அயோத்தி அரசியல் (Ayodhya politics) வால்மீகி இராமாயணம் (Valmiki Ramayana) Ramar Temple இராமர் கோவில் - https://bookday.in/

அயோத்தி அரசியல்

அயோத்தி அரசியல்

-மாதா

இந்தியாவில் பல மொழிகளில் பலவித இராமாயணக் கதைகள் உள்ளன. வால்மீகி இராமாயணம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் புழங்கியது. இதில் பாலகாண்டம் முதல் உத்தரகாண்டம் வரை ஏழு காண்டங்கள் உள்ளன.

ஒன்றுக்கொன்று முரண்பட்ட இராமாயணங்கள்

அயோத்தி அரசியல் (Ayodhya politics) வால்மீகி இராமாயணம் (Valmiki Ramayana) Ramar Temple இராமர் கோவில் - https://bookday.in/

தசரத ஜாதகம் என்ற பௌத்த ராமாயணம் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் பாலி மொழியில் புழக்கத்தில் இருந்தது.
கி.பி.நூற்றாண்டுகளில் வெளிவந்த ஜைன மதத்தின் ஆரம்ப படைப்பான விமலசு+ரியின் “பத்மசரித்திரா” என்ற ராம காதை வால்மீகியின் இராமாயணத்திலிருந்து நேர் முரணாக உள்ளது. ஆதில் வரும் ராவணன் கொடூர வில்லனாக இல்லாமல், சாதாரண மனிதருள் மாவீரனாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
கம்ப இராமாயணத்தில் இராமன் கடவுள் அவதாரமாக அழகிய தமிழில் படைக்கப்பட்டுள்ளது. எழுத்தச்சன் மலையாள மொழியில் மண்ணுக்கேற்றவாறு இராமாயணம் படைத்துள்ளார்.

வால்மீகி இராமாயணத்தை சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த சி.ஆர்.சீனிவாச அய்யங்கார், இராமன் சீதையை விவாகம் செய்து பட்;டமகிஷியாக வைத்திருந்தாலும், அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்துப் “போகத்திற்கு” பல பெண்டிரை மணம் செய்துள்ளார் என எழுதியுள்ளார்.

சம்புகன் கொலை

மேலும் வால்மீகி இராமாயணத்தின் உத்தரகாண்டம் பகுதியில் சம்புகனை இராமன் கொன்ற நிகழ்வு வருகிறது. பட்டாபிஷேகத்திற்குப் பிறகு இராமராஜ்ய பரிபாலனம் எப்படி இருந்தது என்பதை சொல்லக்கூடிய பகுதி உத்தரகாண்டமாகும். கம்பர் உத்தரகாண்டத்தைப் பாடவில்லை. சம்புகன் ஒரு சு+த்திரன். தவம் செய்வதும், வேதம் ஓதுவதும் சு+த்திரன் செய்யக்கூடாது என்ற சாஸ்திர விதிகளை மீறி சம்புகன் தவம் செய்தான். ரிஷிகளும், பிராமணர்களும் வெகுண்டெழுந்து, ஒரு சு+த்திரன் தவம் செய்துகொண்டிருக்கிறான். இது மன்னிக்க முடியாததும், மரணதண்டனைக்குரிய குற்றமாகும் என அரியணையில் இருந்த இராமனிடம் முறையிட்டார்கள். இராமன் விந்திய மலைக்குச் சென்று, தவம் செய்துகொண்டிருந்த நிராயுதபாணியான சம்புகன் தலையைத் துண்டித்து “வர்ணாஸ்ரம தர்மத்தை” நிலைநாட்டினான்.

கருவுற்றிருந்த சீதையைக் களங்கமுடையவள் என ஊரார் பேச்சைக் கேட்டு காட்டுக்கு அனுப்பியதுடன், கடைசியில் ராமன் சரயு நதியில் விழுந்து உயிர் துறந்தான் என்று உத்தரகாண்டம் நிறைவுறுகிறது.

