற்றலை வழங்கி ஒலிச்சத்தம் அதிகமாக வெளியேற வைக்க உங்களால் முடிகிறது.

நாம் அலைவீச்சை எப்படி அளக்கிறோம். ஏற்ற இறக்க அழுத்தம் ஏற்படுத்தும்  அலைவு என்பதாக ஒலி அலைகளில் அலை வீச்சு இருந்தாலும் நாம் அதை அப்படி அளப்பது இல்லை. அதற்கு பதிலாக நாம் ஒலியின் செறிவு அல்லது ஒலிச்செறிவை வைத்து கணக்கிடுகிறோம்.  டெசிபல் என்பதே அதன் அலகு. ஒரு டெசிபல் அலை வீச்சு என்பதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்பது சிக்கலான விஷயம்.  அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு அது தேவை இல்லை. ஆனால் ஒலி சுருதி அதாவது இசை – பண் வரிசை – அளவில் உயர் சுருதியா, கீழ் சுருதியா என்பதை அலை – அதிர்வெண்தான் தீர்மானிக்கிறது. அதிர்வெண் அதிகமாக இருப்பின்  அது உச்ச ஸ்தாயி ஆகும். அதிர்வெண் குறைவாக இருப்பின் அது கீழ் ஸ்தாயி. இசையை உருவாக்க நாம் அதிர்வெண்ணை எப்போதும் கூட்டியும் குறைத்தும் தொடர்ந்து செயலாக்கி ஒலி லைகளை உருவாக்குகிறோம்.

மனித செவி ஒலியின் – வகை வகையான அதிர்வெண் வரம்புகளை கேட்கமுடியும். அதாவது 20 ஹெர்ட்ஸ் (பியானோவிலுள்ள ஆக்குறைவான அதிர்வெண் நோட் வி.5 ஹெர்ட்ஸ்) முதல் உச்சமாக 20,000 ஹெர்ட்ஸ் அதிர்வெண் வரை மனித செவியால் கேட்க முடியும். இதை வைத்து நான் என் வகுப்பறையில் செயல் விளக்கம் ஒன்றை நேரடியாக செய்வேன். வகுப்பறையில் ஒரு ஒலி – உற்பத்தி கருவி, ஒரு ஆடியோ மீட்டர் ஆகியவற்றை பொருத்துவேன்.  நாம் ஒலியை உற்பத்தி செய்யும்போதே அதன் அதிர்வெண் எவ்வளவு என்று ஆடியோ மீட்டரில் அறியலாம். தங்களது காதுகளுக்கு ஒலி கேட்கும் வரை கையை உயர்த்துமாறும், கேட்க முடியாத நிலை ஏற்பட்டதுமே கையை தொங்கவிட்டு விடலாம் என்றும் கூறுவேன். மிக மிக ஆர்வத்தோடு மாணவர்கள் பங்கேற்பதை காணலாம். அதிர்வெண்ணை மெல்ல மெல்ல கூட்டுவேன். நமக்கு வயதாக வயதாக அதிக அதிர்வெண் ஒலிகளை கேட்கும் திறன்களை நாம் மெல்ல இழக்கிறோம். எனது அதிகபட்ச அதிர்வெண் கேட்புதிறன் நடு  C பித்தானின் நான்காவது சுரம். அதாவது பியானோ இசைப்பலகையின் 4000 ஹெர்ட்ஸ் அதிர்வெண் சுருதி வரை மட்டுமே. நான் கேட்பதை நிறுத்திய நெடுநேரம் வரைக் கூட என் வகுப்பறையில் பல மாணவர்கள் கை உயர்த்தியே இருப்பார்கள். 10,000 முதல் 15,0000 ஹெர்ட்ஸ் வரை கூட கைகள் உயர்ந்தே இருப்பதை பார்த்திருக்கிறேன். அதையும் கடந்தால் பாதிபேர் கைவிழும். ஆனால் வேடிக்கை என்னவென்றால் 21,000 ஹெர்ட்ஸ் தாண்டியும்  ‘என் காது – சூப்பர் செவி’ என பிடிவாதமாக உயர்த்தி உள்ள சில ‘பாவனை’ மாணவர்களை என்ன செய்வது. நான் அந்த இடத்தில் சிறு விளையாட்டு ஒன்றை முன்னெடுப்பேன். அந்த கருவியையே அனைத்து விடுவேன். இருந்தும் 27,000 ஹெர்ட்ஸ் ஏற்றி விட்டதாக நடிப்பேன். அப்போதும் இரண்டு மூன்று பேர் கேட்கிறது என்று கை தூக்குவார்கள். சட்டென்று உண்மையை உடைத்து வகுப்பறையே சிரிக்க அந்த ரம்மிய இசையின் அதிர்வெண் அழகு!