வால்மீகி இலங்கை தற்கால சிறீலங்கா இல்லை

அயோத்தி அரசியல் (Ayodhya politics) வால்மீகி இராமாயணம் (Valmiki Ramayana) Ramar Temple இராமர் கோவில் - https://bookday.in/

வால்மீகி இராமாயணத்தில் வருகின்ற இலங்கை தற்போதுள்ள சிறீலங்காதான் என அதியிட்டுக் கூறமுடியாது. இந்தியாவில் மௌரியர்கள் ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பிந்தைய காலங்களிலும் இலங்கையின் ஆதிகாலப் பெயர் இந்திய மொழிகளிலும், கிரேக்க, லத்தீன் மொழிகளிலும் “தாமிரபரணி” என்றே அழைக்கப்பட்டது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோகப் பேரரசர் தனது சாசனங்களில் தாமிரபரணியை முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் தாமிரபரணி “சிங்களம்” என்றழைக்கப்பட்டு, கி.பி. நூற்றாண்டுகளில் இலங்கை எனப் பெயர் மாற்றம் கண்டது. வால்மீகி இராமாயணத்தில் தாமிரபரணி என்றழைக்கப்பட்ட, தற்போதைய தீவுப்பகுதியான சிறீலங்காவைப் பாடுபொருளாகக் குறிப்பிட வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்போதைய சிறீலங்காவை கி.பிக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில்தான் இலங்கை என்றழைத்தார்கள். எனவே வால்மீகி தன் படைப்பில் குறிப்பிட்ட இலங்கை இந்தியாவின் வேறுபகுதியில் இருந்திருக்கலாம்.

இராமன் பிறந்த இடம் அயோத்தி இல்லை

அயோத்தி அரசியல் (Ayodhya politics) வால்மீகி இராமாயணம் (Valmiki Ramayana) Ramar Temple இராமர் கோவில் - https://bookday.in/

தசரத ஜாதகம் எனும் பௌத்த இராமாயணத்தில் இராமன் பிறந்த இடம் காசிதேசம். அயோத்தி அல்ல. அதில் சீதை இராமனுக்குத் தங்கையாகப் பிறந்து, அவளும் இலட்சுமணனும்; இராமனுடன் காட்டுக்குச் செல்லுகிறார்கள். சீதையை சிறையெடுத்தலும், அரக்கர்களுடன் யுத்தமும் பௌத்த இராமாயணத்தில் காணப்படவில்லை. இராமன் சாதாரண மனிதப் பாத்திரமாகவே படைக்கப்பட்டுள்ளார்.

வால்மீகி இராமாயணத்தில் நாயகனாக வர்ணிக்கப்படும் இராமன் மாமிசத்தையும், மதுவையும் புசித்ததாக வருகிறது. பௌத்த இராமாயணத்தில் வரும் இராமன் வேர்க்கிழங்குகளையே உண்டானென்று படைக்கப்பட்டுள்ளது. ராட்சசர்கள் நிறைந்த தண்டகாரண்யத்திற்கு வால்மீகி இராமன் போனான். பௌத்த இராமனோ ஞானிகளும், ரிஷிகளும் வசிக்கும் இமயமலைச் சாரலுக்குப் போனானென்று சொல்லப்பட்டுள்ளது.

இராமாயணம் ஒரு கட்டுக்கதை

இராமாயணம் வால்மீகியின் கற்பனையில் விளைந்த ஒரு கட்டுக்கதைதான் என்று வரலாற்று ஆய்வாளர் கே.ஏ.நீலகண்டசாஸ்திரி கூறியுள்ளார். இராமாயணம் என்பது “அரக்கர்கள்”(சு+த்திரர்கள்) என்று சொல்லப்பட்டவர்களின் ஆற்றலை அழித்து, தக்காணபீடபு+மி பகுதியில் ஆரிய ஆட்சியை நிலைநிறுத்திய ஆரிய தலைவன் இராமன்” என்று இராமாயணம் படித்தபின் முடிவுக்கு வந்தேன் என ஜவஹர்லால் நேரு தனது புகழ்பெற்ற “டிஸ்கவரி ஆப் இந்தியா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களைத்தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.(விவேகானந்தர் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் 587-589).
துளசி தாசர் (கி.பி. 1511-1623) இராமன் வாழ்க்கை வரலாறை “ராமசரித்மனாஸ்” என்ற பெயரில் படைத்துள்ளார். அதுவே துளசி இராமாயணம் என்றழைக்கப்படுகிறது. அதில் இராமன் மனித அவதாரமாக வருகிறார். “இராவண வதம்” துளசி இராமாயணத்தில் இல்லை. பின் ஏன் வடஇந்தியர்கள் இராவண வதம் கொண்டாடுகிறார்கள்? தென்னிந்தியர்கள் கீழானவர்கள் என்ற ஆரிய மேலாதிக்க சிந்தனையில் அசுரன் இராவணனின் உருவ பொம்மையை கொழுத்தி விழா எடுக்கிறார்கள்.

“ ஜெய்ஸ்ரீராம்”எனும் வெறுப்பு முழக்கம்

அயோத்தி அரசியல் (Ayodhya politics) வால்மீகி இராமாயணம் (Valmiki Ramayana) Ramar Temple இராமர் கோவில் - https://bookday.in/

அண்மைக் காலமாக “ஜெய்ஸ்ரீராம்” என்ற முழக்கத்தை எழுப்புகிறார்கள். இந்த வார்த்தை இராமாயணத்தில் எந்த இடத்திலும் வரவில்லை. 1990களில் அத்வானி ராமர் கோவில் கட்டுவதற்கு ரத யாத்திரை சென்றபோது இந்துக்களிடம் மத உணர்வைக் கிளரிவிடுவதற்காக ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை வெகுமக்களிடம் பரப்பினார்கள். ஒருவருக்கொருவர் முகமன் கூறும்போது கூட “ராம்ராம்” என்ற சொல்லை பழக்கப்படுத்தினார்கள். மதக்கலவரங்களின் போதும், மாற்று மதத்தவரை தாக்கும் போதும் ஜெய்ஸ்ரீராம் கோஷத்தைப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் “ராமர்” என்ற சொல் வீரியம்மிக்கதாகவோ, மூர்க்கத்தனமாகவோ புழக்கத்தில் இல்லை. குரங்குகளை வைத்து விளையாட்டு காட்டுகின்ற குரங்காட்டி கூட “ஆட்ரா ராமா ஆட்ரா ராமா” என்றுதான் கூறுகிறார்.

அயோத்தியில் மசு+தி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று பாபர் மசு+தியை இடித்துவிட்டு, மூன்று கிலோ மீட்டர் தள்ளி ராமர் கோவிலைக் கட்டி அதி;ல் பாலகன் வடிவில் இராமன் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். இராமன் பிறந்த இடம் அவசியமல்ல. மசு+தியை இடிப்பதுதான் முக்கியமென செயலாற்றியிருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து கூறியதுபோல இராமன் மனிதப் பிறவி என்றால் கடவுளாக முடியாது கடவுள் என்றால் அயோத்தியில்
பிறந்திருக்க முடியாது.

புனைவுகள் வரலாறு ஆகாது

பல மொழிகளில் புழங்குகிற பல ராம காதைகளில் வருகின்ற எந்தக் குழந்தை இராமனை கோவிலுக்குள் நிறுவியிருக்கிறார்கள்? மனித இராமனா? தெய்வீக இராமனா? மறைந்திருந்து வாலியைக் கொன்ற இராமனா? சம்புகனின் தலையை வெட்டி எறிந்த இராமனா? சந்தேகப்பட்டு சீதையைக் காட்டிற்;;;;;;;கு அனுப்பிய இராமனா? மது அருந்தி மாமிசம் புசித்த இராமனா? இதிகாசப் புரட்டுகளை வரலாறாகவும், புராணத்தில் வரும் நாயகர்களை வணங்கும் தெய்வங்களாகவும் மாற்றி வருகிறார்கள். புராணப் புனைவுகள் ஒருபோதும் வரலாறு ஆகாது.