ஆனால் அடுத்து நீங்கள் ஒலி ஒத்திசைவு (Resonance) என்பதை அறிய வேண்டும். ஒத்திசைவு எனும் விஷயம் – நிறைய நம் அன்றாட  விஷயங்களை சாத்தியமாக்குகிறது – அல்லது அது இல்லாமல் அவை நிறைவு காண்பது இல்லை. இசையில் மட்டுமல்ல, வானொலி, கடிகாரம், கழைக்கூத்தாடிகளின் கயிறு, மைதான ஊஞ்சல்கள், கணினி, ரயில் – ஹாரன், தேவாலயமணி இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கிறோமே அதில் ஆர் (Resonance) ஒத்திசைவைத்தான் குறிக்கும்.

Flache Erde oder Erdkugel – Wer profitiert von der Verschwörung?  (Erdkugelgeschichten 08) – Astrodicticum Simplex

ஒத்திசைவு என்பது உண்மையில் என்ன? ஒரு பூங்காவில் நீங்கள் குழந்தையை ஊஞ்சலாட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  வரிசையாக நான்கு ஊஞ்சல்கள் உள்ளன. மற்ற மூன்று ஊஞ்சல்களும் கூட ஒரேதடி – விட்டத்திலிருந்தே தொங்குகின்றன. அவைகளில் யாருமே இல்லை எனினும் நீங்கள் முன்னும் பின்னுமாக வரட்டும் அந்த ஒரு ஊஞ்சலின் ஊசலாட்டம் மெல்ல மற்ற ஊஞ்சல்களுக்கும் பரவுவதை நீங்கள் பார்க்கலாம். இரண்டு ஊஞ்சல்களை அடுத்தடுத்து தொங்கவிட்டு ஒன்று ஆட்டிவிட்டு ஊசலாட்ட வைக்கும்போது மற்ற ஊசலும் ஆடுவது மட்டுமல்ல. அந்த குழந்தை உள்ள ஊஞ்சலும் முதலில் உங்களுக்கு தேவைப்பட்ட விசையின் தேவை இன்றி ஒரே விரலால் லேசாக தொடும்போதே ஊஞ்சலின் ஊசலாட்டம் தொடரவும் உதவுவது ஒத்திசைவு எனும் அலை அதிர்வு ஆகும். எனவே ஒத்திசைவு இயற்பியலை, பொருத்தவரை, ஊசல், இசைக்கவடு, வயலின் கம்பி, ஒருபானம் அருந்தும் கண்ணாடி குவளை, தோல் டமாரத்தின் மேற்பகுதி, ஒரு இரும்புகம்பி, அணு, எலெக்ட்ரான், அணுக்கரு அல்லது ஒரு காற்று  நெடு வரிசை என எதிலும் உள்ள – ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் மட்டும் அதீதமாக அதிரும் தன்மையை குறிக்கிறது. இத்தகைய அதிர்வெண்கள் ஒத்திசைவு அதிர்வெண்கள் (Resonance Frequencia)  என்று அழைக்கப்படுகின்றன. ஒரு இசைக்கவடு (Tunning Fork) அதன் ஒத்திசைவு அதிர்வெண்ணோடே அதிருமாறு வடிவமைக்கப்படுகிறது. அது 440 ஹெர்ட்ஸ் ஆகும். இதுவே பியானோ கருவியின் A பித்தானின் ஒத்திசைவாகவும் உள்ளது.

கண்ணாடிக் குவளையில் ஈரவிரலால் உரசும்போது அலறலாகவும் ஒரு தேக்கரண்டியால் தட்டும்போது அதிர்வு ஒலியாகவும் இதே ஒத்திசைவு மாறுபட்டு வெளிவருகிறது. நமது குதிக்கும் கயிறான – ஸ்கிப்பிங் கயிறு – கூட ஒத்திசைவின்படிதான் காற்றில் ஆடி சுழன்று நாம் குதிக்க உதவுகிறது. ஒரு வயலினின் ரம்மியமான – துயர இசைக்கு பின்னால் ஏராளமான இயற்பியல் உள்ளது. வயலினின் இசை மூன்று விஷயங்களை சார்ந்தது. கம்பியின் நீளம் அதன் இழுப்பு விசை (Tesnsion) எனும் இறுக்கம் மற்றும் அதன் எடை, கம்பியின் நீளம் அதிகமாக இருப்பம் இறுக்கம் தளர்வுறும். கம்பி எடை அதிகமான தடிமனோடு இருந்தால் அதன் சுருதி குறைவு. இதை  அப்படியே திருப்பிப்போடலாம்.  கம்பியின் நீளம் குறைவாக… இறுக்கம் அதிகம். கம்பி மெலிதாக சுருதியும் உச்ச ஸ்தாயியை அடையும். எனவே வயலின் வித்துவான் தனது வாத்தியத்தை கையில் எடுக்கும் போதெல்லாம் தங்கள் வயலினின் இழைகளை இறுக்கம் எற்பட  கட்டி சுரட்டி இழுத்து சரியான அதிர்வெண்படி உள்ளதா என சரிபார்ப்பதை காணலாம். வயலின் இசைக்கவடு போல ஒரே அதிர்வெண்ணில் அதிர்வதில்லை. மாறாக வயலின் வாசிப்பவர் இழையை தேய்க்கும்போது அது அதற்கு ஆற்றலை வழங்கி ஒருவகை ஒத்திசையை பெற்று பல வகை அதிர்வெண்களோடும் ஒத்திசைவுகளோடும் ஒலியை பரவச் செய்கிறது…

இப்போது நாம் இசையிடமிருந்து விடைபெறலாம். ஒத்திசைவு குறித்த இயற்பியல் இசை, வகுப்பறை எடமோ இவற்றையும் கடந்த ஒன்று. நமது உணர்வு நிலை, மகிழ்ச்சி, துயரம், மன அமைதி இப்படி இசையின் ஒத்திசைவு நம் வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது வேறு விஷயம். ஒத்திசைவு – இயற்பியலை சரியாக கையாளாமல் போனதால் ஏற்பட்ட பேரழிவுகள் ஒன்றிரண்டல்ல. 1940ல் நடந்த ஒருசம்பவத்தை பார்ப்போம். இதுவரை நன்றாகதானே இருந்தது என நீங்கள் புலம்பக்கூடும். டகோமா தொங்கும் பாலம். இது ஒரு பொறியியல் அற்புதம் என்று சொல்லப்பட்டது. தொங்கு பாலங்களும் கித்தார் கம்பிகள் போலத்தான் என்பதை அது வரை உலகம்  உணரவில்லை. அந்த தொங்குபாலம் ஆடுவதை ரசிக்காமல் வண்டிகள் கடக்காது.. ஆனால் அதிர்வெண், ஒத்திசைவு என இயற்பியலை மறந்தார்கள். காற்றின் குறுக்கு பாய்வு அதிர்வினால் அதிக ஊசல்களை பெற்று பாலம் 160 வாகனங்களுடன் அந்தரத்தில் 670 அடி உயரத்திலிருந்து இரு மலைகளுக்கு இடையே பாறைகளில் சிதறியது.

இவ்வளவு ஏன் அப்போதே 1850ல் பிரான்ஸ் நாட்டில் ஆய்கர்ஸ் எனும் ஊரில் மைன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொங்கு பாலத்தில் 478 போர் வீரர்கள்… கடந்தபோது, அவர்களது லெப்ட், ரைட் எனும் ஒரே மாதிரி பாத அதிர்வுகள் – ஒத்திசைவாக பரவி அதிர்வெண் பல மடங்கு அதிகமான ஊசலாட்டு விசையை கொடுக்க பாலம் அறுந்து விழுந்தது. 200 போர் வீரர்களை ஆற்று வெள்ளம் இழுத்துச் சென்றது. அடுத்த 100 வருடங்களுக்கு பிரான்ஸ் நாடு தொங்கு பாலம் அமைப்பதையே நிறுத்தி விட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா, சீனாவில் பாலத்தை கடக்கும் ராணுவ வீரர்கள் வரிசையாக செல்லத் தேவை இல்லை என்று தனி சட்டமே உள்ளது. அவர்கள் போடும் லெப்ட், ரைட் அவ்வளவு ஆபத்தானது.

லண்டனில் 2000மாம் வருடம் கட்டப்பட்ட மில்லியம் பாலம், வண்டிகள் ஓடுவதால் ஒன்றும் ஆகவில்லை. நடைவாசிகளின் காலை நடைபயிற்சியில் அதிக அதிர்வெண் வேகம் பெற்று ஒத்திசைவு ஊசலை பல மடங்கு அதிகரிக்க இரண்டாண்டுகள் பாலத்தையே மூடினார்கள். பொறியாளர்கள் இத்தகைய ஒத்திசைவை, பக்கவாட்டு அதிர்வு எண் என்று அழைக்கிறார்கள். 2003ல்  நியூயார்க்கில் அடலோ – புரூக்ளின் அரங்கில் நடந்த புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் 11000 டிரம் பீட் நுண் பக்கவாட்டு அதிர்வுகள் ஏற்படுத்திய எதிர் – ஒத்திசைவால், பலர் முழு செவிடு ஆனார்கள். அரங்கில் 61 இடங்களில் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. காதுகளில் செவிப்பொறி எனும் கியர்ஃபோன் பயன்படுத்துபவர்கள், தொங்கு பாலங்களில் செல்ஃபி எடுக்க கூட்டமாக கூடுபவர்கள் இவர்களுக்கு  கொஞ்சம்  இயற்பியலும் தெரிந்திருப்பது நல்லது.

——-

For the Love of Physics (Book Review by bill gates)" Left: The cover of Walter  Lewin's book For the Love of Physics. … | Physics books, Physics, Spotlight  stories

(வால்டர் லெவின் – மாஸ்ச்சடசர்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் இயற்பியல் (MIT) பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் இந்தக் கட்டுரை அவரது ஃபார் திர லவ் ஆஃப் பிசிக்ஸ் (For the Love of Physics) நூலில் இருந்து எடுக்கப்பட்டது)

 

———தொடர் 1:

அறிவியல் ரீடோ மீட்டர் 1: மனிதன் நாற்ற வாயுவை வெளியேற்றுவது ஏன்? – ஐசக் அஸிமவ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்தொடர் 2:

அறிவியல் ரீடோ மீட்டர் 2:  “ஆங்.. இவன்.. அவன் ல்ல..?!” தொ(ல்)லை நோக்கி இம்சைகள் – ஆர்தர் எடிங்டன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

 தொடர் 3:

அறிவியல் ரீடோ மீட்டர் 3: “நான் சும்மா டுபாகூருப்பா போலி நோயாளிகள் ” – டாக்டர் விக்டர் பென்னட் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்தொடர் 4:

அறிவியல் ரீடோ மீட்டர் 4: “குண்டக்க மண்டக்க அறிவியல்” – ரிச்சர்டு ஃபைன்மன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்தொடர் 5:

அறிவியல் ரீடோ மீட்டர் 5: அய்யோ… முடியல்ல…. உளவியல் உளறலிசம்! – நோட் கார்னல் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்அறிவியல் ரீடோ மீட்டர் 6: நம்மள முழு கிறுக்கனாகவே ஆக்கிடு வாங்கப் போல… (நீங்கள் அணுவா… அதை பரிசோதிக்கும் கருவியா) – ஹெயின்ஸ் ஆர்.பாஜெல்ஸ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்அறிவியல் ரீடோ மீட்டர் – 7: ஏற்கெனவே வந்திட்டாங்கய்யா… வந்திட்டாங்க! – காரல் சாகன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்அறிவியல் ரீடோ மீட்டர் – 8: ஆஹா… ஒரு லூசு பய கிட்ட சிக்கிட்டோமே.. (அறிவியல் பித்து) – கே. ரெட்ஃபீல்டு ஜாமிசன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்