இராமனை மையப்படுத்தி புனையப்பட்ட கதைகள் எதிலும் வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஒரே ஒரு இராமாயணப் படைப்புதான் உண்மை என்று நம்பிக்கொண்டிருப்பவர்பகளுக்கு, ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல ராம காதைகள் உள்ளன என்று சான்றுகள் காட்டினால் மதஅடிப்படைவாதிகளுக்கு ஆத்திரம் வருகிறது. ஒரு தத்துவ விவாதத்திற்கு வேண்டிய அடிப்படையான பொறுமையை மறுத்து, தங்களுக்குத் தோன்றிவிட்டது என்பதால் மறுபரிசீலனைக்கே இடம் தராமல், அதிலே தன்வயமான ஒரு ஆவேசத்தோடு, அறிவார்ந்து ஆராய வேண்டிய விஷயத்தை வெறும் உணர்ச்சிபு+ர்வமாக வெறி பிடித்துவிடுகிற வகுப்புவாதிகள் வெகு விரைவில் பிறரை ஆத்திரமூட்டுபவர்களாகவும், அதேபோல் ஆத்திரமடைபவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.
அதே வேளையில் புனித நூல்களையும், மதம் சார்ந்த சித்தாந்தங்களையும் வெகுமக்கள் கையாளும் போது கேள்வி கேட்கும் சிந்தனை மறைந்து, ஆய்வு மனப்பான்மை அடியோடு ஒதுங்கிவிடுகிறது. இதிகாச நூல்களின் வரிகள் சாதாதரண மனிதர்களுக்கு மிக உயர்ந்த மதிப்புமிக்கதாகத் தோன்றுகின்றன. ஆண்டவன் சொற்களை ஆராய்வதும், கேள்விக்கு உட்படுத்துவதும் தண்டனைக்குரிய செயல் எனப் போதிக்கப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட கருத்துக்கள் இன்று பொருத்தமில்லாதவைகளாக இருந்தாலும், இவற்றை யHரும் கேள்வி கேட்க மதம் அனுமதிப்பதில்லை. மேலும் காலம் காலமாக

மக்கள் கொண்டுள்ள புராண நம்பிக்கைகளையும், வரலாற்றையும் இணைத்து வெகுசாமர்த்தியமாகப் பாடப்புத்தகங்களில் பரப்புகிறார்கள். கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப்படும் இத்தகைய நிகழ்வுகள் மத அடிப்படைவாதிகளின் பலமாக மாறுகிறது.

இராமர் கோவில் ஒரு அரசியல் கட்டிடமே

அயோத்தி அரசியல் (Ayodhya politics) வால்மீகி இராமாயணம் (Valmiki Ramayana) Ramar Temple இராமர் கோவில் - https://bookday.in/

ராமர் கோவிலுக்கான இயக்கம் ஆரம்பித்த நாளிலிருந்தே அது மெய்யான மக்கள் பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புவதும், அடிப்படையில் அதிகார அரசியல் உள்ளடக்கம் கொண்டதும், எந்த வகையிலும் ஆலய வழிபாட்டுடன் தொடர்பற்ற செயல்பாடாகவும் இருந்து வருகிறது. ராமர்கோவில் கட்டுவதற்கான போராட்டமானது பாஜக முன்னெடுத்த அரசியல் இயக்கம். அதற்கும் ராமருக்கும் தொடர்பில்லை. அரசியல் வெற்றிக்காக கோவில் கட்டி கொண்டாடுவதில் எவ்வித பக்தியும் இல்லை. இந்த கோவில் கட்டும் இயக்கம் இந்து மதம் சார்ந்தது அல்ல. ஆலயம் கட்டுவது அரசியல் கட்சியின் வேலை அல்ல. அரசின் வேலையும் இல்லை. இராமன் ஒரு அரசியல் கட்சியின் அடையாளமாக மாற்றப்படுகிறார். இராமர் கோவில் ஒரு அரசியல் கட்டிடமே. உலகம் முழுக்க எங்கெல்லாம் மதவாதிகள் அரசியலதிகாரத்தில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் மதங்களுடனான சகவாழ்வும், மாபெரும் ஜனநாயக அமைப்பும் அழிந்து, பொருளாதார சீர்குலைவும் நிகழ்ந்திருக்கிறது.இந்தியாவும்அந்தபாதையில் சென்றுகொண்டிருக்கிறது..

கட்டுரையாளர் : 

மாதா

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *